Periyava Golden Quotes-467

album1_101

எப்படியானாலும் ஸரி, எந்த இடத்தில் எந்த மதத்தில், கிளை மதத்தில், ஒருவன் பிறந்திருந்தாலும் அந்த இடத்திலிருந்த அந்த மதத்து, கிளை மதத்து, பூர்விகப் பெரியவர்கள் எப்படிப்பட்ட வாழ்முறையை, வாழ்க்கை நெறியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்களோ, அதுவே தனக்கான ஆசாரம் எனக் கொண்டு பின்பற்ற வேண்டும். இப்படி அவனவனும் தன்னுடைய மூதாதைகள் போன வழியில்தான் போக வேண்டும்; இல்லாவிட்டால் அவன் பதிதனாகி விடுகிறான் என்று சொல்லியிருக்கிறது.

சிகாம் ஸூத்ரம் ச புண்ட்ரம் ச ஸமயாசாரமேவ ச |

பூர்வைராசரித: குர்யாத் அந்யதா பதிதோ பவேத் ||

சிகாம்: சிகை எப்படியிருக்க வேண்டும்? துருக்கர்கள் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். ஸிக்கியர்கள் முடி, தாடி வளர்க்கிறார்கள். கிறிஸ்தவர்கள் க்ராப் பண்ணிக் கொள்கிறார்கள். ஹிந்துக்கள் குடுமி வைத்துக் கொள்வது சாஸ்திரத்தில் மந்த்ர பூர்வமாகச் சொல்லியுள்ள ஒரு சடங்கு. இதிலும் பல வித்யாஸம். சோழியன், நம்பூதிரி, சிதம்பரம் தீக்ஷிதர்கள், மற்றவர்கள் ஆகியோருக்குள் குடுமியை முடிந்து கொள்வதில் வித்யாஸங்கள் இருக்கின்றன. சிலர் ஊர்த்வ சிகை என்பதாக உச்சியில் முடிந்து கொள்கிறார்கள். சிலர் பூர்வ சிகை என்று தலைக்கு முன்பக்கமாக முடிந்து கொள்கிறார்கள். “இவற்றில் நீ பிறந்த மரபிலே எப்படி சிகை வைத்துக் கொண்டார்களோ அப்படியே நீயும் பண்ணு” என்று சாஸ்திரம் சொல்கிறது.ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

A person should follow the traditions and way of life followed by his ancestors who belonged to the religion (or a particular branch of religion) and region he had been born into. He should strictly adhere to the path set out by his ancestors, otherwise, the sastras declare, he spiritually degrades himself.

“Sikaaam Soothram Cha Pundram Cha Samayaachaarameva Cha
Poorvairaacharitaha: Kuryaath Anyathaa Pathitho Bhaveth”

How the hair should be grown? Muslims tonsure their heads. Sikhs grow their hair and beards. Christians sport a crop. It has been decreed by the Saastraas that Hindus should have a tuft-it is a prescribed religious practice. There are also many differences among the kinds of tufts (Kudumi) that a Hindu grows. It varies from sect to sect. The tufts grown by the Chozhiars, Namboothris, Chidambaram Dikshithars and others vary. Some knot it on the top of their heads, some do so on the front. Saastraas decree that, in this matter, one should follow the traditions observed in the sect one is born into. Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. It should be sootram in the first line of the slokaa.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading