Periyava Golden Quotes-508

album1_147
பலவிதமான ஆசாரச் சீர்திருத்தங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோமேயானால் பழைய ஒழுக்கத்தையும் காரியங்களையும் எடுத்துவிட்டுப் புதியதை வைத்தால், பழசை மீறிய பழக்கத்தில் புதிசையும் மீறிக் கட்டுப்பாடில்லாமல் போகிறார்கள். இவர்கள் காரியம் என்று பண்ணுவதெல்லாம் ஸ்வயலாபம், ‘தான்’ என்கிறதை வளர்த்துக் கொள்வது என்பதற்காகத்தான் ஆகிறது. ஆசாரங்கள் கடுமையாக இருக்கிறதென்று இளக்கி, ஃபாஷன் பண்ணினால் பலனும் இளகி ஓடியே விடுகிறது. சித்த சுத்தி ஏறப்பட மாட்டேன் என்கிறது. “கார்யத்தில் ஒன்றுமில்லை; வேதாந்தா” என்றால் வெறும் சோம்பேறியாகப் போகிறான்; அப்போது மனஸ் சுத்தமாகாமல் போகிறது என்பது மட்டுமின்றி, இருக்கிற சுத்தமும் போய் அழுக்கைச் சேர்த்துக் கொள்கிறது. ஆசாரமில்லாமலிருக்கிற அநாசாரம்; ஆசாரக் கட்டுப்பாடு போனதால் கண்டதைத் தின்பது, குடிப்பது, கலஹம் செய்வது, இன்னும் மஹாபாபங்களைப் பண்ணுவது என்கிற துராசாரம்; உள்ளொன்றும் புறமொன்றுமாக ஹிபாக்ரிஸி செய்யும் மித்யாசாரம் என்பவைதான் மொத்தத்தில் விருத்தியாகின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

In short, if we think about religious reforms, when old discipline and practices are replaced by the new, the latter are also breached because people are used to the indiscipline of giving up the traditional discipline and practices. Their actions are entirely motivated by self interest. When traditions are diluted and made fashionable the fruits are also diluted and weakened. The cleansing of the mind does not take place. When emphasis is laid on philosophy (Vedanta) and not on actions, a person becomes lazy. Then not only the mind does not get purified, it gathers more impurities.  The lack of traditional discipline results in anaachaaram (uncleaniness), the consumption of all sorts of eatables, drinking, rioting and indulgence in other greater sins. Hypocrisy or Mithyaachaaram flourishes.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading