Bagawan Nama Mahathmiyam by Mahaperiyava

Ramar_Periyava

 

Thanks to Sri Ganapathi for sending the link and audio. Short audio clip and sweet to hear Periyava talking about bagawan nama….Don’t miss. If you pay attention, periyava says “humbleaa iru”. Let us practice that. Let us shed our ego. Let us keep chanting bagawan nama – be it Rama Nama, Shiva Nama anything…..

“நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே” னு, நாமத்தை சொல்லிண்டு இருந்தா போறும் னுட்டு, ஒரு கோடி காட்டி இருக்கா பெரியவா எல்லாரும். போதேந்த்ராள் “நீ பெரிய பரம பக்தனா இருந்தாலும் சரி, பிரபத்தி பண்ணினவனா இருந்தாலும் சரி, பெரிய நீ ஞானியா இருந்தாலும் சரி, ப்ரம்ம ஸாக்ஷாத்காரம் அடைஞ்சு சமாதியிலே நிஷ்டனா இருந்தாலும் சரி, எல்லாம் இருந்தாலும், இந்த இதுல உனக்கு ருசி, இது ஊறி ஊறி ஊறி, இந்த அம்ருதத்தை நீ பானம் பண்ணாத போனா, அதெல்லாம் ஒண்ணும் பிரயோஜனப் படாதுன்னுட்டு, கடைசீல தீர்மானம் பண்ணி,

ஆகவே இந்த ரெண்டு நாமா, ரெண்டு எழுத்து இருக்கும்படியான ராம நாமாவோ சிவ நாமாவோ எதை வேணா வெச்சுக்கோ, அப்படினுட்டு, அந்த ரெண்டு எழுத்து இருக்கே அந்த ரெண்டு எழுத்துக்கு நிறைய கிரந்தங்கள் எழுதி, இந்த ரெண்டு தான் தாரகம்னு, தாரகம்னா உன்னை தாண்ட விடறது, பாபத்துலேர்ந்து தாண்ட விடறது, சம்சாரத்துலேர்ந்து, துக்கத்துலேர்ந்து தாண்ட விடறது. துக்கத்துலேர்ந்து தாண்ட விட்டா திரும்பியும் பாபம் வரது. பாபத்துலேர்ந்து தாண்ட விட்டா போறும் நமக்கு.

“அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:” னு, உனக்கு துக்கம் வராத இருந்ததானா, ஆபத்து வராத இருந்தா துக்கம் நிவர்த்தி ஆகும் னு சொல்றதுக்கில்லை. நீ பாபம் பண்ணாம இருந்தாலே உனக்கு போறும். எத்தனை ஆபத்து வந்தாலும் ஒனக்கு துக்கம் வராது. “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” உன்னோட பாபத்துலேர்ந்து உனக்கு மோக்ஷத்தை உண்டு பண்ணிடறேன். “மா சுச:” அப்பத்தான் உனக்கு சோகம்கிறது வராது.

அப்பேற்பட்ட தாரக நாமத்தை, போதேந்த்ராள் நாம சித்தாந்தம் பண்ணி, அதை அனுசரிச்சு ஐயாவாளும், ஐயாவாள் சிவ நாமத்தை பத்தி விசேஷமாச் சொல்லி, அப்படி கொஞ்சம் மனசு லயிக்கும்படியான ஒரு மார்கத்துல பகவன்நாமாவை சொல்லிண்டு இருந்தோமானா, அது கொஞ்சம் பஜன பத்ததி னுட்டு, அந்த மாதிரி சம்ப்ரதாயம் ஏற்பட்டிருக்கு. அதான்

“ஸததம் கீர்தயந்தோ மாம் போதயந்த: பரஸ்பரம்” னு மூலத்துலேயே “அப்பா, சொல்லிண்டு இரு. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு இரு. பத்து பேரா சேர்ந்து கோஷ்டி கானம் பண்ணு.” இப்படியெல்லாம் இப்படியெல்லாம் கொஞ்சம் சாதகம் அதுக்கு. எதானு மருந்து சாப்படறதுக்கு, எதானு கொஞ்சம் ஒரு சஹாயம் ஒரு திதிப்பு கிதிப்பு அது இது குடுக்கற மாதிரி, பகவன்நாமாவுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட இருந்தா, கொஞ்சம் சுலபமா பகவன்நாமாவை, நாம வந்து அந்த அம்ருதத்தை அனுபவிக்க முடியும்கிறத்துக்காக, வேறொண்ணும் வேண்டாம் உனக்கு. அது ஒண்ணு வெச்சுக்கோ.

கடைசீ சித்தாந்தம் “நாக்கு இருக்கு, இரண்டு எழுத்து இருக்கு. சொல்லிண்டே இரு முழுக்க. அது ஒண்ணு உன்னை எல்லாத்தையும் தாண்டி விட்டுடும். பாக்கி எல்லாம் எவ்வளவு பண்ணுமோ அவ்வளவு பண்ணிடும் இது. ஏதோ நம்மால முடிஞ்சதை வேண்டாம்னு சொல்ல வேண்டாம். முடிஞ்ச வரைக்கும் நல்ல கார்யங்கள் எல்லாம் பண்ணிண்டு இருப்போம். பாக்கி பக்தியோ, ஞானமோ, சரணாகதியோ, கர்மானுஷ்டானங்களோ இதெல்லாம் பண்ணுவோம். பண்ணினாலும், அதுலேர்ந்து, நமக்கு வேறொண்ணும் அதிகாரம் இல்லியே, இது ஒண்ணு இருக்கட்டும் நமக்குன்னு, இது ஒண்ணை கெட்டியா, குரங்கு பிடியா படிச்சுண்டுறது பகவன்நாமாவை. அப்படின்னு உபதேசம் பண்ணி, அதை சித்தாந்தம் பண்ணினவர், போதேந்த்ராள்னு கடைசீ ஆசார்யாள் முந்நூறு வருஷத்துக்கு முந்தி பண்ணினார்.

அவாளுடைய அனுசரிச்சு ஐயாவாள் னுட்டு அவாளும் நிறைய்ய பக்தி பண்ணி, அவாளுக்கு கார்த்திகை அமாவாசையில தான் அவாளுக்கு கங்கை வந்துதுன்னு திருவிசைநல்லுர்ல அந்த உத்சவம் அவாளுக்கு. அதுக்கப்பறம் ஸத்குரு ஸ்வாமிகள்வாள் னு மருதாநல்லூர்ல அதை அனுஷ்டானத்துக்கு கொண்டு வந்து, எப்பவும் அந்த உஞ்சவ்ருத்தி, அப்பறம் பகவன்நாமா, அந்த கீர்த்தனைகள், அந்த புஸ்தகங்கள், அவாளுடைய போதேந்த்ராளுடைய பாதுகையை ஆராதனை பண்றதுன்னு, அந்த சம்ப்ரதாயத்துல, க்ரமம் ஒண்ணு, மடம் ஒண்ணு, அதுலேர்ந்து, பகவன் நாம சித்தாந்ததுக்காக னுட்டு, போதேந்த்ராள் பிரதான ஆச்சார்யாளாகவும், ஐயாவாளும், அப்பறம் ஸத்குரு ஸ்வாமிகள், அப்படி ஒரு பரம்பரை. இந்த போதேந்த்ராள், ஐயாவாள், ஸத்குரு ஸ்வாமிகள், இவாளோடபேரோடதான் இந்த பஜனை பத்ததில பஜனை சொல்றப்ப, இவா மூணு பேருடைய ஸ்லோகங்கள், மூணு பேருடைய கீர்த்தனைகள், இதெல்லாம் சொல்லிட்டு தான் எல்லோரும் பகவன்நாம பஜனை பண்றது, பஜனை பண்றது னு சம்ப்ரதாயமானது ஏற்பட்டு இருக்கு.

ஆகையினால நாக்கு இருக்கு. நாமம் இருக்கு. அப்பறம் பயம் ஏது?

வடக்க உத்தர தேசத்துல இந்த பஜனைங்கறது, கிருஷ்ண சைதன்ய மகாப்ரபு னுட்டு அவர் வங்காளத்துளேயும் ஒரிஸ்ஸாவிலேயும், அந்த பஜனை பத்ததி ரொம்ப விசேஷமா அங்க ஏற்பட்டது. நம்ம தஷிண தேசத்துல ஏற்பட்டது, போதேந்த்ராளுடைய, போதேந்த்ராள், ஐயாவாள் ஸத்குரு ஸ்வாமிகள், இந்த க்ரமத்துலேர்ந்து நம்ம தஷிண தேசத்துல பஜனை சம்ப்ரதாயம் ஏற்பட்டிருக்கு. வடக்க இருக்கற அந்த பஜனை பத்ததிகளும் நாம் சேர்த்துக்கறது உண்டு, எல்லாம் பகவன்நாமா தானே. அதனால அவாளுடைய கிரமமும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துண்டு பண்ணிண்டு இருக்கறது. கொஞ்சம் இதே மாதிரி பஜனை, அந்த மாதிரி பண்றது மகாராஷ்ட்ரத்துல துகாராம் அவாளெல்லாம் பஜனை பண்ணிண்டு இருந்திருக்கா. அங்கேர்ந்து உத்தர தேசத்துல மீராபாய் பஜனை பண்ணிண்டு இருந்திருக்கா. அந்த சைதன்ய மஹாபிரபு தான் உத்தர தேசத்துல நிறைய பஜனை பத்ததி ஏற்படுத்தி இருக்கார். அந்த வாசனை அடிச்சு தான் நம்ம தேசத்துலயும், இங்கேர்ந்து பஜனை பத்ததினுட்டு, இருந்தாலும் ஸ்வதந்தரமா இவா ரெண்டு மூணு பேர் மஹான்கள், நம்ம தக்ஷிண தேசத்துலேயும் அவதாரம் பண்ணி, அவா சன்யாசிகளா போதேந்த்ராள், க்ருஹஸ்தாளா ஐயாவாள், இவா பாகவத சம்ப்ரதாயமா ஸத்குரு ஸ்வாமிகள்வாள் அவா மூணு பேரும்.

ஆகையினால பகவன்நாமாங்கிறது சுலபம் நமக்கு. எப்ப நாம வேணும்னாலும் நாம உபயோகப்படுத்திக்கலாம். நமக்கு ரொம்ப சுலபமான உபாயம். நம்ம மதத்துல எல்லாம் கஷ்டமா இருக்கே, கடினமா இருக்காப்பல இருக்கே, யோகம், யோகம், த்யானம், ப்ராணாயாமம் னு பெரிய கடினமானா இருக்கு நம்ம மதத்துல அப்படீன்னு சந்தேஹமா இருந்ததானா, இதைக் காட்டிலும் சுலபமான வழியே கிடையாதுங்கறதும் நம்ம மதத்துலதான் இருக்கு. அதுனால எல்லாம் என்ன பிரயோஜனமோ அந்த பிரயோஜனம் இதுனால சுலபமா வந்துடும். ஆனா அதுல ஒரு அலக்ஷிய புத்தியா, அது தப்பு, இது தப்பு னுட்டு வெசுண்டு மாத்திரம் இருக்காதே. வெசா இந்த நாமம் போய்டும். அப்படினுட்டு நாமத்துலேர்ந்து பகவதனுக்ரகம் வீணாபோயிடும். ஒண்ணையும் வையாதே நீ. அந்தந்த மார்கத்துல அது சரி. நமக்கென்னமோ நாம ரொம்ப அல்பம், நமக்கு இதுதான் னு ரொம்ப humble ஆ இருந்துக்கோ. அப்போ இது உன்னை கடைத்தேறி விட்டுடும்.

அதுக்காக தான் “நாம அபராதா: தச” னுட்டு “நாமாஸ்தீதி நிஷித்த கர்ம விஹித த்யாகோ” னுட்டு ஸத்கர்மாவை விடறது, கெட்ட கார்யத்தை செய்யறது இதெல்லாம் பண்றேன் நான், நாமா தான் இருக்கேனு அந்த எண்ணத்துக்கெல்லாம் அஹம்பாவத்தோட போகாதே. எல்லாத்துக்கும் அடீ கீழ் படியில இரு நீ. அதெல்லாம் அவாளெல்லாம் பெரிய மஹான்கள். குடுத்து வெச்சவா. நமக்கு கதியில்லையே, நாம இந்த வழியிலே போறோம் அப்படின்னு நினச்சுக்கோ நீ, அப்படீன்னுட்டு,

“அந்த மாதிரி எல்லாம் பகவன்நாமா தான். ஆரக்கண்டாலும் நாமாவைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி உன்னுடைய க்ஷேமத்தை அடை” அப்படிங்கற மார்கத்தை போதேந்த்ராள் உபதேசம் பண்ணி அனுக்ரஹம் பண்ணி இருக்கா.

நம: பார்வதீ பதயே ஹர ஹர மஹாதேவா

[Source: http://valmikiramayanam.in/?page_id=2]

 

 



Categories: Deivathin Kural, Devotee Experiences, Upanyasam

8 replies

  1. Thank you very much for the recording of Mahaperiyava about the greatness of Bhagavan Nama, which is the simplest solution that we can put to practice.

  2. THANKS FOR SHARING THIS.MAHAPERIVA TIRUVADIGALE CHARANAM

  3. Pls translate in english Adminji…my humble request

  4. Please translate everythin in English. So I can read. Please I request admin in behalf of all devotees from north

  5. என்ன ஒரு பாக்கியம், பெரிவா வாயால இந்த மாதிரி உபதேசம் எல்லாம் கேட்க…..

  6. Hara Hara Sankara Jaya Jaya Sankara. Janakiraman. Nagapattinam.

Trackbacks

  1. Bagawan Nama Upanyasam by Sri Ganapathi – Sage of Kanchi

Leave a Reply to balaji690Cancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading