Periyava Golden Quotes-433

album1_66

பல சாமி எதற்கு என்கிறார்களே, இதுவுங்கூடப் பரோபகாரம்தான் என்று நான் சொன்னால் உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கும். கண்ணுக்குத் தெரியாத லோகங்களில் மநுஷ்ய இனம் போலவே பலவித தேவ ஜாதிகள் இருக்கின்றன. துர்த்தேவதைகள், க்ஷுத்ர தேவதைகள் (சில்லுண்டி சாமிகள்) எல்லாம் இருக்கின்றன. எல்லாம் பரமாத்மா என்றாலும், [மநுஷ்யர்களான] நமக்கு எப்படி அது [அநுபவத்தில்] தெரியவில்லையோ அப்படியே இந்த தேவதைகள் பலவற்றுக்கும் தெரியாது. ஈச்வரன், விஷ்ணு, அம்பாள், பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர், ஸரஸ்வதி, லக்ஷ்மி, ஸூர்யன் இம்மாதிரி தேவதா மூர்த்திகள் பரமாத்மாவாகவே தங்களைத் தெரிந்து கொண்டும், வெளியிலே தங்களுக்கென்று ஒரு தனி ரூபம், தனியான தொழில் என்றிருக்கிற மாதிரி மற்ற எல்லா தேவதைகளும் இல்லை. அவை ஈச்வரனின் ஸர்வலோக ஸர்க்காரில் இருக்கிற கோடாநு கோடிச் சிப்பந்திகளாக மட்டுமேயிருக்கின்றன. இயற்கை, இயற்கை என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதன் ஏராளமான சக்திகளில் கொஞ்சம் கொஞ்சம் அவற்றின் த்வாரா நிர்வஹிக்கப்படுகிறது. மநுஷ்ய ஜீவர்களில் கெட்டவர்கள், நல்லவர்கள் என்று இருவிதமாகவும் இருக்கிறோமோல்லியோ? மிருகங்களிலும் துஷ்ட மிருகங்கள், ஸாதுவானவை என்று இருக்கின்றனவோல்லியோ? இப்படியே நல்ல தேவதை, துர்த்தேவதை, பெரும்பாலான ஜனங்களைப்போல நல்லதும் கெட்டதும் கலந்த தேவதை எல்லாமுண்டு. ஆராதித்தால் நல்லது செய்வது, ஆராதிக்காவிட்டால் நல்லது செய்யாமல் வெறுமனே இருப்பது, வெறுமனே மட்டுமில்லம்மால் கெட்டதே செய்வது, ஸாதவிக ஆராதனையால் ஸந்தோஷப்படுவது, ராஜஸ தாமஸ வழிபாடுகளாலேயே ப்ரிதீயுறுவது, மந்த்ரபூர்வமாகப் பிடிபடுவது, பூசாரியின் அநுஷ்டானத்தில் பிடிபடுவது என்றெல்லாம் பலவிதமான தேவ சக்திகள் இருக்கின்றன. காத்தாயி, காட்டேரி, கருப்பண்ணசாமி, வீரன், முனி, இருளன், அய்யனார் எல்லாம் இருக்கிறது. இவற்றில் ஸாத்விக ஸ்டேஜில் இருப்பவர்களுக்கு ஸாத்விக தேவதையாக இருந்து கொண்டு, தாமஸமான ஜனங்களுக்கு தாமஸமாக இருக்கிறவையும் உண்டு. நைவேத்தியத்திலும் இவற்றின் தரத்தைப் பொறுத்து வித்யாஸம் உண்டு. பலி, கிலி முதலியவற்றாலேயே த்ருப்தியாகிற தேவதைகளும் உண்டு.

நாம் மட்டும் நல்லது அடைவதற்காகத்தான் இவற்றை வழிபடுகிறோம் என்றால்தான் அது selfish. ஆனால் நம் கிராமம், ஊர், உலகம் எல்லாமே இவை த்ருப்தியாக இருந்தால்தான் நன்றாயிருக்கும் என்பதற்காக இவற்றை வழிபட்டால் அஹு லோக க்ஷேமார்த்தம் செய்கிற பரோபகாரத்தில் சேர்ந்ததுதான். இன்னம் ஒருபடி மேலே போய்ச் சொல்கிறேன். நம் சொந்த நலன், உலகத்தார் நலன் ஆயயவற்றை மட்டும் polytheism என்று ஸரியாகவோ தப்பாகவோ சொல்லப்படுகிற இந்த ‘பல சாமி பூஜை’ பூர்த்தி பண்ணுவதோடு நிற்கவில்லை. அந்த தேவதைகளின் நலனையும் பூர்த்தி பண்ணுகிறது. அவற்றில் பெரும்பாலானவை பூர்ணத்வம் பெறாதவையே என்று சொன்னேனல்லவா? அவையும் ஈச்வர ஸ்ருஷ்டியைச் சேர்ந்த ஜீவன்கள், நம்மைவிட அதிக சக்தி படைத்த ஜீவன்களானாலும் நம்மைப் போலவே அவற்றுக்கும் ஆசைகள், தேவைகள் உண்டு. அதுகளை நாம் பூர்த்தி பண்ணித் தருவதும் பரோபகாரம்தானே? – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


When I tell you that the existence of multitude of Gods in our pantheon is also motivated by philanthropy, you will be surprised. There are different kinds of Divine Forces in those worlds unknown to us, similar to the way different kinds of people populate this world. Like us, these Devathas are also unaware of the One Supreme Divine or Paramathma and have not experienced that True nature of the divine. Devatha Moorthis like Pillaiyar, Subramaniyar, Saraswathi, Lakshmi and Suryan are aware of their innate Supreme nature but have assumed a form and power unique to each of them. But the other subsidiary powers, some of them even ill willed in nature, are unaware of their true nature as manifestations of the all pervading Paramathma. They are the servants of the Paramathma. A little portion of the Forces of Nature, as we term them are managed through these Devathas.

There are good and bad ones among human beings and wild and gentle ones in the animal kingdom. Similarly there are Devathas (heavenly beings) who are evil, good and sometimes a mixture of the two as the majority of the human beings are. There are different kinds of these forces- those that can be induced to do good if they are worshipped, those who do nothing if they are not worshipped, those who do only evil, ones who are pleased with a Saathvik (peaceful or gentle) form of worship, those who are appeased by the more virulent or Thaamasaa worship, those who are entrapped by chants and those who are caught by certain rituals of the Pujari. There are forces like Kaatteri, Karuppannaswamy, Veeran, Muni, Irulan and Ayyanar. There are forces which are Saathvik to those who are Saathvik in nature and Thaamasaa in nature to those of that character. The offering of food or naivedhyam also differs in each case. There are forces which are appeased only by sacrifices.

If we worship them for attainment of our own wishes, it is selfish. But if we do so in order that our village, town and the world should be benefited that is Philanthropy. I will go one step further. This polytheism or the worship of many Gods not only takes care of our personal and social welfare.  It also benefits these Devathaas also. The majority of these Devathas have not attained complete fulfillment. They have also been created by Eshwara, the Divine Supreme. Though they have more powers than us they also have their needs and unfulfilled desires. When we appease those desires, is it not a kind of philanthropy? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading