Sri Periyava Mahimai Newsletter – April 23 2008

Adi_Sankara_Periyava


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Do not miss this incident!!

Many Jaya Jaya Sankara Hara Hara Sankara to our sathsang seva volunteer for the Tamizh typing and translation. Ram Ram

வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே!
                             ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை (23-04-2008)
                                                                     “இவரே ஆதி சங்கரர்”

(நன்றி: தரிசன அனுபவங்கள்)

சுக பிரம்மரிஷி அவர்களின் மேன்மையோடு நம்மிடையே மிக எளிமையாக தன் அவதார ரகசியத்தை சாட்சாத் பரமேஸ்வரரான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் மறைத்தும், பல சமயங்களில் அந்த ரகசியம் தானே வெளிப்பட்ட தருணங்கள் ஏராளம்!

ஸ்ரீ ஆதிசங்கரரும் ஈஸ்வர அவதாரமானதால், ஸ்ரீ மஹா பெரியவாளும் ஆதிசங்கரரும் ஒன்றே என்பதை ஜபல்பூர் நாகராஜ சர்மா அவர்களின் அனுபவம் சான்று கூறுகிறது.

புனித நர்மதை தீரத்தில் தான் காலடியில் அவதரித்த பாலகனான ஆதிசங்கரர் தன் குருவை தேடினார். குரு கோவிந்த பகவத்பாதாளிடம் சன்னியாசம் பெற்று சாஸ்திரங்களை கற்றார் ஆதிசங்கரர். அப்பேற்பட்ட இடம் நர்மதை கரை. இங்கேதான் ஒரு குகையில் குரு கோவிந்த பகவத்பாதர் தங்கியிருந்ததாக சங்கர விஜய நூல்கள் கூறுவதை ஸ்ரீ நாகராஜ சர்மா படித்துள்ளார்.

ஆனால் இந்த குறிப்பிட்ட குகை நீண்ட நெடுந்தூர நர்மதை பாயும் கரையின் எந்த இடத்தில் உள்ளதென்பதை நூல்கள் திட்டவட்டமாக கூறவில்லை. ஆதிசங்கரருக்கு பிறகு இக்குகையைப் பற்றி எவரும் சிரத்தை காட்டவில்லை.

1971-ம் ஆண்டு இதைப்பற்றி ஆராய்ந்து அந்த புனிதமான குகை எங்குள்ளது என்பதை அறிய நாகராஜன் முற்பட்டார். ஸ்ரீ சொரூபானந்த சுவாமிகள் என்ற மடாதிபதி இவருடைய இப்பணிக்கு ஊக்கம் அளித்து அபிப்ராயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். சாங்கல்காட் என்ற நதியோர குக்கிராமத்தில் இந்த குகை இருக்கலாமென்று அவர் அபிப்ராயம் கூற நாகராஜ சர்மாவும் தன் தேடலை அங்கிருந்து ஆரம்பித்தார்.

நர்மதை நதியோடு ஹிரன் என்ற ஆறு கலக்கும் இடமான சாங்கல்காட் என்ற இடத்திற்கு சங்கர்பாட் என்ற பெயரும் உண்டாம். “நர்மதை ரகசியம்” என்ற இந்தி புத்தகத்தில் நாகராஜ சர்மா ஆதி சங்கரர் இந்த சாங்கல்காட் என்ற இடத்தில் இருந்ததாக படித்ததில் அவருக்கு உற்சாகம் மேலிட்டது. அங்கு சென்றால் ஆதிசங்கரர் தன் குருவை கண்ட குகையை கண்டுபிடித்து விடலாம் என்ற ஆவலோடு புறப்பட்டார். உள்ளூர்வாசிகள் சிலரது உதவியோடு குகையை தேடலானார். நர்மதையின் மறுகரையில் அந்த குகை இருப்பதாக தெரிந்து படகில் ஆற்றைக் கடந்தனர்.

நர்மதை கரையோடு சுமார் நாலு கிலோ மீட்டர் நடந்தபிறகு ஒரு மலைமேட்டை அடைந்தனர். அங்குதான் ஒரு குகை தென்பட்டது. நதியிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அந்த குகை இருந்தது. புலி முதலான துஷ்ட மிருகங்கள் அந்த குகையில் வாசம் செய்து கால்நடைகளை தாக்கி வந்ததால் குகையின் வாயிலை பல ஆண்டுகளாக மூடியிருந்தார்கள். குகை வாயிலில் ஒரு கற்பாறை பெரிய மணிபோல் ஊசலாடியது. அதை தட்டினால் சங்க நாதம் போல் ஒலி எழுந்தது. அந்த பகுதி முழுவதுமே கல்லின்மேல் பாதங்களை அழுத்தி வைத்தால் வெங்கல நாதம் போல் கேட்டது.

அந்த குகை மிக நீளமானதென்றும், குகைக்குள் வெளிச்சம் வர மேல்புறம் துளைகள் இருப்பதாகவும் அங்கிருந்தோர் தெரிவித்தனர். இத்தனை விசேஷமான குகைதான் ஆதிசங்கரரின் சம்பந்தப்பட்டிருக்கும் என்ற உறுதியோடு நாகராஜ சர்மா அந்த இடத்திலேயே இரண்டு நாட்கள் தங்கி மேலும் சில குகைகளின் விபரங்களை சேகரித்து திரும்பினார்.

இந்த விபரங்களை தனக்கு ஆலோசனை கூறி அனுப்பிய சுவாமி சொரூபானந்தரிடம் சமர்ப்பித்தார். ஆனாலும் குறிப்பிட்ட குகை இதுவென்று தெளிவாகவில்லை.

சங்கரரும் ஷண்மதமும் என்ற ஆங்கில புத்தகத்தில் ஆதிசங்கரர் தன் குருவை சங்கர கங்கா என்ற இடத்தில் சந்தித்தார் என்று கண்டிருந்தது இந்த இடம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு மட்டுமே தெரியும் என குறிப்பிட்டிருந்தது. இதை சொன்னதும் சுவாமி சொரூபானந்தர் இவரை உடனே ஸ்ரீ பெரியவாளை காஞ்சிபுரத்தில் தரிசித்து விபரம் அறிய பணித்தார்.

தேனம்பாக்கத்தில் பல நாட்களாக ஸ்ரீ பெரியவா அருள் பொழிந்து கொண்டிருந்த சமயம் அது. ஸ்ரீ நாகராஜ சர்மா தரிசனத்திற்கு போய் நின்றபோதே ஸ்ரீ பெரியவா ஒரு அதிசயத்தை நிகழ்த்தி அருளினார். இவர் வந்திருப்பதை பார்த்ததும் ஸ்ரீ பெரியவா இவரை பிற்பாடு கூப்பிடுவதாகவும் அதுவரை நேரத்தை வீணாக்காமல் எடுத்துவந்த புத்தகங்கள், குறிப்புகள், வரைபடங்கள் முதலானவைகளை ஒரு முறை நன்றாக பார்த்து வைத்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டார்.

நாகராஜ சர்மாவிற்கு இதைக் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது. எதற்காக வந்துள்ளோம் என்பதை அங்கு யாருக்கும் அவர் தெரிவிக்கவில்லை. இந்த விஷயமாக புத்தகங்கள், குறிப்புகளோடு வந்திருப்பதையும் யாரிடமும் சொல்லவில்லை. அப்படியிருக்க மகான் எப்படித்தான் இதை கண்டு பிடித்தாரோ என்ற பிரமிப்பு மேலோங்க, பரீட்சை ஹாலுக்கு நுழையுமுன் மாணவன் படிப்பது போல ஸ்ரீ பெரியவாளின் உத்தரவுபடி எல்லா குறிப்புகளையும் ஒருமுறை அவசரமாக அசை போட்டார்.

நாகராஜ சர்மா ஆவலுடன் எதிர்பார்த்த நேரம் வந்தது ஸ்ரீ பெரியவாளுடன் நேருக்கு நேராக உட்கார்ந்து பேசும்படி வசதி செய்யப்பட்டிருந்தது.

“நீ எவ்வளவு தூரம் இதைப்பத்தி ஆராய்ந்திருக்காய்? அதைச் சொல்லு” என ஸ்ரீ பெரியவா ஆரம்பித்தார்.

இவர் தயங்கினார். மொத்த விவரங்களையும் சொல்வதென்றால் நேரமாகுமே, அங்கு தரிசனத்திற்கு காத்திருப்பவர்களுக்கு இடைஞ்சலாகுமே என அவர் எண்ணம் ஓடியது.

“ஏன் பேசாமலிருக்கே? தைரியமாச் சொல்லு. மத்தவாளைப் பத்தி கவலைப்படாதே. அவாளும் தெரிஞ்சிக்கட்டுமே” என்றார் ஸ்ரீ பெரியவா.

சுமார் இருபது நிமிடங்கள் இதைப்பற்றி விவரித்தார். நடுவில் இவர் தடுமாறிய சமயங்களில் சரிபடுத்தியும், உச்சரிப்பில் எழுந்த குற்றங்களை திருத்தியும் ஸ்ரீ பெரியவா அருளினார்.

முடிவில் சுமார் ஐந்து நிமிடங்கள் தியானத்தில் இருந்தார். தன் ஞானதிருஷ்டியால் அறிந்தவர் போல அருளுரை வழங்கினார்.

“நீ பார்த்த சாங்கல்காட் குகை நர்மதை நதியிலிருந்து தூரத்தில் இருப்பதா சொன்னாய். குகை நதியின் பக்கத்திலேயே இருக்கவேண்டும். நதியின் நீர் குகைக்குள் வர ஒரு வசதியும் இருக்க வேண்டும். ஆகையால் சாங்கால்காட் குகையாக அது இருக்க முடியாது. சொரூபானந்தர் அந்த பக்கத்துக்காரர்தானே? நான் சொன்னதை வைத்துக் கொண்டு மீண்டும் அவரையே பார்” என்றார் ஸ்ரீ பெரியவா.

சாட்சாத் ஆதிசங்கரரின் திரு அவதாரமான ஸ்ரீ பெரியவாளே அந்த குகைக்கான அடையாளங்களை சொன்னதில் நாகராஜ சர்மாவிற்கு மேலும் சில விபரங்கள் புலப்படலாயின.

ஸ்ரீ சங்கரநாராயண சாஸ்திரிகள் எழுதின “சங்கரர் காலம்” என்ற ஆங்கில நூல் கிடைத்தது. அதில் குகையைப் பற்றி மேலும் விபரங்கள் தெரிந்தன. ஆதிசங்கரரின் குரு ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரும் அவருடைய குருவும் எந்த குகையில் தங்கி தவமியற்றினார்களோ அதே குகையில்தான் ஆதிசங்கரரும் தங்கினார் என தெரிந்தது. அங்கு தான் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர் சித்தி அடைந்தார் என்றும் தெரிந்தது.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா சொன்ன அடையாளங்களை கொண்டு தேடியதில் 1978-ம் ஆண்டு சிவராத்திரியன்று அந்த குகை இருந்த இடத்தை நாகராஜ சர்மா காணும் பேரு பெற்றார்.

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ஓம்காரேஷ்வரர் ஆலயம் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ளது. கங்கை கரை விஸ்வநாதர் இறந்தபின் அளிப்பது முக்தி, ஆனால் நர்மதை கரை ஓம்காரேஷ்வரர் இருக்கும்போதே சித்தி அளிப்பவர்.

ஆதிசங்கரருக்கு இந்த தலத்தில்தான் சந்நியாசம் அளிக்கப்பட்டது. ஓம்காரேஷ்வரரிலுள்ள குகையின் வாயிலில் குரு பாதுகைகளை தரிசித்த பாலசங்கரர் திருநாவிலிருந்து குரு பஞ்சகம் உதயமாயிற்று.

அந்த குகையில் நிஷ்டையிலிருந்த ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரை திடீரென்று அங்கே புகுந்த வெள்ளத்திலிருந்த காப்பாற்ற நதிநீரைக் கமண்டலத்தில் மொண்டு நர்மதையை உடனே அடக்கினார்.

இந்த குகையில்தான் இரண்டாண்டு காலம் ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் தங்கியிருந்து குருவிடம் பயின்று பல நூல்களை இயற்றினார்.

இப்பேற்பட்ட பெருமை வாய்ந்த குகையினை ஓங்காரேஷ்வரில் தேட ஆரம்பித்தார். பல குகைகள் இருந்தன. இருந்தாலும் ஸ்ரீ காஞ்சி முனிவரின் ஞானதிருஷ்டி அருளிய அடையாளங்களை கொண்ட குகை ஒன்று தென்பட்டது.

மகான் கூறியபடி குகையிலிருந்து புனித நீரை எடுத்து வர நர்மதை நதிவரை ஒரு சுரங்கம் இருந்ததைக் கண்டதும் நாகராஜ சர்மாவிற்கு வியப்பு மேலிட்டது. ஈஸ்வர சன்னதிக்கு போய் வர ஒரு சுரங்கமும் இன்னும் இரண்டு சுரங்கங்களும் இருந்தன. இந்த குகைக்கு காளிமந்திர் என்ற பெயர். இதன் அருகிலேயே பாழடைந்த மண்டபத்தை “கோவிந்த சமாதி” என்று கூறினார்கள்.

இந்த புனித குகை ஓம்காரேஷ்வரர் ஆலயத்தை ஒட்டியிருந்தது. இதை அழகிய மண்டபமாக குருகோவிந்தரின் புத்திரரும், உஜ்ஜயினி அரசருமான ஸ்ரீ ஹர்ஷ விக்ரமாதித்யன் கட்டினார் என இன்னொரு புத்தகத்தில் தெரிந்தது.

ஆக ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் குருவை கண்டு சந்நியாசம் பெற்று இரண்டாண்டு தங்கி நூல்கள் இயற்றிய புனித குகை இதுதான் என நாகராஜ சர்மா ஆதாரங்களை சேகரித்து விட்டார்.

இருந்தாலும் மகா ஞானியாம் ஸ்ரீ பெரியவா அங்கீகரிக்க வேண்டுமே என மனதில் ஒரு குறையிருந்தது. 1979-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ஸ்ரீ பெரியவா ஹம்பியில் முகாமிட்டிருந்தபோது தரிசிக்கச் சென்றார். தேனம்பாக்கத்தில் குகையைப் பற்றி ஆரம்பித்த பேச்சு ஹம்பியில் தொடர்ந்தது.

எல்லா விவரங்களையும் கேட்டுவிட்டு, இவர் கொண்டு போன எல்லா புத்தகங்கள், நோட்டுகள் முதலானவற்றை ஸ்ரீ பெரியவா வாங்கி வரும்படி உத்தரவிட்டார். திருக்கரத்தால் ஒருமுறை எல்லாவற்றையும் தடவிப் பார்த்தார்.

சற்று நேரம் மௌனமாக இருந்த ஞானமுனிவர், நாகராஜ சர்மாவை நோக்கி தன் சிரத்தை அசைத்துக் கொண்டே குபீரென்று பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார்.

ஆதிசங்கரரே நேரில் வந்து தரிசனம் தந்து பாராட்டுவது போல நாகராஜ சர்மா பூரணமாக உணர்ந்தார். அடைந்த சந்தோஷத்திற்கு எல்லை இல்லை. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினால் அந்த குகை புனருத்தாரணம் பெற்று 1987-ல் “குகை மந்திர்” என நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது.

சாட்சாத் சங்கரரும், ஆதிசங்கர பகவத்பாதாளுமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா காக்கும் தெய்வமாய் அனைவருக்கும் சகல சௌபாக்யமும் ஐஸ்வர்யங்களையும் ஈந்து மகிழ்ச்சியையும் மனச்சாந்தியையும் அருளுகிறார்.

– கருணை தொடர்ந்து பெருகும்

(பாடுவர் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் – சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்) 

 __________________________________________________________________________

                   Vaayinaal unnai paravidum adiyen Paduthuyar kalaivaai paashupathaa paranchudare!

                                            Sri Sri Sri Maha Periyava Mahimai!  (23-04-2008) 

                                                        “He is none other than Adi Sankara”

Thanks: Darshana Experiences

Even though Sri Sri Sri Maha Periyava, a personification of Sri Parameshwara, who has the greatness as Sri Sukha Brahma Rishi, has concealed the divine secret about his incarnation, there have been multiple instances where the secret was revealed by itself!

As Sri Adi Sankara was also an incarnation of Sri Parameshwara, this experience of Sri Jabalpur Nagaraja Sharma proves that Sri Maha Periyava and Sri Adi Sankara are one and the same.

Sri Adi Sankara, born in Kaladi, searched for His guru on the banks of sacred river Narmada. Sri Adi Sankara got sanyasa from Guru Govinda Bhagavatpada and learnt all sastras from His guru. Such a prominent place is the banks of river Narmada. Sri Nagaraja Sharma had read in Sankara Vijayam that guru Govinda Bhagavatpada used to stay in a cave near there. But the book did not clearly mention the exact location of that cave. After Sri Adi Sankara, nobody bothered about this cave.

In 1971, Sri Nagaraja Sharma decided to find that holy cave. Sri Swaroopananda Swamigal encouraged Sri Nagaraja Sharma and provided valuable suggestions. Since the Swamigal told that the cave might be near a small village named Saangalghat along the banks of Narmada, Sri Nagaraja Sharma started his search from that place. In Sanghalghat, the place where river Hiran merges with Narmada was also called as Shankarpat. When Sri Nagaraja Sharma read in a Hindi book “Narmada Secrets” that Sri Adi Sankara stayed in Sanghalghat, he became enthusiastic. He immediately started with a thought that he would be able to identify the cave where Sri Adi Sankara met His guru. He started his search with the help of some local people. After understanding that the cave might be on the other side of the banks of Narmada, he started in a boat.

On the banks of Narmada, after having walked for 4 kilometers, he reached a mountain top and saw a cave. That cave was situated half kilometer from the river. As wild animals like tiger were attacking the cattle, they had closed the cave many years before. On the entrance of that cave, there was a stone hanging like a bell. When touched, it created a sound like conch.

Local people told that the cave was very long and it had openings on top for the light to come in. After hearing all this information, Sri Nagaraja Sharma became happy that this divine cave must be the one associated with Sri Adi Sankara. He stayed there for two more days and collected more information about the cave. He submitted all the information to Swami Swaroopananda. But, he could not clearly state that it was the specific cave.

In an English book named “Shankara and Shanmatha”, he read that Sri Adi Sankara met His guru in a place called Shankara Ganga and also mentioned that only Sri Maha Periyava would know that place. As soon he told this information to Swami Swaroopananda, He instructed Sri Nagaraja Sharma to have darshan of Sri Maha Periyava.

Sri Maha Periyava was camping in Thenambakkam and blessing all His devotees at that time. When Sri Nagaraja Sharma went there, he happened to experience a miracle. As soon as Sri Maha Periyava saw him, He told that He will meet him sometime later and also asked him to verify all the documents, maps and other details and be ready. Sri Nagaraja Sharma was stunned when he heard this. He did not inform the reason for his visit to anyone. With this curiosity, he also started going through all the documents and other details thoroughly like a student going inside an exam hall. Time came for Sri Nagaraja Sharma to meet Sri Maha Periyava and they had arranged to sit across and talk.

“How far have you done your research? Tell me” started Sri Periyava.

Sri Nagaraja Sharma hesitated as it would take more time for him to explain everything. He thought it would create unnecessary trouble for other devotees.

“Why are you not talking? Go ahead. Do not worry about others. Let them also hear” told Sri Periyava.

He explained everything for twenty minutes. When he got struck, Sri Periyava Himself helped him to proceed further. Finally, Sri Periyava meditated for five minutes and started talking.

“You told that Sanghalghat is far from river Narmada. Cave should be near to the river. There should also be a provision for the river water to come into the cave. So, Sanghalghat cannot be the cave. Doesn’t Swami Swaroopananda belong to that place? Go and meet Him again with this information” told Sri Periyava.

Sri Nagaraja Sharma became happy when he heard the information about that cave from Sri Maha Periyava, who is none other than the incarnation of Sri Adi Sankara. He got a book “Sankara Kaalam” written by Sri Sankara Narayana Sastrigal and found more details about the cave that Sri Adi Sankara stayed in the same cave in which His Guru Govinda Bhagavatpada and His guru did their penance.

When he continued his search with all the information that Sri Sri Sri Maha Periyava provided, finally he found the cave in 1978 on the eve of Sivarathri. Omkareshwar, one among the twelve jothirlingams, was on the banks of river Narmada. Viswanatha on the banks of Ganges grants mukthi only after death but Omkareshwara on the banks of Narmada grants mukthi even when one is alive. Sri Adi Sankara was given Sanyasa only in that place. On that cave, Sri Adi Sankara penned Guru Panchakam as soon as He saw His guru’s paduka. Also, Sri Adi Sankara saved His guru by having all the river water in his kamandalam when the river overflowed.

Sri Adi Sankara stayed in that cave for two years and learnt lot of scriptures from His guru. He found the cave which had all the identities that Sri Maha Periyava mentioned. As Sri Maha Periyava told there was an underground way to fetch water from river Narmada and another underground path to have Shiva darshan. Near that cave, which was called Kali Mandir, there was a dilapidated mandapam named “Govinda Samadhi”.

Sri Nagaraja Sharma also collected evidences that it was the cave where Sri Adi Sankara stayed for two years and wrote many books. But, he had doubts whether Sri Maha Periyava would accept his findings. He went to Sri Maha Periyava in 1979, when He was camping in Hampi.

Sri Maha Periyava listened to all the details and also ordered to bring all his research details. He touched everything with His hands. Sri Mahan went into silence for few minutes, looked at Sri Nagaraja Sharma and laughed out loud.

Sri Nagaraja Sharma felt as if Sri Adi Sankara Himself appreciated him and his happiness knew no bounds. Sri Kanchi Sankara Matam renovated this cave in 1987 as “Cave Temple” and opened it for public.

Sri Sri Sri Maha Periyava, who is none other than Sakshat Shankara and Adi Sankara, is blessing all of us with all prosperity, wealth, happiness and peace.

  • Grace will continue to flow.

(paaduvar pasi theerppai paravuvaar pinikalaivaai) Sundaramoorthy Swamigal Thevaram

periyava-mahimai-april-2008-1

periyava-mahimai-april-2008-2

periyava-mahimai-april-2008-3

periyava-mahimai-april-2008-4

 

 



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. The man who discovered the cave himself explains the experience, it’s a must watch. You could also learn a thing or two about tigers. Here is the link : https://www.youtube.com/watch?v=zxvxXsd-1g8

  2. There was another version
    that the gentleman concerned was literally made to do a full parikrama of Narmda river and was made to go back and forth seven times and finally Periava accepted the cave as the place where Sri Adisankaracharya stayed and composed many poems on various topics.
    On his seventh visit he came to Periava and got His approval and consent to declare the cave where SriAdisankara stayed.
    on return he found that the place was already occupied by local sanyasis who had started collecting money and claimed the place as theirs
    The collector had to intervene and pay Rs 50/k to get them vacated and the cave restored and named as the original abode of Adisankaracharya.
    Probably this is another version.correct me if wrong.Fact remains that finally Periava guided the person to the correct cave.

Leave a Reply to PanchapakesanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading