ஸ்ரீமஹாஸ்வாமி தோடகாஷ்டகம் (தமிழில்)

chicago-periyava-mar-anusham

ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்ரீமஹாஸ்வாமி தோடகாஷ்டகம் (தமிழில்)

மறை யாவையும் போற்றிடும் சற்குருவே – அருட்
சாத்திர போதமும் உணர்த்தியவா |
இறை யாவையும் ஒன்றென போற்றியவா – சசி
சேகர சங்கரரே சரணம் ||

நிறை பாரதம் முழுவதும் நடைபயின்றே – செகம்
மேவிய துயரமும் கலைந்தனவா |
நிறை பூரண குணமுடை புண்ணியமே – சசி
சேகர சங்கரரே சரணம் ||

பிறை சூடிய சந்திர மௌளிபதம் – தினம்
பூசனை செய்தருள் பூதியமே |
வகை இல்லற நல்லறம் உணர்த்தியவா – சசி
சேகர சங்கரரே சரணம் ||

இடர் யாவையும் கலிதனில் போக்கியவா – வினை
யாவையும் நீக்கிடும் சந்திரரே |
சுடர் போலருள் நாயகன் ஆதியனே – சசி
சேகர சங்கரரே சரணம் ||

நினைந் தேயுனை அனுதினம் போற்றிடினும் – நிலை
ஏகிலடும் நல்வழி சுடரொளியே |
மனை ஏகிடு நன்னிலை பேரருளால் – சசி
சேகர சங்கரரே சரணம் ||

கொடி மேலுரு நந்தியும் கொள்சிவமாய் – நிறை
நாமமும் கொண்டொரு தூயவனே |
கதி யாமிங்கு நின்பதம் நாடினமே – சசி
சேகர சங்கரரே சரணம் ||

இருள் நீக்கிட பேரொளி பொங்கியவா – எமை
காத்திடும் பெருமிறை நாயகனே |
மருள் நீக்கிட நின்பதம் போற்றிடுவோம் – சசி
சேகர சங்கரரே சரணம் ||

கலி வென்றிட தோன்றிய சங்கரரே – குரு
நாயக மாயுரு கொண்டவரே |
கிலி யில்லை யுனைதினம் துதிப்பவர்க்கே – சசி
சேகர சங்கரரே சரணம் ||

பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீ மஹா பெரியவா அபயம்!!

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை!

பெரியவா கடாக்ஷம்

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்



Categories: Bookshelf

4 replies

  1. Thanks for sharing it. We blessed to enjoy the same.

  2. Nice poem . Enjoyed it. Thanks

  3. Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Great work by Sri Saanuputhran!

  4. Absolutely Brilliant.! Thanks for the post.

Leave a Reply

%d bloggers like this: