மழை வேண்டிக் குருப்புகழ்

Thanks to Sri Suresh for this poem. Only selfless devotees like him can think about universal problems and spend time for that.

 

periyava-with-magnifier-rare

பெரியவா சரணம்.

மழை வேண்டிக் குருப்புகழ் பாடிடுவோமே! கருணாசாகரனான ஸ்ரீசரணாள் ஆனந்தம் மிகைபட மழைவளம் தந்தருள் புரிய அனைவருமாகப் போற்றிடுவோமே!

ஹர ஹர சங்கரா… ஜய ஜய சங்கர…

#குருப்புகழ்

தீதுந் தொலைந்துவிட
தேற்றித் தழைத்தருள
ஞாலந் திளைக்குமுந்த …. னருளாலே

வானந் திளைத்தருளுஞ்
சாலப் பெருமழையி
னாளுந் தழைக்குமருட் …. பதம்காண

தேம்பித் தவிக்குமன
தாற்றிக் காத்தருளு
ஞானக் குருபரனுங் …. கதிதேடி

ஞாலப் பதர்களென
நாளுந் தொழுதபடி
நேயப் பொருளுமுந்த … னடிபோற்றி

அதித் தூய்இறையு
மாகித் தரணியிதைக்
காக்குஞ் சசிசேகரப் …. பெருமானே!

காலப் பெருவினையுங்
களையுந் திருவருளில்
மாரிப் பெருவளமுந் ….. தருவாயே!

தீதுந் தொலைந்துவிட
தேற்றித் தழைத்தருள
ஞாலந் திளைக்குமுந்த …. னருளாலே

காலப் பெருவினையுங்
களையுந் திருவருளில்
மாரிப் பெருவளமுந் ….. தருவாயே!

அன்பானவர்களே!

நெற்றி வியர்வையை நிலத்தினில் விதைத்து நெல்மணி யுண்டாக்கி நம்மையெல்லாம் வாழவைத்து வரும் ஒவ்வொரு விவசாயியும் மகிழும் வண்ணமாக மழைவளம் தந்து காக்க வேண்டி பரமாத்மாவிடம் உங்கள் யாவரின் சமீபமாகவும் நின்று, உங்களோடு சேர்ந்து ப்ரார்த்திக்கின்றேன்.

குருவருள் குறையகற்றிக் காக்க தொழுதிடுவோம் சசிசேகர சங்கரப் பெருமானை!

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்‌ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.Categories: Bookshelf

Tags:

Leave a Reply

%d bloggers like this: