காமாக்ஷி கீதோபதேஸம் பண்ணினதா சொல்றது, ஸெரியில்லன்னு தோண்றதோ…?

Thanks to Smt Meena Raghu for sharing this…Never read this before..

[Mylapore Dr Krishnamoorthi Sasthrigal தன் அனுபவமாக எழுதியதை மாற்றி எழுதியிருக்கிறேன்]

தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருந்த ஸமயம். அன்று, குரு ஆராதனை நாள்! 
மத்யானம் ரெண்டு மணிக்கு, பெரியவா…. அங்கிருந்த குளத்தின் ஜலத்தில் உள்ள ஜீவராஸிகளுக்காக, ப்ரத்யேகமாக, தன்னுடைய ஒரு பாதத்தை ஜலத்துக்குள் வைத்துக் கொண்டு, குளக்கரையில் அமர்ந்து இருந்தார்.

பெரியவாளின் அத்யந்த பக்தரான, மைலாப்பூர் டாக்டர் க்ருஷ்ணமூர்த்தி ஶாஸ்த்ரிகளும் அன்று ஆராதனையில் ஒரு ப்ராஹ்மணராக வரிக்கப்பட்டிருந்தார். புது வஸ்த்ரம் கட்டிக்கொண்டு உள்ளே போக இருந்தவரை, பெரியவாளின் “சொடக்கு” அழைத்தது! 
பெரியவாளிடம் ஓடினார்!

“ஒரு பேப்பர், பேனா எடுத்துண்டு வந்து… இங்க ஒக்காரு!…….”

ஓடிப்போய் பேப்பர், பேனா ஸஹிதம், பெரியவாளுக்கருகில் பவ்யமாக அமர்ந்தார் க்ருஷ்ணமூர்த்தி ஶாஸ்த்ரிகள்.

அழகான ஸம்ஸ்க்ருதத்தில் ஒவ்வொரு வார்த்தையாக வாக்தேவியின் வாக் அம்ருதம் பொழிந்தது….! எழுதிக்கொண்டே வந்தார் ஶாஸ்த்ரிகள். சில இடங்களில் அர்த்தத்தை மட்டும் சொல்லி, அதற்கான ஸம்ஸ்க்ருத வார்த்தையை, ஶாஸ்த்ரிகளையே சொல்லச் சொல்லி, எழுதச் சொன்னார்.
எழுதி முடித்ததும் பார்த்தால்…….அருமையான ஸ்துதியாக “துர்க்கா பஞ்சரத்னம்” உருவாகியிருந்தது!

[ஸ்ரீமதி M.S. ஸுப்புலக்ஷ்மியின் அம்ருதமான ஸாரீரத்தில், நாம் கேட்டு மகிழும் துர்க்கா பஞ்சரத்னம். ஒவ்வொரு ஸ்லோகமும் “மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதாத்ரி” என்று முடியும்படியாக இருக்கும். காஞ்சியில் காமாக்ஷி கோவிலில் ஸன்னதிக்கு வெளியே பளிங்குக் கல்லில் இந்த ஸ்லோகம் பொறிக்கப்பட்டுள்ளது]

அதில் ஒரு இடத்தில் பெரியவா, “உபதிஷ்ட கீதா” என்று, பெரியவா… கூறினார்.

அம்பாளை பார்த்து…”நீ.. கீதையை உபதேஸித்தவள்” என்று கூறுவதாகும். ஶாஸ்த்ரிகள் எழுதிக் கொண்டே வந்தபோது, “உபதிஷ்ட கீதா” என்று பெரியவா சொன்னதும், கொஞ்சம் யோஜித்தார்.

“ஏன்?….ஒனக்கு.. காமாக்ஷி கீதோபதேஸம் பண்ணினதா சொல்றது, ஸெரியில்ல…ன்னு தோண்றதோ…?” சிரித்துக் கொண்டே கேட்ட ஜகத்குருவுக்கு, சிரிப்பையே அர்ப்பணித்தார் ஶாஸ்த்ரிகள்.

பக்கத்திலிருந்த பாரிஷதரிடம், “கீதா பாஷ்யத்த…. கொண்டா…..”

எட்டு உரைகளோடு கூடிய கீதா பாஷ்யம் புஸ்தகம் வந்தது! பெரியவா அதை, ஒரு குழந்தையைத் தூக்குவது போல் தூக்கி, அதை நளினமாகப் புரட்டியதும், முதல் திருப்பலிலேயே….ஏதோ ஒரு பக்கம் “காத்திருக்கிறேன்! ஜகத்குரோ!” என்பது போல், பெரியவாளுக்கு வேண்டிய விஷயத்தை தந்தது!

ஶாஸ்த்ரிகளிடம் அந்தப் பக்கத்தை காட்டி,

“இந்த ஸ்லோகத்தையும், அதோட பாஷ்யத்தையும் படி…”

“ப்ரஹ்மணோஹி ப்ரதிஷ்டாஹம்……..மாறாத, அழியாத ப்ரஹ்மத்துக்கு, ஶக்தியான மாயைதான், ப்ரதிஷ்டை! [எதனால் ப்ரஹ்மமானது… பலவித உலகமாகப் பரவுகிறதோ, அது, ப்ரதிஷ்டை எனப்படுகிறது]

அது நான்! நானே ப்ரஹ்மம்! நானே அதன் ப்ரதிஷ்டை என்பதும்
பொருந்தும். 

ஏனென்றால், “ஶக்தி ஶக்திமதோ: அபேதாத்” [ஶக்தியும், அதை உடையவனும் வேறுபட்ட தத்துவமில்லை] என்று பாஷ்யம் உள்ளது……”
பெரியவா அழகாக சிரித்துக்கொண்டே…சொன்னார்…

“காமாக்ஷிதான… ப்ரஹ்மத்தோட ஶக்தி? ‘த்வமஸி பரப்ரஹ்ம மஹிஷி’! ஶக்திதான… ப்ரஹ்மம்? அதுனால, கீதையை காமாக்ஷி உபதேஸிச்சா…உபதிஷ்ட கீதா…..ன்னு சொல்றது ஸெரிதான?….”

பெரியவாளை ரஸிப்பதா? பெரியவாளின் அம்ருதமயமான பாஷ்யத்தை ரஸிப்பதா? என்று ஶாஸ்த்ரிகள் மெய்மறந்த நிலையில் இருந்தபோது, யாரோ ஒருவர் வந்து, ஆராதனை ப்ராஹ்மணரான ஶாஸ்த்ரிகளை உள்ளே அழைப்பதாக சொன்னார்.

“தோ…பாரு! இங்க பெரிய ஶாஸ்த்ர விசாரம் நடக்கறது…..  முடிஞ்சுதான் வருவான்…போ!”

பெரியவாளே பதில் சொல்லி, வந்தவரை அனுப்பிவிட்டார். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் “துர்க்கா பஞ்சரத்னம்” அலசி ஆராய்ந்து உருவானது!
பஞ்சரத்னத்தில், நான்கு ரத்னங்கள்தான் பிறந்திருந்தது…!

“அஞ்சாவது ஸ்லோகத்தை, இதே… மாதிரி நீ.. எழுது ஒடன்…னே…..ஸாப்படறதுக்குள்ள…”

“பெரியவா….எழுதினதை, நா…..பூர்த்தி பண்றதா? எனக்கு ஸ்லோகம்-ல்லாம் வராதே பெரியவா!..”

“எல்லாம் வரும்!..போ!…”

நமஸ்காரம் பண்ணிவிட்டு, ஆராதனைக்குப் போனார் ஶாஸ்த்ரிகள். பிறகு ஆராதனை போஜனம் ஆரம்பித்தது.

இந்த போஜன இடத்துக்கு, பெரியவா வந்த “அழகை” கல்பனையில் கண்டு ரஸிப்போம்… [நினைத்து நினைத்து சிரித்து ரஸிக்கும்படியான அழகு!]
பழைய தேனம்பாக்கம் கட்டிடத்தில் ரெண்டு பாகமாக, 16+16 என்று ப்ராஹ்மணர்கள், போஜனத்துக்கு அமர்ந்திருந்தனர்.

ஒரு பக்கத்தில் கடைஸியாக ஶாஸ்த்ரிகள் அமர்ந்திருந்த இடத்துக்கு பக்கத்தில், ஒரு சுவர். அதன் அடிபாகத்தில் சதுரமான ஒரு த்வாரம் இருந்தது.

எனவே, யாராக இருந்தாலும், அந்த ரூமுக்குள் வருவதற்கு ரூமின் வாஸல் வழியாகத்தான் வரமுடியும். திடீரென்று ஶாஸ்த்ரிகள் பக்கத்தில் உள்ள சுவற்றின், சதுரமான த்வாரம் வழியாக, “ஜகத்குரு” தன் தலையையும், தண்டத்தையும் நுழைத்துக்கொண்டு, மெதுவாக தன் முழு ஶரீரத்தையும் அந்த த்வாரம் வழியாகவே நுழைத்துக் கொண்டு “ஜங்”கென்று ஶாஸ்த்ரிகள் முன்னால் நின்றார்! இது என்ன எளிமை ! குழந்தைத்தனம் ! 

ஶாஸ்த்ரிகளுக்கு இந்த “ஶிவத்வார்” …மறக்கவே முடியாத தர்ஶனமாக அமைந்தது!

வெளியே வந்து நின்றதுமே…..

“என்ன? அஞ்சாவுது ஸ்லோகம் வந்துதா?….”

“இல்ல……பெரியவா”

உடனே அங்கேயே ஐந்தாவது ஸ்லோகத்தை ரெண்டு தடவை கூறிவிட்டு,

“ஞாபகமா, நாலு ஸ்லோகத்தோட, இதையும் சேத்து எழுதிக் குடுத்துடு”……

அணோரணீயான், மஹதோ மஹீயான்…..!

1942-43-ல் பெரியவா… வேலூரில் உள்ள, திருப்பதி தேவஸ்தான பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்தார். ஒருநாள், ஸ்ரீமடத்தின் மானேஜர், எதற்கோ பெரியவாளின் உத்தரவைக் கேட்க வேண்டி, ஒவ்வொரு வகுப்பறையாக பெரியவாளை தேடி கொண்டே போனார். ……

அங்கே ஒரு ரூமில் கதவு லேஸாக திறந்திருந்தது!

உள்ளே எட்டிப்பார்த்தார் மானேஜர்!

ஆஶ்சர்யம்! அவருடைய மேனியெல்லாம் புளகாங்கிதம் அடைந்தது!
பெரியவா…. பூமிக்கு மேலே ரெண்டடி உயரத்தில், அந்தரத்தில் உட்கார்ந்திருந்த நிலையில், ஸமாதியில் இருந்தார் !

மூச்சுக்கூட விடாமல், திரும்பி வந்துவிட்டார் மானேஜர்.

இப்படிப்பட்ட ஸித்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பெரியவா, சுவற்றின் ஓட்டை வழியாக வந்தது, நமக்காகவே! ஸதா அந்த காக்ஷியை மானஸீகமாக நினைத்து நினைத்து ஆனந்தப்படத்தான்! க்ருஷ்ணன் உரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்ததை இன்று வரை எண்ணியெண்ணி ஸந்தோஷப்படுகிறோமே! அப்படித்தான்

துர்க்கா பஞ்சரத்னம்

Thwameva Devim swagunir nekutam
Thwameva Sakthi Parameshwarisya
Mam pahi sarveshwari Moksha datri. 1

தேத்யான யோகானுகதபஶ்யன் |த்வாமேவ தேவீம் ஸ்வகுணைர் நிகூடாம் |
த்வமேவ ஶக்தி பரமேஶ்வரஸ்ய | மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதாத்ரி ||

Devatma sakthi sruthivakya gita
Maharshilokasya pura prasanna
Guha param vyoma sada prathista
Mam pahi sarveshwari Moksha datri. 2

தேவாத்ம ஶக்தி ஶ்ருதிவாக்ய கீதா | மஹர்ஷிலோகஸ்ய பூர ப்ஸன்னா |
குஹாபரம் வ்யோம ஸதா ப்ரதிஷ்டா | மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதாத்ரி ||

Paraasyasakthi vividaiga sruyasay
Swethashwa vakyothitha devi durge
Swabavikii gyana palakriya
Mam pahi sarveshwari Moksha datri. 3

பராஸ்ய ஶக்தி விவிதைக ஶ்ரூயஸே | ஸ்வதாஶ்வ வக்யோதித தேவீ துர்கே |
ஸ்வாபாவிகீ ஞான பலக்ரியா |மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதாத்ரி ||

Devatma Sapdena shivatma putha
Yathkoorma vayavya vacho vivruthya
Thwam pasa vichhethakari prasidda
Mam pahi sarveshwari Moksha datri. 4

தேவாத்ம ஸப்தேன ஶிவாத்ம பூதா | யத்கூர்ம வயாவ்ய வசோ விவ்ருத்யா |
த்வம் பாஶவிச்சேதகாரி ப்ரஸித்தா| மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதாத்ரி ||

Thwam brahmma puchha vivetha mayuri
Brahmma prathishtasupathishta gita
Gyna swarupatmathaya kilanaam
Mam pahi sarveshwari moksha datri. 5

த்வம் ப்ரஹ்ம புச்சா விவிதா மயூரீ | ப்ரஹ்ம ப்ரதிஷ்டாஸ் உபதிஷ்ட கீதா |
ஞான ஸ்வரூபாத்மதயா கிலானாம் | மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதாத்ரி ||Categories: Bookshelf, Devotee Experiences

Tags:

18 replies

 1. Namaste

  Thanks a lot for the audio and the text. We will definitely create a youtube video on Bhagavan Naama.
  If you have any audios to share, please email to mahaperiyava102@gmail.com

  HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA

 2. Thank you so much for the slokham.

 3. The audio link for Sri Siddheshwarshtakam is available in the below link
  https://sites.google.com/site/sriadishankarastutis

  Youtube video for Sri Siddheshwarashtakam with Tamizh lyrics with proper numbering for right pronounciation
  https://www.youtube.com/watch?v=uj8PPOnTIRs

  Sri Durga Pancharatnam audio with lyrics and text is available towards the end of the video at 28:21
  https://www.youtube.com/watch?v=zumaZhMZcMA

  HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA

 4. ஒரு தாழ்மையான வேண்டுகோள். சமஸ்க்ரிதம் படிக்க தெரியாத என்னை போன்றவர்கள் சரியாக உச்சரிப்பதற்கு ப, பா என்பது போன்ற எழுத்துக்களை வேறு படுத்தி காட்டினால் மிகவும் உபயோகமாக இருக்கும்’

  உங்கள் தொண்டு மேன் மேலும் வளர மஹாபெரியவாளை
  பிரார்த்திக்கிறேன்.மஹாபெரியவா சரணம்.Thanks

 5. Hara Hara Shankara! Jaya Jaya Shankara! Thanks for sharing this beautiful incident and shloka.
  Can someone give the source of the shloka “Shakti Shaktimathoho Abedad”? Thanks!

 6. நமஸ்காரம்..துர்கா பஞ்சரத்னத்தின் தமிழ் அர்த்தம் உள்ள இணையதள முகவரியை அளித்தமைக்கு மிக்க நன்றி …இதற்க்கு முன் இதனை நான் அறிந்திருக்க இல்லை.ஸ்லோகத்தையும் அதன் தமிழ் அர்த்தத்தையும் ,கல்லிலே வடித்தால் பொருட்செலவு அதிகமாகும் ….ஒரு இடத்தில்தான் வைக்க முடியும் …எனவே flex பேனர்-ல் போட்டால் சில கோவில்களில் பாதுகாப்பான இடத்தில வைக்கலாம் அல்லவா? சரி….இன்னொரு கூடுதல் தகவல்…
  சந்தியாவந்தனம் தவிர ஒரு நாம ஜபம் செய்ய வெகுநாள் ஆசை…
  குருமூலம் உபதேசம் பெற்று செய்தால் மிக நல்லதுதானே …குருவை தேடி எங்கே போக? சமீபத்தில் ஆங்கரை பெரியவா என போற்றப்படும் ஸ்ரீ கோவிந்தா தாமோதர ஸ்வாமிகளின் உபதேசங்கள் கிடைத்தது…சரி ஒருநாள் பழூர் அதிஷ்டானம் சென்று அங்கிருந்து தொடங்கலாம் என நினைத்து கொண்டேன்…அப்படியே நெரூர்…ஊஞ்சலூர் சேஷாத்திரி ஸ்வாமிகள் அதிஷ்டானம் ,சேலம் சின்ன திருப்பதியில் உள்ள ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அதிஷ்டானம்,கும்பகோணம் காஞ்சிமடம்,மன்னார்குடி அருகில் உள்ள சித்த மல்லி (மஹாபெரியவாளுக்கு வேதம் போதித்து அவரிடம் ஆலிங்கனா தீக்ஷை பெற்று முக்தி அடைந்த ஸ்ரீ யதீந்திராள் அதிஷ்டானம் . வடவம்பலம் எல்லாம் போய்வரலாம் என திட்டம்….I already visited these places…
  இந்த வலைத்தளத்தை திறந்து பார்க்கும் போது ஒரே அதிர்ச்சி …..
  மஹாபெரியவா குரலில் ராமநாம ஜெபம் ….நாயினும் கீழான என் மனஓட்டத்தை புரிந்து கொண்டு அவரின் திருவாய் மலர்ந்தே எனக்கு ராம நாமத்தை உபதேசித்து விட்டார் என்று நான் நினைப்பதில் என்ன பிழை???சொல்லுங்கள் …இன்று அதிகாலை 5 மணி…அதுவும் அனுஷம் ….இதற்குமுன் இந்த வலைத்தளத்தை பார்த்ததே இல்லை …
  சந்தோசம் ….துக்கம் ….ஆனந்தம் …கண்ணீர் எல்லாம் வருகிறது…மஹாபெரியவா …..இனி பிறவி வேண்டாம் என கேட்கமாட்டேன் …நிறைய பிறவியை கொடு…நீ சென்ற,தங்கிய,பிறந்த ,மறைந்த இடங்களில் எல்லாம் புழுவாகவோ,பூச்சியாகவோ, பிறந்து,மனிதனாக பிறந்தால்…..அந்த இடங்களை எல்லாம் கூட்டி மெழுகி கோலமிட்டு விளக்கேற்ற வேண்டும் ….அந்த அருளை எனக்கு தா….”லட்சுமி பிரசன்னா அவர்களுக்கு அவர் வயதில் என்னைவிட சின்னவராக (எனக்கு 64) என் சாஷ்டாங்க நமஸ்காரம்….
  இதோ தேனம்பாக்கம் கிளம்பி விட்டோம்….
  ஜெய ஜெய சங்கர…ஹர ஹர சங்கர ….

 7. Thanks Smt. Lakshmi Prasanna. The right time on the Anusham Day, we can take it as his karunakayakshsm to know in detail on the Durghaa Pancharatnsm with HIS Blessings!

 8. The Samskrtam, English and Tamizh lyrics with Tamizh and English meaning for Durga Pancharatnam & Sri Siddheshwarashtakam is available in the web site

  https://sites.google.com/site/sriadishankarastutis/

 9. Namaskaram….anybody pl.write the tamil meaning…so as to make an inscription stone for a temple in Kanchipuram….

 10. The MaaPradhana Mantram, specially composed by Mahaperivaa, the DURGA PANCHARATHNAM. This has been worshipped by HIM during the Sunday Rahukalams by our Revered MahaPerivaa with Manaseega chanting over several years, also advised devotees to chant as many avarthi’s possible in their daily prayers after Sandhyavandanam., specially for Lokashemam.

 11. In samskritam, for those who want to chant it with correct pronunciation.

  ते ध्यानयोगानुगता अपश्यन्‌
  त्वामेव देवीं स्वगुणैर्निगूढाम्‌ .
  त्वमेव शक्तिः परमेश्वरस्य
  मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि .. १..

  देवात्मशक्तिः श्रुतिवाक्यगीता
  महर्षिलोकस्य पुरः प्रसन्ना .
  गुहा परं व्योम सतः प्रतिष्ठा
  मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि .. २..

  परास्य शक्तिः विविधैव श्रूयसे
  श्वेताश्ववाक्योदितदेवि दुर्गे .
  स्वाभाविकी ज्ञानबलक्रिया ते
  मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि .. ३..

  देवात्मशब्देन शिवात्मभूता
  यत्कूर्मवायव्यवचोविवृत्या
  त्वं पाशविच्छेदकरी प्रसिद्धा
  मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि .. ४..

  त्वं ब्रह्मपुच्छा विविधा मयूरी
  ब्रह्मप्रतिष्ठास्युपदिष्टगीता .
  ज्ञानस्वरूपात्मतयाखिलानां
  मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि .. ५..

  In iTrans

  te dhyAnayogAnugatA apashyan
  tvAmeva devIM svaguNairnigUDhAm .
  tvameva shaktiH parameshvarasya
  mAM pAhi sarveshvari mokShadAtri .. 1..

  devAtmashaktiH shrutivAkyagItA
  maharShilokasya puraH prasannA .
  guhA para.n vyoma sataH pratiShThA
  mAM pAhi sarveshvari mokShadAtri .. 2..

  parAsya shaktiH vividhaiva shrUyase
  shvetAshvavAkyoditadevi durge .
  svAbhAvikI j~nAnabalakriyA te
  mAM pAhi sarveshvari mokShadAtri .. 3..

  devAtmashabdena shivAtmabhUtA
  yatkUrmavAyavyavachovivR^ityA
  tvaM pAshavichChedakarI prasiddhA
  mAM pAhi sarveshvari mokShadAtri .. 4..

  tvaM brahmapuchChA vividhA mayUrI
  brahmapratiShThAsyupadiShTagItA .
  j~nAnasvarUpAtmatayAkhilAnAM
  mAM pAhi sarveshvari mokShadAtri .. 5..

 12. Perhaps due to oversight the writer has missed out the first line of the Durga Pancharatnam. The first line is:

  They Dyana YoganuGatha apasyan

 13. பாரத யுத்தமெல்லாம் முடிந்து பல வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் அர்ஜுனன் பகவானிடம் மீண்டும் கீதையை உபதேசிக்குமாறு வேண்டினான். முதலில் உபதேசித்தபோது யுத்த நெருக்கடியில் இருந்ததனால் சரியாக மனதில் வாங்கிக்கொள்ளவில்லை என்றான். உன்னுடைய சிஷ்ய யோக்யதை இவ்வளவுதானா என்று கடிந்துகொண்ட பகவான் , அதை மீண்டும் அதேபோலச் சொல்லும் சக்தி தமக்கு இல்லை என்றார்!

  ந ஶக்யம் தன்மயா பூயஸ்ததா வக்தும் அஶேஷத:
  பரம் ஹி ப்ரஹ்ம கதிதம் யோகயுக்தேன தன்மயா

  கீதையை முழுதும் அதேவடிவில் மீண்டும் வெளியிடும் சக்தி எனக்கில்லை. அந்த சமயத்தில் நான் யோகத்தில் நிலைத்தவனாக இருந்து பரமாத்ம தத்துவத்தை விவரித்தேன்.

  [மஹாபாரதம், ஆஶ்வமேதிக பர்வம், 16. 12-13 ]

  இங்கு “யோகத்தில்” என்பதற்கு “சக்தியுடன் பொருந்தி” எனப் பொருள் கொண்டால், [ யோகம் = ஒன்றுதல் ] ஸ்ரீ பெரியவாள் இங்கு விளக்கியதன் நுண்மை புலப்படும்!

 14. Mahaperiyava Padame Saranam

 15. Excellent experience Thanks a lot

 16. Hara Hara Sankara Jaya Jaya Sankara. This Sri Durga Pancharatnam is inscribed in granite stone and fixed in the northern prahara of Sri Arunachaleswarar temple at Royapuram village(Mannargudi taluk) as per the instructions of Sri Maha Periyava during the renovation held in the year 1977. (Royapuram is the native place of Sri Balu Swamigal). Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: