Periyava Golden Quotes-381

album1_5

அவனவனும் தன் உடம்பையும் புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொள்வதே பெரிய பரோபகாரம்தான். துர்ப்பழக்கங்களால் ஒருத்தன் வியாதியை ஸம்பாதித்துக் கொள்கிறான் என்றால், அப்புறம் அவனால் எப்படிப் பரோபகாரம் பண்ண முடியும்? இது மட்டுமில்லை. இவனுடைய வியாதி பிறத்தியாருக்குப் பரவக் கூடும். அதனால் நம் அஜாக்ரதையால், துர்ப்பழக்கத்தால் வியாதியை வரவழைத்துக் கொள்கிறபோது பர அபகாரமும் பண்ணி விடுகிறோம். நம்மை மீறி வந்தால் அது வேறே விஷயம். இந்தக் காலத்தில் எல்லோரும் நோயும் நொடியுமாக அவஸ்தைப்படுகிற மாதிரி நாற்பது, ஐம்பது வருஷங்களுக்கு முந்தியெல்லாம் இல்லை. காரணம் என்னவென்றால் இப்போது அநேகருக்கு மனஸில் நெறியில்லாமல் இருப்பதும், அநேக துராசாரங்கள் வந்திருப்பதும்தான்.  ”சாஸ்த்ராய ச ஸுகாய ச” என்பார்கள் – அதாவது சாஸ்த்ர ப்ரகாரம் நெறியோடு, ஆசாரத்தோடு இருப்பதுதான் ஸெளக்யமாக, ஆரோக்கியமாக இருக்கவும் உதவுவது என்று அர்த்தம். இப்போது எச்சில் தீண்டல் பார்க்காததாலேயே அநேக வியாதிகள், தொத்து நோய்கள் பரவிக்கொண்டு வருகின்றன. இப்படி வியாதிக்குக் காரணமாயிருக்கிற அநாசாரத்தை ஃபாஷன் என்ற பெயரில் ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறோம்! – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Keeping one’s body and mind pure is in itself a big “Philanthropy”. If a person is infected by diseases, how can he help others? Moreover, he will also infect the others. So when we acquire diseases through carelessness or bad habits we are performing a disservice to others. It is a different issue altogether if we suffer from ill health due to reasons beyond our control. The spread of diseases is more nowadays than it was around half a century ago. The reason is people have acquired many bad habits and have allowed the mind to go astray. Our ancients stated that living according to the Sastras enablse us to live with good health and comfort. Nowadays many diseases spread due to our habit of sipping things – saliva is a carrier of infection! But we adopt all these unhealthy habits in the name of fashion. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. I totally agree. This is a must read for Parents – Especially mothers please understand the importance of Yechchil, Theendal & pass it on to your kids. Basically when we practice this automatically becomes a habit for the kids.

  2. Very true statement of fact. Madi, sudham, acharam ethai ellam porull paduthathathinal vandha vinai !

Leave a Reply to Nithya NagarajanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading