Thanks to Sri Varagooran mama. I have already posted this long back – repeat for Vijayadasami day
ஐந்து வயதுக் குழந்தையுடன் வந்து பெரியவாளை நமஸ்காரம்செய்தனர் தம்பதியர்.
“விஜயதசமி அன்னிக்கு அக்ஷராப்யாசம் செய்யணும்… நவராத்திரியின்போது,வீட்டை விட்டு வர முடியாது, பெரியவா அனுக்ரஹம் செய்யணும்.குழந்தைக்குப் படிப்பு நன்றாக வரணும்…” என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
தகப்பன் மிகவும் பவ்யமாக, “பெரியவா…ஏதாவது ஒரு வார்த்தை… குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கணும்” என்று குழைந்தான்.
பெரியவா குழந்தையைத் தன் அருகில் அழைத்தார்கள்.
“சொல்லு.. …
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான்
நோக்குண்டாம் மேனி நுடங்காது…..
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
இது ஔவையார் பாட்டி பாடினது, தெரியுமா? தினம் சொல்லு…”
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சில தமிழறிஞர்களும் இருந்தார்கள். பெரியவாள் வட மொழியின்பால்பெரும் பற்றுக் கொண்டவர்கள் என்ற கருத்து பரவியிருந்ததால் [மூஷிக வாஹன..என்பது போன்ற] ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தைச்சொ ல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது “வாக்குண்டாம்…” என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.
தமிழறிஞர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். “இது எங்களுக்கு ஓர் உபதேசம் மாதிரி.இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்” என்று உள்ளார்ந்த பூரிப்புடன்பெ ரியவாளிடம் தெரிவித்துக் கொண்டார்கள்
Categories: Upanyasam
VAKKUNDAM VILAKKAVURAI THEVAI
Whats the meaing of “மேனி நுடங்காது…பூக்கொண்டு துப்பார் திருமேனி” what is “நுடங்காது”? I am scratching my head for many years since I downloaded the same song from Avvaiyaar movie (KBSundarambaaL acted. But this para was sung by different artist I dont know who it was. Not MLV either.)
My mother, Smt. Gomathi Ramakrishnan, aged about 85 years studied upto class V only. Though she does not know Sanskrit, still used to recite Shri Subramanya Bhujangam composed by Sri Adi Sankara in Sanskrit, by heart. She also regularly recites this ‘vaakkundaam’ Tamil slokam also.
Jaya Jaya Sankara Hara Hara Sankara. The upadesam is also for us. we will take it that way. Janakiraman/ Nagapattinam
இதில் எது சரி – ‘மாமலரான்’ அல்லது ‘மாமலரால்’?
மாமலராள் is the right word. It means Sri Mahalakshmi, one who is seated on a grand lotus.
Namaste, can someone please translate this into English? Thanks in advance and pranams
English translation in this YT video – https://www.youtube.com/watch?v=rcUg_hNDovQ