Periyava Golden Quotes-366

album1_48

 

இப்போதும், எப்போதும் – இதுவரை செய்யாவிட்டாலும் இப்போதிருந்தாவது – நாம் செய்ய வேண்டியது பகவத் ஸ்மரணையை அழுத்தமாக, ஆழமாக ஏற்படுத்திக் கொள்வதுதான். அப்படி வாழ்நாள் பூரா, வெளியில் எத்தனை கார்யம் செய்து கொண்டிருந்தாலும், உள்ளூர ஓர் இழை பரமாத்மாவிடமே சித்தம் ஒட்டிக் கொண்டிருந்தால்தான் அந்திம காலத்தில் கன்னாபின்னா நினைப்புகள் வராமல் ‘அவன் நினைவு மட்டும் – மாம் ஏவ’ என்ற மாதிரி அது மாத்திரமே – இருந்து கொண்டிருக்கும். இழுத்துப் பறித்துக்கொண்டு கிடந்தாலும் அத்தனை இழுபறியிலும் விடாமல் பகவத் ஸ்மரணமே இருக்கும். அல்லது அநாயாஸ மரணமாக இயற்கையாக ஸம்பவிக்கும்போதும் அவனையே நினைக்கத் தோன்றி அந்த ஒரு சில க்ஷணங்களானாலும் அதிலேயே ஜகாக்ரியத்தோடு முழுகிவிட முடியும். அல்லது திடீரென்று ஒரு புலி வந்து அடித்துப் போட்டாலோ, அல்லது கரென்ட் ஷாக் அடித்தாலோ அப்போதுகூட பயமோ, அதிர்ச்சியோ இல்லாமல், ப்ரக்ஞை போய்விடாமல், ‘டாண்’ என்று பகவத் ஸ்மரணம் வந்து நிற்கும். ஆனால் கீதா வாக்யத்தைப் பார்த்தால், இப்படி என்றைக்கோ செய்த ஸ்மரணத்தை பகவான் ‘ரிஸர்வேஷ’னாக நினைக்கவில்லை; கடைசிக் காலத்தில் நினைக்கத்தான் சொல்லுகிறார். “அதாவது வாழ் நாள் பூராவும் என்னை நினைத்துக் கடைசியிலும் நினை, தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அநுஸ்மர” ஆனபடியால் என்னை ஸர்வகாலங்களிலும், எப்போதும் நினைத்துக்கொண்டே இரு என்கிறார். இப்படி எப்போதும் நினைத்தால்தான் முடிவில் அந்த நினைவு வரும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Henceforth, we should start unwaveringly contemplating on the Divine, even if we have not done so till now. Even if we are thoroughly immersed in the worldly affairs, deep down, the mind should be constantly attached to Him. Only then it is possible to think solely of Him when the final moments of our earthly lives draw nearer. Even if the final moments are prolonged, the mind will continue to contemplate on Him. Even if it is a natural death, the mind will be deeply immersed in His thoughts in those last moments, even if they are a few. Or if the death is sudden – like a tiger attack or electrocution – there will be no fear or shock and the thought of Bhagawan will fully occupy our minds and we will not lose consciousness. But if we closely study the words of Lord Krishna in Srimadh Bhagavadh Gita, contemplating on Him throughout the life will not form a “reservation” for the final moments. We should think of Him when we breathe our last also. So if we continue to contemplate Him throughout our lives, we will be able to think of Him in the final moments of our earthly lives. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Devotee Experiences

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading