Periyava Golden Quotes-519

தப்புப் பண்ணிவிட்டோமென்று ஒப்புக் கொள்வது கஷ்டந்தான் என்றாலும் ஒரேயடியாகப் முழுகிப் போகிற நிலை வந்தபோதாவது, ஒப்புக் கொண்டு வெளியே வரவும் மற்றவர்கள் வெளியில் இழுத்துப் போடவும் முயலத்தானே வேண்டும்? இன்னம் முழுகியே போய்விடவில்லை. அதனால்தான் இதை நான் சொல்லி, நீங்கள் கேட்டுக் கொண்டாவது உட்கார்ந்திருப்பது! கேட்டது போதாது. புயல் வருகிறது என்று Weather forecast கேட்டால் மட்டும் பிரயோஜனமில்லை. அது நம்மை பாதிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். Weather proof ஆக, தர்ம ரக்ஷையாக, கவசமாக இருப்பது பூர்விகர்களின் ஸமயாசாரம் தான். ஆகையால் இதைக் கேட்டதற்கு லக்ஷணம் இனிமேலாவது கேட்டபடிப் போவதற்குப் பிரயத்தனப்படுவதுதான்.

சிகாம் ஸூத்ரம் ச புண்ட்ரம் ச ஸமயாசாரமேவ ச |

பூர்வைராசரித: குர்யாத் அந்யதா பதிதோ பவேத் ||

பதிதபாவனன் என்று பகவானைச் சொல்கிறோம். “பதிதபாவன ஸீதாராம்” என்பதாவது காந்தியால் நின்றிருக்கிறது. அந்த ராமன் ஸகல கார்யமும் சாஸ்திரத்தைப் பார்த்துப் பார்த்தேதான் செய்தான். அந்த வழியிலிருந்து நாம் அடியோடு வழுக்கி விழுந்து பதிதர்களான பின் அவன் நம்மை பாவனப்படுத்துவது என்றில்லாமல், அவனை நாம் அவ்வளவு வேலை வாங்காமல், இப்போதிலிருந்தே நம்மை முன்னோர்களின் நெறியில் அவன் தூக்கி விட்டு ரக்ஷிக்கும்படியாகப் பிரார்த்தனை செய்வோம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Though it is difficult to admit one’s mistakes, it has to be done at least at that stage when one is drowning and others have also to be dragged out of water. It is not too late. That is the reason you are all sitting and listening to me. But it is not enough just to hear these. When the weather forecast predicts a storm, it is not enough to listen – one has to act and protect ourselves against any harm.  The traditions of our ancestors constitute the armor and talisman-they are weather proof. So those who are listening to me, should strive to follow at least now our traditions. “Shikhaam Soothram….Pathitho Bhaveth”.

We call the Bhagawan as Pathitha Paavanan. The phrase ‘Pathitha Paavana Sitaraam’ has at least been highlighted because of Gandhiji. Rama conducted his entire life without deviating from the path of virtues. Le us not trouble Him with the responsibility of rescuing us after we have morally fallen down but pray to Him to keep us in the path of virtuous conduct and protect us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading