Vasantha Navarathiri Special Drawing by Sudhan

 

Great job Sudhan….Thanks for sharing…..

 

வாழிய வாழிய வாணீ- புவி
வட்டமி யக்கிடும் ஞானக்கல் யாணீ !

வெள்ளைக் கமலத்தின் மீது – பல
வேதவி ளக்கமு ரைத்திடும் மாது !
கொள்ளை யெழில்பட நின்றாள் – திருக்
கோலத்தி லேமனத் தீமையை வென்றாள் !
உள்ளத் தொளிர்விடு கின்றாள் – மன
ஊனம் சிதைய அருள்தரு கின்றாள்
விள்ளற் கெதுவெளி தாகும் – அன்னை
வீரக் கழலில் மடமைகள் சாகும் ! (வாழிய..)

வீணை கரத்தினள் அன்னை – கவி
வித்தை கொடுத்திடும் வித்தெங்க ளன்னை !
காணற் கரியவ ளன்னை – மதிக்
கங்கில் வளர்ந்திடும் சோதியெம் மன்னை !
வாணி யெனப்பெயர் கொண்டாள் – பிழை
வந்த விடத்தில் அவற்றையும் விண்டாள்
பூணுமெய் ஞானத்தில் ஆர்ப்பாள் – அந்தப்
பூவை பதத்தில் விழுந்திடில் ஏற்பாள் ! (வாழிய..)

பாரதி தேவியின் கைகள் – இந்தப்
பாரி லறியாமை நீக்கிடும் கைகள் !
நேரிலொ ளிர்விடும் வீணை – கவி
நெய்யும் கவிஞர் உதட்டினில் சேனை !
பாரை விழித்திடு கின்றாள் – உள
பக்திகொண் டோரைப் புரந்தருள் கின்றாள் !
காரியம் வென்றிட வேண்டில் – திருக்
காவியத் தாய்பதம் சரணமு ரைப்போம் ! (வாழிய..)….நன்றி VivEk BhaRathi.



Categories: Photos

Tags:

5 replies

  1. Very nice Sudhan!

  2. Very nice Sudhanshu!

  3. Classic sketch.. excellent

  4. Stunning. Mesmerizing. If it can be coloured it would go a step further up from its present master-class version.

Leave a Reply

%d bloggers like this: