Periyava Golden Quotes-499

album1_138

பலனை உத்தேசித்துத்தான் அநேகச் சடங்குகள் பண்ணுகிறோம். ஆனால் உத்தேசித்தபடி பணம் வரவில்லை, பிள்ளை பிறக்கவில்லை. என்ன பண்ணுகிறோம்? அப்போதைக்கு ஒரு ஏமாற்றம் உண்டாகத்தான் செய்கிறது. ஆனால் அது ஆழமாகப் போய்விடுவதில்லை. என்ன இருந்தாலும் சாஸ்திரத்தை நம்பித்தானே செய்தோம்? அந்த சாஸ்திரத்தின் ஆணிவேரான கொள்கை என்ன கர்மாப்படி நடக்கும் என்பதுதானே ஈஸ்வராநுக்ரஹ பலத்தால் அந்தக் கர்மாவை நமக்குக் கொஞ்சம் ஸாதகமாக்கிக் கொள்ளலாமென்றுதான் சாஸ்திரம் சொன்ன ஏதோ ஒன்றைப் பண்ணினோம். பலிக்கவில்லை. பலிக்காவிட்டாலும் அந்த சாஸ்திரமே நம்மை, “கர்மா! அநுபவித்துத்தானாகணும்!” என்று தேற்றிக் கொள்ளும்படி பண்ணுகிறது. நாம் எதையோ உத்தேசித்து தெய்வ ஸம்பந்தமான ஒன்றைச் செய்தோமென்றாலும், உத்தேசம் ஃபெயில் ஆனபிற்பாடும் அந்த தெய்வ ஸம்பந்தத்தையும், சாஸ்திர ஆசரணையையும் அதோடு விட்டு விடுவதற்கு மனஸு வருவதில்லை. இப்படிக் கொஞ்சங் கொஞ்சமாக நல்ல வழியிலேயே திருப்பிவிடப் படுகிறோம். நெருங்கின பந்துக்களின் ஆயுஸுக்காக எத்தனையோ பிரார்த்தனை, ஹோமங்கள் செய்து அது பலிக்காமல் பெரிய சோகம் ஏற்பட்டு விட்டது என்பதில்கூட frustrate -ஆகி [ஏமாற்றத்தில் மனம் சிதைந்து] நாஸ்திகர்களாகப் போனவர்கள் அபூர்வமாகவே இருப்பார்கள். ஆனால் இதுவே ஸோஷல் அல்லது பொலிடிகல் ரீதியில் ஒரு கார்யத்தைப் பண்ணி (கார்யம் என்றாலே இந்த நாளில் ‘போராட்டம்’தான்!) அது தோற்றுப் போனால் என்ன நடக்கிறது? “நம் கர்மா”என்று சொல்லிக் கொண்டு எவராவது பேசாமல் இருப்பார்களா? உடனே இன்னம் பெரிய போராட்டம், கிளர்ச்சி என்று ஊரை இரண்டாக்குகிறார்கள், த்வேஷம் நாளுக்கு நாள் ஜாஸ்தி தான் ஆகிறது. இது சித்தத்துக்கு அழுக்குதானே? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

We may perform religious rituals to attain progeny or earn money. We may be disappointed as we may not realize these ambitions. But the very same religion has taught us that our Karma (or actions in our past) determines our Present. So we are able to console ourselves and we do not have the heart to turn away from the religion or our tradition. When we do something with a Divine connection, we do not turn away from that path even if our actions fail to bring any result.  Thus we are propelled towards a proper direction. Even when Homams and yagnams are performed for the longevity of a close relative and the results are negative, very few will get frustrated and become atheists. But when actions are not performed without this religious element-these ‘actions’ are mostly demonstrations these days – and when they fail, nobody is prepared to accept it as their Karma. The intensity of the demonstration strengthens, there is more violence and hatred grows. This is nothing but corruption of the mind.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

3 replies

  1. Namaste. Please 10th line from bottom should be ‘are negative’ and not ‘ate negative’

  2. Plz send this quotes in English r Telugu
    I cannot understand Tamil!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading