வயிற்றில் சாத்துக்குடி

Thanks Smt Yogitha for sharing this article….
Periyava_Balu_mama_rare.jpg
(The above picture seems new to me – dont recall seeing before)
காஞ்சி மகான் தரிசனம், (ஸ்ரீ மடம் பாலு) புத்தகத்திலிருந்து பதிவு…)திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆஸ்திகர்கள், ஒரு பேருந்தில் ஸ்தல யாத்திரை புறப்பட்டு, கன்னியாகுமரி, திருச்செந்தூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போய் விட்டு காஞ்சிபுரம் வந்தார்கள்.

காமாக்ஷி கோயிலில் அபிஷேக நேரம். ஒரு மணி நேரம் போல் காத்திருக்க வேண்டும் என்று தெரிய வந்தது. ‘நடை திறப்பதற்குள் சங்கராச்சாரியாரைத் தரிசித்து விட்டு வரலாமே ” என்று எல்லோரும் புறப்பட்டார்கள் – ஒரு தம்பதியரைத் தவிர.

அவர் வேறு ஒரு சங்கர மடம் (பீடாதிபதி) சிஷ்யர். அதனால் ஸ்ரீ காஞ்சிப் பெரியவாவைத் தரிசனம் செய்யப் பிரியப்படவில்லை. ஆகவே, காமாக்ஷி கோயிலிலேயே தங்கி விட்டார்.

ஆனால், வெகு நேரமாகியும் ஸ்ரீ மடத்திற்குச் சென்றவர்கள் திரும்பி வராததால், வேறு வழியின்றி அவர்களைத் தேடிக் கொண்டு காஞ்சி மடத்துக்கே வந்து விட்டார்கள்.

அவர்கள் வந்த நேரத்தில், பெரியவா பூஜை முடிந்து, தீபாராதனை செய்து கொண்டிருந்தார். உத்தராங்க உபசாரங்கள் முடிந்து, பூஜையை நிறைவு செய்து, பெரியவா கீழே இறங்கி வந்து, தீர்த்தப் பிரஸாதம் கொடுக்கத் தொடங்கினார்.

கடைசியாக அந்த திருவனந்தபுர அன்பர் முறை வந்தது. அவருடைய பெயரைக் கூறி, அவருடைய தகப்பனார் கோத்திரம், அவர்கள் வீட்டின் அமைப்பு, தோட்டம் உட்பட சகல விஷயங்களையும் பெரியவாளே கூறினார்கள்.

இவ்வளவையும் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒரு சாத்துக்குடியைத் தன் வயிற்றின் மேல் உருட்டிக் கொண்டே இருந்தார் பெரியவா.

அந்த அன்பருடன் சுமார் ஒரு மணி நேரம் பேசி விட்டு, பிரஸாதமாக அந்த சாத்துக்குடியைக் கொடுத்தார்.

அன்பருக்கு, வயிற்றுப் புண் (பெப்டிக் அல்சர்) மருத்துவர் ஆலோசனைப்படி அவர் இருபது நிமிஷங்களுக்கு ஒரு முறை ஏதாவது சாப்பிட்டு விட்டுத் தண்ணீர் குடிக்க வேண்டும். பெரியவாவிடம் பேசிக் கொண்டிருந்ததால், ஒரு மணி நேரம் எதுவும் சாப்பிட வில்லை.

பிரஸாதம் பெற்றுக் கொண்டு வெளியே வந்ததும், அவசர அவசரமாக சாத்துக்குடியை உரித்துச் சாப்பிட்டார். அதன் பிறகு அல்சரையும் காணோம், வலியையும் காணோம். பின்னர் ஸ்ரீ மடத்தின் அத்யந்த சிஷ்யர் ஆனார், திருவனந்தபுரத்துக்காரர்….

ஜகத் குரு நம் பெரியவா!Categories: Devotee Experiences

1 reply

  1. Thanks for sharing

Leave a Reply

%d bloggers like this: