என்னடா,இவனைப் போய், பிள்ளை என்கிறே? இவன் பிராமணன் ஆயிற்றே!

Maha Periyava-9

(சுவைகளில் நகை போன்றது,  நகைச்சுவை. பெரியவாளிடம்  இந்தச் சுவை, ரத்தினக் குவியல்களாக இருக்கும்)

சொன்னவர்; டி.சுப்ரமணியன் சென்னை-93
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ராணிப்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டில் ஏராளமான அரளிச் செடிகள்.

கூடை கூடையாக மலர்கள். கனமான மாலையாகத் தொடுத்து எடுத்துக்கொண்டு போய், மூங்கில் தட்டில்
வைத்து பெரியவாளிடம் சமர்ப்பித்தோம்.

பெரியவா, அதைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு மிகவும் ரசித்தார்கள். “இந்த மாலை,ரோஜா மாலையை விட உசத்தி” என்றார்கள்.

எங்களை உற்சாகப்படுத்துவதற்காகக் கூறப்பட்ட வார்த்தைகளாக இருக்கலாம் – என்று மௌனமாக
ஏற்றுக்கொண்டோம்.

பேசிக்கொண்டிருக்கும்போதே, காமாட்சி அம்மன் வீதி உலா வந்தது. பெரியவா உடனே எழுந்து,
சாலைக்கு வந்து,காமாட்சியைத் தரிசித்துவிட்டு, அந்த அரளி மாலையை அணிவித்தார்கள்.

ஆமாம். ரோஜா மாலையைக் காட்டிலும் அரளிமாலை அம்பாளுக்கு அழகாகவே இருந்தது.

தேனம்பாக்கத்தில் வாசம். பெரியவாள் பக்தர்கள் குழு நடுவில்,நாயகனாக வீற்றிருந்தார்கள் பெரியவா.

நான் சென்று வந்தனம் செய்தேன்,அருகிலிருந்த தொண்டர், ‘துரைஸ்வாமி பிள்ளை வந்தனம் செய்யறார்”
என்று, பெரியவாள் செவியில் படும்படி கூறினார்

குறும்புத்தனமாகப் பெரியவாளிடமிருந்து பதில் வந்தது.

“என்னடா,இவனைப் போய், பிள்ளை என்கிறே? இவன் பிராமணன் ஆயிற்றே!”

சுவைகளில் நகைபோன்றது, நகைச்சுவை.பெரியவாளிடம் இந்தச் சுவை, ரத்தினக் குவியல்களாக இருக்கும்.

……………………………………………………………………………………………..

சொன்னவரின் தந்தை பெயர் – துரைஸ்வாமி அய்யர்.Categories: Devotee Experiences

3 replies

  1. Hara hara shankara

  2. Hara Hara Shankara, jaya Jaya Shankara! Maha Bhagyam for the Devotee!

  3. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Sri Maha Prbhabho Pahi Pahi. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: