Periyava Golden Quotes-466

album1_100

வெவ்வேறு மதங்களுக்கிடையிலேதான் ஆசாரங்களில் வித்யாஸம் இருக்கிறதென்றில்லை. ஒரு மதத்திலேயேகூட பல கிளை ஸம்பிரதாயங்கள் உண்டாகி மாறுபட்ட ஆசாரங்கள் இருக்கின்றன. பௌத்தத்திலேயே ஹீனயானம், மஹாயானம், Zen என்றெல்லாம் வெவ்வேறு ஆசாரங்கள் இருக்கின்றன. கிறிஸ்டியானிடியில் காதலிக், ப்ராடெஸ்டென்ட், க்ரீக் சர்ச் என்று இருக்கின்றன. இஸ்லாத்தில் ஸியா, ஸுன்னி, அஹமதீயா என்று மூன்று பிரிவு உண்டு. ஹிந்து மதத்திலும் சைவம், வைஷ்ணவம், வைதிகம், தாந்த்ரிகம் என்றெல்லாம் பல இருக்கின்றன. தேச வித்யாஸத்தாலும் ஆசார வித்யாஸம் ஏற்படுவதுண்டு. நம் தேசத்திலேயே வடக்கே குளிர்காலத்தில் ஜலமெல்லாம் ஐஸாகப் போகிற ஊர்கள் இருக்கின்றன. அதனால் அங்கே பண்டா சட்டை போட்டுக் கொண்டே பூஜை பண்ணுவான். அங்கங்கே கிடைக்கும் தான்யாதிகளைப் பொறுத்து நைவேத்யம், போஜன ஆசாரம் முதலியன கொஞ்சம் மாறும்.  – ஜகத்குரு ஸ்ரீ   சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

There are not only differences in the traditional (Aacharam) practices followed by various religions, but also among the various branches of the religion itself. Buddhism has the Mahayana, Hinayana, and Zen Sects. Christianity has the Catholic, Protestant, and Greek churches. Islam has the branches of Shia, Sunni, and Ahmedia.  Hinduism is also home to various branches like Saivam, Vaishnavism, Vaideeham, and Taantrikam. Differences in traditions also occur due to the geographical necessities. In our country, there are places in the Northern region where water gets frozen in the winter. Hence the panda or priest in such places performs puja with his shirt on.  The food or Naivedhyam traditionally offered to Bhagawan also varies depending upon the cereals or grains cultivated in the region. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara hara Sankara. Pahi Pahi sri Maha Prabho Janakiraman. Nagapattinam.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading