திருவாதிரையும் தில்லை அபிஷேகமும்!


See these high-quality photos taken on the streets of Chidambaram – thanks to elephant studios for these amazing photos!

சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தேர் திருவிழாவில் நடராஜ பெருமானனதேரில் நான்கு வீதிகளில் பக்தர்கள் பொதுமக்கள் வடம் பிடித்து வலம் வரும் காட்சியை படத்தில் காணலாம்.

சம்போ சிவசம்போ . காலை திவ்ய தரிசனம் .

Thanks to Sri DeepanRaj for a beautiful write-up about Natarajar abishekams! Mahaperiyava had talked always about Natarajar, Chidambaram, vedam all His life!

தில்லைவாழ் அந்தணர்தம் அடியாருக்கும் அடியேன்!

 

தென்பால் உகந்தாடும் தில்லை சிற்றம்பலவனாகிய நம் நடராசப் பெருமான் ஆண்டுக்கு ஆறு அபிசேகங்கள் காணுகிறார், அவற்றில் தலையாய அபிசேகம் மார்கழி திருவாதிரை

நம்முடைய ஓராண்டை ஒரு நாளாக கருதினால் ஒரு வருடத்திற்கு வரும் ஆறுபருவங்களும் ஒருநாளின் ஆறு வேளையாக கொண்டு வருடத்திற்கு ஆறுமுறை மட்டுமே நடராசருக்கு அபிசேகம் நடக்கிறது

இவற்றில்

மார்கழி திருவாதிரை, விடியல் நேர அபிசேகமாகவும்
மாசி வளர்பிறை சதுர்த்தசி, காலைநேர அபிசேமாகவும்
சித்திரை திருவோணம், உச்சிகால அபிசேமாகவும்
ஆனி உத்திரம், திருவந்திக்காப்பு அபிசேகமாகவும்
ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, முன்னிரவு அபிசேகமாகவும்
புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, நடுஇரவு அபிசேகமாகவும்கருதப்புகிறது

தில்லை நடராசப்பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிசேகம் என்பதால் தினசரி அபிசேகங்கள் சித்சபையில் இருக்கும் படிக லிங்கத்திற்கு செய்யப்படும்

இறைவன் தினப்படி அபிசேகத்தை படிகலிங்கம் வாயிலாகவும் உபசாரங்களை நடராசமூர்த்தம் வழியாகவும் ஏற்கிறான்

ஆண்டுக்கு ஆறுஅபிசேம் ஆண்டுக்கு இருபெறும் திருவிழாக்கள் என்பது வழக்கம், மார்கழி திருவாதிரையும் ஆனிஉத்திரமும் பத்து நாள் திருவிழாகவாக விமரிசையாக நடைபெறும், தில்லையில் உற்சவராகவும் மூலவராகவும் இருந்து பொதுநடம் புரியும் நடராச பெருமான் இவ்விரு விழாக்களிலும் தேரறேி வலம் வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் அபிசேகம் காணுவான்

மற்றைய நான்கு அபிசேகங்களும் சித்சபையின் முன்றிலாக இருக்கும் கனகசபையில் நடக்கும்

பத்து நாள் விழாவில் ஒன்பதாம் நாள் சித்சபையில் இருந்து பெருமான் வெளிவந்து தேரில் ஏறியதும் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு பாடியப் பின்னரே தேர் வடம் பிடிக்கப்படும்

மாலையில் தேர் நிலை அடைந்ததும் நடராசப் பெருமான் ஆலயத்தின் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளாவான் இந்த மண்டபத்தில்தான் சேக்கிழார் பெரியபுராணம் அரங்கேற்றம் செய்தார்

அன்று இரவு லட்சார்ச்சனை முடிந்ததும் நடராசர் திருமேணியை திரை போட்டு மறைத்து வைத்திருப்பார்கள்

எப்போதும் அணிமணிகளுடன் காட்சி அளிக்கும் நடராசர் இந்த அபிசேக நேரத்தில் மட்டுமே வெற்று திருமேணியராய் நம் கண்குளிர காட்சி தருவார்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் என்று அடியார்கள் விதம் விதமாக காத்துக்கிடக்கும் காட்சியை வர்ணிக்கத்தான் இயலுமோ??!!

வெளிநாட்டு அடியார்கள் கூட புடவை வேட்டி சரசரக்க பூச்சூடி திருநீறு பூசி அந்த திரை விலகாதா?? அந்த ஆனந்த கூத்தனை பாத்து விடமாட்டோமா என்று ஆர்வத்தோடு வந்து காத்திருப்பார்கள்

பொழுது புலரத்துவங்கியதும் தில்லைவாழ் அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க வேள்வி செய்து, அங்கு இறை சான்னித்யம் எழுப்பப் பெற்ற நீர்குடம் கொண்டு அபிசேகம் செய்த படியே திரை விலக்கும் போது அடியார்கள் சங்கு முதலிய கருவிகளை முழக்க, ஹர ஹரா!! ஹர ஹரா!! என்று கோஷங்கள் வானை பிளக்க தில்லை கூத்தன் காட்சி தரும் அழகை சொல்லால் வடித்து சொல்லவும் கூடுமோ!!??

தொடர்ந்து கூடை கூடையாக திருநீறு, குடம் குடமாக பால் தேன் தயிர் பஞ்சாமிருதம், பழங்கள் திரவியங்கள் என்று இறைவன் அபிசேகம் காணும் அழகை கண்டு ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று பாடாத வாய்தான் அங்கு ஏது??

நமக்கு கோயில் என்றாலே சிதம்பரம்தான், சைவத்தின் தலைமை பீடம் தில்லை

பன்னிரு திருமுறையும் பாங்குறப் பாடி மகிழும் கோயில் தில்லை

சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, இராஜசபை என்ற ஐம்பெரும் சபைகளை கொண்டது தில்லை

ஆங்கிலேயருக்கு அவர் தெய்வமாகவும் இஸ்லாமியருக்கு அவர் தெய்வமாகவும் தோன்றி “East India Company” என்ற பொறிப்பும் “உருது” எழுத்து பொறிப்பும் கொண்ட சரப்பள்ளி மாலைகளை அவர்களிடம் இருந்து காணிக்கையாக பெற்ற நம் கூத்தன் ஆடும் கோயில் தில்லை

தில்லையின் புகழ் விரிப்பிற் பெருகும் தொகுப்பின் எஞ்சும் அங்கு ஆடும் அம்பலக்கூத்தனை திருவாதிரையில் தரிசித்து மகிழ்வோம்

இயலாதவர்கள் அருகிருக்கும் சிவாலயம் சென்று நடராசர் அபிசேகம் காண்போம்

by
தீபன்ராஜ் வாழ்க்கை
📱9585756797

சிவாயநம🙏🏻

 Categories: Announcements, Bookshelf

Tags:

9 replies

 1. Superb photos! I recall nostalgically every inch of my Chidambaram, which I left 52 years back after my Schooling & PUC.

  OM NAMA SIVAYA!
  EN NADUDAIYA SIVANA POTRI!!
  EN NATTAVARKUM ERAIVA POTRI !!!
  THIRU CHITRAMBALAM!!!!

 2. Thank you sir. Rare photos and messages.. Thank you once again…!!

 3. Shivogam Shivogam Shivogam Thiruchitrambalam

 4. Excellent photos
  Ohm Nama Shivaayaa
  thanks for sharing

 5. superb photos.. thanks for sharing….
  Om Nama Shivaya

 6. Thanks a ton for sharing these absolutely amazing photos!

 7. OM NAMASIVAYA

 8. Lovely photos. Captures the entire spirit of the festival and occasion beautifully!

 9. Beautiful snaps. Thanks for sharing. It looked as if I am in car st., Chidambaram seeing the theru !

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: