Anugraham for Flower Vendor

Jaya Jaya Sankara Hara Hara Sankara – I have heard this incident beautifully narrated by Shri Ganesa Sarma. This is one of those scintillating incidents that shows our Periyava is beyond all religion, caste, and creed. What a Bhakthi Bhavam one should have to call Periyava as Appa? The miracle that Periyava did after she was longing for prasadam when Periyava hid his sthoola sareeram is really moving.  I will post a related incident in a few days but wanted to post this one so devotees can relate to that.

Many Jaya Jaya Sankara to Shri.B. Narayanan Mama for the share and translation. Rama Rama.

பூக்காரி

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் பெரியவாளை “அப்பா” என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள்.பெரி யவா “ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்கு காசு கிடைக்குமே!” என்பார். “காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்” என்பாள். பூக்காரி.

மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக் கூடாது. ஆனால், இந்தக் காமாட்சி மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம். ஏனெனில், பெரியவாளே அவளிடம், ” நீ உன் வியாபாரத்தை முடித்துக் கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு வரக் கூடாது!” என்று கட்டளை இட்டிருந்தார்.அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை 9 மணி நியூஸ் கேட்டுச் சொல்லச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருந்தாலும், உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப் போக நாழி ஆகிவிடும். அன்று, புதுக்கோட்டையிலிருந்து “ஜானா” என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை செய்து கொண்டு வந்திருந்தாள். அதைக் காலை முதல் பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப் போகு முன் கொட்டகை சென்று, தேகசுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார். அப்போது நியூஸ் படிக்கும் நாகராஜன், “இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன், என்னிடம் பெரியவா பாதுகையே இல்லை!” என்று கழட்டுவதற்குக் காத்திருந்தார். பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். பூக்காரி வந்து நமஸ்காரம் செய்தாள். பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம், “இது உனக்குத்தான், எடுத்துக்கோ!” என்றார்.

“நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!” என்று நாகராஜன் குறையோடு திரும்பினார். அப்படிப்பட்ட அன்புக்கு அந்த ஏழைப்பூக்காரி பாத்திரமாயிருந்தார். எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபாய் தரோம், இந்தப் பாதுகையைக் கொடு என்றனர். அவள் அசையவேயில்லை. பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி,வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது பழம் முதலியன போட்டுத்தான் அனுப்புவார்.அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. “அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா!” என்று புலம்பினாள். கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திவளுக்கு தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது.

இது போல் பல நிகழ்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிரத்தியட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்.

நம்பினோர் கெடுவதில்லை…..இது நான்கு மறை தீர்ப்பு.

_________________________________________________________________________________

Flower Vendor

There  was  a  flower  vendor  by  name  Kamakshi  near  the  Kanchi Matam. She  used   to  call   Periava   as  ‘APPA’ (Father).  She  would  do  ‘ArchanA’  to  PeriavA  with  one  full  basket  of  flowers  daily.  PeriavA  would  tell  her  “Why  are  you  wasting  so  much  flowers ?  If  you  sell  them,  you  will  get  some  money!”    to  which  she  would  reply,  “Is  money  so  great  Appa?  If  I  perform  ‘Archanai’  to  you  with  these  flowers,  I  would  get  much  more  than  that”.

There  was  a  rule  in  SriMatam.  If  PeriavA  goes  to  sleep,  no  one  should  wake  Him  up.  But  this  Kamakshi  was  an  exception  to  that  rule.  She  could  come  however  late  it  might  be.  Because,  PeriavA  Himself  had  ordered  her  to  come  to  Matam  only  after  finishing  her  business  and  not  in  the  middle.  Would  the  epitome  of  compassion    let  her  leave  her  ‘bread—earning’  job  for  His  sake?

On  a  particular   evening,  Periava  was  listening  to  one  Nagarajan  who  was  hearing  the  nine o’clock  news  and  conveying  it  to  Him.  Vedic  principles  apart,  He  would  not  miss  updating  Himself  with  the  goings-  on  in  the  world.  After  analyzing  the  news,  it  would  be  quite  late  when  He  went  to  sleep.  On  that  day,  a  lady  by  name  JANA  had  come  for  His  Darsan  with  a  pair  of  ‘PAdukAs’  made  of  velvet.  PeriavA   was  wearing  them  since  morning    and  had  not  removed  them  till  night.  Before  going  to  sleep  He  went  to  ‘KottAy’ (bathroom),  to  have  a  wash.  Nagarajan  who  was  reading  the  news  to  PeriavA  said  to  himself, ‘ When  PeriavA  removes  His  PAdhukAs  today,  I  will  take  them;  I  do  not  have  His  PAdukAs  at  all’  and  was  waiting for  it.  PeriavA  sat  down  without  removing  His  PAdhukA’s.  The  flower  vendor  lady  came  and  prostrated  before  PeriavA.  PeriavA  removed  His  PAdhukA’s ,  gave  them  to  her  saying,  “These  are  for  you  only;  take  them”.

Nagarajan  returned  with  a  dejected  mind  thinking, ‘when  I  think  of  something,  God thinks  otherwise’.  That  poor  flower  vendor  lady  had  such  an  immense  ‘BAgyam’ (boon)  to  have  been  blessed  by  PeriavA’s  kindness.  So  many  persons  tried  to  persuade  her  to  give  away  those  PAdukA’s  to  them  offering  as  much  as  one  lac.  Rupees,   but  she  did  not  budge.  PeriavA  had  arranged  for  all  her  needs.  He  sent  cartloads  of  items  for  the  marriages  in  her  house.

Even  after  PeriavA  attained  Sidhdhi,  she  continued  to  do  her  ‘Flower  Archanai’  in  the  ‘AdhishtAnam’  during  the  evenings.  But  when  PeriavA  was  carrying  His  body,  He  never  sent  her  back  with  an  empty  basket,  but  always  put  some  fruits  in  it.  After  His  Sidhdhi,  she  was  greatly  distressed  to  look  at  the  empty  basket.  She  cried, “AppA !  If  you  were  there,  would  you  send  me  back  with  the  empty  basket?”  Suddenly,  to  her  utter  amazement,  a  ‘Chemparuththi  flower’ (hibiscus)  fell  into  her  basket  as  if  someone  from  the  AdhishtAnam  had  thrown  it  towards  her !

Many  such  incidents  are  happening  even  in  the  present  days;  He  is  blessing  us  all  in  His  ‘Pratyaksha  Roopam’.

Those  who  believe  are  never  let  down;  This  is  the  verdict  of  the  four  VEdAs.



Categories: Devotee Experiences

Tags:

9 replies

  1. sorry I did not mention her account number. Her account No 411626260. Today only I made NEFT transfer. Beneficiary Name Koteeshwari.

  2. This morning I talked to that Pookkaris daughter. Her name is Koteeswari. I requested her to send a Poomalai to Mahaperiyava on this thursday and a poomalai to Godess Kamatshi on this Friday. I sent money to her account. She was very kind & happy to deliver to both places and send prasadams to me. She has 8 more sisters and brothers also (that I dont know). She has an account with Indian Bank, Sankara Mutt Br. Kanchipuram IFC code is IDIB000S085 HER PH 09629220548 IF any one wants her to do something for Mutt and Kamakshi temple, on birthdays, wedding days etc etc. you can offer worship to Mahaperiyava and Kanchi Kamakshi ambal through her.

  3. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

  4. Here is the continuation…ஹோமம் நடந்திருக்கு. முடிஞ்சதும் மாமா தாத்தா, ‘இனிமே கவலையில்லை. பெரியவா நூறு வருஷம் இருப்பான்னு சொல்லியிருக்கா. அது உண்மையாச்சு. What stunned me is, some one is predicting it is anthima kaalam for Periyava. His holiness is bothered about Go Hathi dhosham. Periyava’s thoughts and deeds were fenced around Dharma sastra, nothing else!

  5. I read this incident in a book. This is really touching…
    பெரியவாளுக்கு ஒரு தடவை இருதய பிரச்சினை வந்த போது, மடத்து வைத்தியர், பெரியவா இன்னும் ஏழு நாள் தான் இருப்பார்ன்னு சொல்லிட்டாராம். எனக்கு இந்த விவரம் பாலு மாமா சொல்லி தான் தெரியும். அப்ப, பெரியவா மேலகரம் சாஸ்த்ரிகளை கூட்டிண்டு வாங்கோன்னு சொல்றார். அவரும் வந்து பெரியவா நாடியை பார்த்துட்டு, வைத்தியர் சொன்னது சரிதான். பெரியவாளோட ஜாதகம் வேணும்னு கேட்கிறார். ஜாதகத்தை பார்த்துட்டு, “நான் சொல்றத பண்ணினா பெரியவா நூறு வயசு இருப்பா”ன்னு சொல்றார். ஏதோ பிரத்யேக ஹோமம் பண்ண சொல்லியிருக்கா. என்ன ஹோமம் என்று எனக்கு ஞாபகம் இல்லை. பத்து நாள் பண்ணணும். அந்த பத்து நாளும் பெரியவா என்ன பிக்ஷை பண்ணனும்னா வெறும் பசும்பால் தான், அதுவும் ஒரு பசு மாட்டுக்கு நாகமரத்து இலையும் (நாவல் பழ மரம்) தண்ணியும் மட்டும் தான் ஆகாரமா கொடுக்கணும். புல்லோ, வைக்கோலோ, தவிடோ, வேறு எதுவும் கொடுக்காம, அந்த மாட்டோட பாலை மட்டும் தான் பெரியவா எடுத்துக்கணும்ன்னு சொல்லிட்டார். பெரியவா கேக்கறா ‘வெறும் நாக இலையும் தண்ணியும் மட்டும் கொடுத்து, பசு மாட்டுக்கு ஏதாவது ஆயிடுத்துன்னா, எனக்கு கோஹத்தி பண்ணின தோஷம் வந்திடாதா?ன்னு கேக்கறார். அதெல்லாம் ஒண்ணும் ஆகாது பெரியவா, நான் பாத்துக்கறேன்னு சொல்லியிருக்கா…..

  6. Though she is blessed with a flower she could carry it safely; whereas my mother and myself during 1958 then I was 12 years old had darshan very close surprisingly He put a beads mala around my mother’s neck in a flash someone with his crowd pleaded with my mother to return it so that inturn he would return to Maha Periyava since we were ignorant we acted accordingly. However His blessings are always with us.

Trackbacks

  1. A Fascinating Experience… – Sage of Kanchi

Leave a Reply to Raja RamabadranCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading