சனாதன தர்மத்திற்கு என்னைக்குமே அழிவோ, க்ஷீனமோ இல்லை

Thanks to Sri Venkatesan Ramadurai for FB share….

Mahaperiyava Blessing.jpg
ஒரு ஆசாரசீலர் பெரியவா கிட்ட போய் மிக வினயத்துடன், “பெரியவா இப்போ எல்லாம் conversion அதிகமா ஆயிண்டே இருக்கு, போற போக்க பாத்தா நம்ம தேசத்துல ஹிந்துக்கள் கொறஞ்சி மற்ற மதத்தவர் அதிகமா ஆயிடுவா போல இருக்கே.பெரியவா தான் இந்த இக்கட்டான சூழலுக்கு முடிவு காணனும்” என்று தன் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

உடனே பெரியவா “இப்போ மாட்டும் இல்ல எப்பவுமே இந்த பிரச்சனை நம் பாரத தேசத்துல உண்டு.ஆதிசங்கர பகவத் பாதாள் காலத்துல பௌத்த, ஜைன, காபாலிக உள்பட 72 மதங்கள் இருந்தது. ஆனா பகவத்பாதாள் அனைத்தையும் கண்டனம் செய்து நம் சனாதன தர்மத்தை நிலைக்கச்செய்தார். நமது சனாதன தர்மமானது யுகங்களை கடந்தது. அதற்க்கு எப்பவுமே அழிவில்லை. க்ஷீணம்(தேய்வது) ஆவதுபோல தெரியும் ஆனா எப்பவுமே நமத தர்மம் க்ஷீநிப்பது இல்லை.

மழைக்காலத்துல பனைமரத்த சுத்தி பல கொடிகள் வளரும்.அந்த கொடிகள் பனைமரத்தயே மறைக்குறா போல மரத்துமேல படர்ந்து வளரும்.ஆனா அந்த கொடிகளுக்கு ஆயிசு அதிகம் இல்ல. பலமா ஒரு காத்து அடிச்சாளோ, மழைமுடிஞ்சு வேனல்காலம் வந்தாலோ மரத்த மறைத்திருக்குற அந்த கொடிகள் எல்லாம் காஞ்சு கீழே விழுந்துடும். ஆனா பனைமரம் எந்த பாதிப்பும் இல்லாம அப்படியே இருக்கும்.

அது போலத்தான் நம் சனாதன தர்ம மதமும் பனைமரம் போல ஸ்திரமா இருக்கும். அதற்கு என்னைக்குமே அழிவோ க்ஷீனமோ இல்லை. வீணா கவலைப்படாம உன் ஸ்வதர்மத்துள இருந்து வழுவாம உனக்கு விதிக்கப்பட் நித்ய கர்மாக்களை ஒழுங்காசெய்து வா. அதுவே நீ நம் மதத்துக்கு செய்யுற மிகப்பெரிய உபகாரம்.

அனைத்தையும் காமாக்ஷி பாத்துண்டே இருக்க. எப்போ எத செய்யனும்னு அவளுக்குத்தான் தெரியும்,” என்று அருளாசி வழங்கினார்!!!



Categories: Upanyasam

3 replies

  1. ’m very happy to see Periyava’s explanation on this.

    I too had been worrying for the past few years of conversion, love jihad, pseudo-secular politics, ignoring majority but minority appeasement etc. Thankfully that great periyava himself has assured us that our Hinduism won’t be decimated.

    What more do we need.. I will be at peace henceforth after knowing this truth.

    More than other states, our Thamizh nadu has been spoiled in hinduism by pseudo-secular politics. Giving amount to other religion’s holytrips and ignoring completely hindus, utilizing temples’ funds but only one way enroute of money for other religions, minority vote bank politics, what not.

    May god gives me to follow Hinduism authentically, heartfully,

    Mahaperiyava Charanam.

    Loga samastha sugino bavanthu.

    • Vedas and Sanathan Dharma are eternal. If one gets firm conviction on these, many unwanted thoughts, confusion, and doubts disappear. As ordered by Acharya, we have to do our Nithya Karma as a duty of pouring water to the tree of Sanathan Dharma, everyday. That is the path to peace!

  2. Maha periyava saranam saranam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading