45. Gems from Deivathin Kural-Adwaitham-Dwaitham / Buddhism = Adwaitham

album2_89

Jaya Jaya Sankara Hara Hara Sankara – We talk about complex philosophies explained in simpler terms; here Sri Periyava gives us a master class with the basics of Maths (+, -, *, and /) to explain some greatest philosophies.

Anatha Jaya Jaya Sankara Hara Hara Sankara to Shri R Sundarraman, our sathsang seva volunteer for the translation. Ram Ram.

த்வைதம் ÷ பெளத்தம் = அத்வைதம்

“பிரம்மம் பூரணமானது; உலகமும் பூரணமானது; பிரம்மம் என்ற பூரண வஸ்துவில் உலகம் என்ற பூரணம் உதயமாயிற்று; இந்த உலகம் என்ற பூரணத்தைப் பிரம்மம் பூரணத்திலிருந்து எடுத்துவிட்ட போதிலும் பிரம்மம் பூரணமாகவே இருக்கிறது” என்று ஓர் உபநிஷத மந்திரம் சொல்லுகிறது. பூரணம் என்றால் எல்லாம் என்று அர்த்தம். எப்படி இரண்டு வஸ்து எல்லாமாக முடியும்? பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்த பின்னும் எப்படிப் பூரணம் மிஞ்ச முடியும் என்ற கேள்வி எழுகிறது.

இந்த மந்திரத்தின் வாஸ்தவமான தாத்பரியம் என்ன? உலகம் உண்மையில் பிரம்மத்திலிருந்து வேறாகப் பிரிந்து வெளியே வந்துவிட்ட வஸ்து அல்ல. பிரம்மமேதான் உலகமாகத் தோன்றுகிறது. பிரம்மம் வேறேதோ பொருள்களைக் கொண்டு உலகை சிருஷ்டிக்க (Create) வில்லை. பிரம்மம் உலகமாக மாறிவிடவும் (Transform) இல்லை. பிரம்மம் உலகமாகத் தோன்றுகிறது (Appearance). அவ்வளவுதான். இருட்டிலே ஒரு மாலையைப் பார்த்துவிட்டுப் பாம்பு என்று நினைக்கிறோம். இப்போது மாலையே பாம்பாகத் தோன்றுகிறது. மாலை பாம்பாக மாறவில்லை. மாலை பாம்பைச் சிருஷ்டிக்கவும் இல்லை. பாம்பாக எண்ணியபோது அது முற்றிலும் (பூரணமாக) பாம்பாகத்தான் தெரிகிறது. மாலை என்று தெரிந்து கொண்டால் பூரணமாக மாலையாகவே இருக்கிறது. மாலை என்ற பூரணத்தில் பாம்பு என்ற பூரணம் உதயமானாற்போல், பிரம்ம பூரணத்தில் உலக பூரணம் தோன்றுகிறது. அதாவது ஒரு நிலையில் மாலையே பூரணம்; இன்னொரு நிலையில் பாம்பே பூரணம். ஆக, இரண்டு பூரணமில்லை. ஒரே பூரணம் இரண்டு சமயங்களில் இரு விதங்களில் பூரணமாகத் தெரிகிறது. மாலையில் பாம்பு என்ற தோற்றம் ஏற்பட்டதால் அப்போது அதன் எடை கூடிற்றா என்ன? இல்லை. பாம்பு என்ற தோற்றம் அழிந்து, இது மாலைதான் என்ற தெளிவு ஏற்பட்டபோது மாலையின் எடை குறைந்ததா? அதுவும் இல்லை. அப்படியே பிரம்மத்தில் உலகத்தைக் கூட்டினாலும் குறைத்தாலும் அது மாறாமல் பூரணமாகவே இருக்கிறது. மாலையில் தோன்றும் மாயப்பாம்பாக, “அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவாக” இருப்பதே உலகம் என்றார் கம்பர். அரவை (பாம்பை) அலங்கலிலிருந்து (மாலையிலிருந்து) கழித்த பின்னும் அது பூரண அலங்கலாகவே இருக்கிறது. இதுதான் உபநிஷத் சொன்னபடி பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்த பின்னும் பூரணம் மீதி இருப்பது.

மாலை ஏன் பாம்பாகத் தெரிந்தது? இருட்டினால் அப்படித் தெரிந்தது. மாயை என்கிற இருட்டில்தான் பிரம்மம் உலகமாகத் தெரிகிறது. ‘மாயா’ என்றால் “எது இல்லையோ அது” என்று அர்த்தம். இல்லாத வஸ்துவான மாயைதான் இருக்கிற ஒரே வஸ்துவான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பெருக்கிக் காட்டுகிறது. இல்லாத வஸ்துவால் இப்படிச் செய்ய முடியுமா என்று கேட்பீர்கள். கணித சாஸ்திரப்படி பதில் சொல்கிறேன்.

பிரம்மத்தின் விஷயத்தில் கூட்டல், கழித்தல், கணித நியதி மேலே பார்த்தோம். கூட்டினாலும் ஜாஸ்தி ஆகாது. கழித்தாலும் பூரணமாகவே இருக்கும் என்ற விசித்திரத்தைப் பார்த்தோம். இப்போது பெருக்கல், வகுத்தல் கணக்கு ஒன்றும் சொல்கிறேன்.

ஓர் எண்ணை இன்னோர் எண்ணால் வகுக்கிறோம். வகுக்கிற எண் சிறியதாக சிறியதாக ஈவு அதிகமாகிக் கொண்டே போதும். பதினாறைப் பதினாறால் வகுத்தால் ஈவு ஒன்று; எட்டால் வகுத்தால் ஈவு இரண்டு; நாலால் வகுத்தால் நாலு; ஒன்றால் வகுத்தால் ஈவு பதினாறு. வகுக்கிற எண் சிறியதானால் ஈவு அதிகமாகிறது. வகுக்கிற எண் மிக மிகச் சிறியதாகி பூஜ்யமே (0) ஆகிவிட்டால் அப்போது ஈவு மிக மிகப் பெரியதான, எண்ணிக்கையிலேயே அடங்காத அனந்தமாகிறது (Infinity). பூஜ்யத்தால் எந்த எண்ணை வகுத்தாலும் கிடைக்கிற ஈவு அனந்தம்.

1/0 =அனந்தம்; 2/0 =அனந்தம்; 3/0 =அனந்தம்; கோடியைப் பூஜ்யத்தால் வகுத்தாலும் இதே அனந்தம்தான் ஈவு.

வகுக்கிற எண்ணால் ஈவைப் பெருக்கினால் வகுக்கப்படும் எண் கிடைக்கவேண்டும் என்பது கணித நியதி. 16/2 = 8; அதாவது 8 × 2 = 16 இந்த நியதிப்படி,

அனந்தம் × 0 = 1

அனந்தம் × 0 = 2

அனந்தம் × 0 = 3

இப்படி முடிவே இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. ஒரே அனந்தமானது பூஜ்யத்தால் தன்னை ஒன்று, இரண்டு, மூன்று, கோடி, பத்துகோடி, என்று முடிவில்லாமல் பெருக்கிக் கொண்டே போகிறது.
இந்த ஒரே அனந்தம்தான் பிரம்மம். இல்லாத வஸ்துவான மாயைதான் பூஜ்யம். எது இல்லையோ அதுதானே ஸைஃபர்? மாயை என்றாலே அந்தச் சொல்லுக்கு ‘எது இல்லையோ அது’ என்றுதான் அர்த்தம். எனவே மாயைதான் ஸைஃபர், பூஜ்யம். அனந்தம் பூஜ்யத்தால் தன்னைப் பெருக்கிக் கொண்டு பலவாகக் காட்டிக் கொள்வதுபோல், பிரம்மம் மாயா சக்தியால் தன்னை எல்லையில்லாத பல வஸ்துக்களாகத் தோன்றுகிற இந்தப் பிரபஞ்சமாகக் காட்டிக் கொள்கிறது. வகுக்கப்படும் பிரபஞ்சத்துக்கு என்ன எண்ணிக்கை வேண்டுமானாலும் தரலாம். எந்த எண்ணிக்கை தந்தாலும் அதை வகுப்பது பூஜ்யமான மாயையாகையால் மாறாது. அனந்தப் பிரம்மமே ஈவு ஆகிறது. பிரபஞ்சம் என்பது இவ்விதம் எந்த எண்ணிக்கையை வேண்டுமானாலும் பெறலாம் என்கிற முறையில் எல்லையற்றிருப்பதால் அதுவும் அனந்தமாகிறது. சிருஷ்டியில் எத்தனை தினுசு? நம் மனசும் எத்தனை தினுசுகளில் ஓடுகிறது? இவற்றிற்கு முடிவே இல்லை. அனந்தம் தான். முதலில் சொன்ன உபநிஷத் மந்த்ரங்களில் பிரம்மத்தைப் பூரணம் என்று சொன்னபோது, அது மாறாத அனந்தம் என்றும், பிரபஞ்சத்தைப் பூரணம் என்கிறபோது அதுமாறிக் கொண்டேயிருப்பதில் அனந்தம் என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

மாறிக் கொண்டேயிருக்கிற வஸ்து சத்தியமாக இருக்கமுடியாது. ஒன்று, இரண்டு, மூன்று, கோடி, பத்துகோடி என்று அதற்கு நாம் மதிப்புத் தந்தாலும், உண்மையில் அது அசத்தியம்தான்—இல்லாத வஸ்துதான்—அதாவது பூஜ்யம்தான். ‘எந்த எண்ணைப் பூஜ்யத்தால் பெருக்கினாலும் வருகிற விடை பூஜ்யம்தான்’ என்ற கணித நியதியை இங்கே எடுத்துக் கொள்ள வேண்டும். அனந்தம் (பிரம்மம்) × மாயை (0) = 1; 2; 3… என்றெல்லாம் மேலே உபசாரமாகச் சொன்னாலும், உண்மையில் அனந்தத்தை மாயையால் பெருக்கிக் கிடைக்கிற பிரபஞ்சமும் மாயா மயமான பூஜ்யம்தான் எனலாம்.

அனந்தமாக இருக்கிற பிரம்மம் ஒன்றே சத்தியம் என்கிறது அத்வைதம்;

அனந்தமாகத் தெரிகிற பிரபஞ்சமும் சத்தியம் என்கிறது துவைதம்; பிரம்மம், பிரபஞ்சம் என்ற பேதமில்லாமல் எல்லாமே சூனியம், பூஜ்யம், மாயை என்கிறது பெளத்தம். அதாவது, பிரம்மம் என்பது சத்தியம் என்று சொல்வது அத்வைதம்; எல்லாம் மாயை என்பதோடு நிற்கிறது பெளத்தம்; பிரபஞ்சத்தை சத்தியமாகச் சொல்கிறது த்வைதம்.

பிரம்மம் × மாயை = பிரபஞ்சம் என்று நாம் மேலேகண்ட equation சூத்திரத்தை,

அத்வைதம் × பெளத்தம் = த்வைதம் என்று சொல்லலாம். அல்லது,
த்வைதம் ÷ பெளத்தம் = அத்வைதம் எனலாம்.

_____________________________________________________________________________________

Dwaitham ÷ Buddhism = Adwaitham

Brahmam (The ultimate reality) is complete (Poornam); the universe too is fully complete; In the Brahmam that is complete, the complete universe was born; Even though the complete universe has been taken out of the complete Brahmam, Brahmam continues to remain complete says an Upanishad Mantra. Complete (Poornam) means that is everything; how is it possible for two substances to be everything? If one subtracts completeness (Poornam) from Poornam, how it is possible for the Poornam to remain is the question.

What is the significance of this mantra? In reality this universe has not come out of the Brahmam and it is not different from it.  Brahmam itself is seen/ visible as the universe.  Brahmam has not created this world by using different materials; Brahmam also has not transformed itself as the universe; Brahmam appears to us as the universe; that is all.  In a dark environment, when we see a garland, we think it is a snake; Garland becomes a snake in our eyes; the garland has not converted itself into a snake! Garland has not given birth to the snake too! When it is thought as snake it is seen completely as a snake; if we see it as a garland then it is completely seen as garland. The way in a complete garland, a complete snake was born, in the complete (poorna) Brahmam, this universe is complete in our eyes. In other words, in one circumstance, the garland is complete (Poornam) and in, another the snake is complete (Poornam). But both are not complete. One complete substance is seen to be two complete (different) things under two situations; when it is seen as a snake instead of the garland has its weight increased? No. When the feeling that it is not a snake comes through and one feels that it is only a garland does the weight diminish? No again. Similarly when we add or subtract or remove the universe from the Brahmam, it does not change and it is complete (Poornam).  It is the Maya snake that is seen in the dusk – “Alangalil  thondrum poimmai aravaga” (the false snake that is seen in the garland) said Poet Sri Kambar about this universe. When the snake is removed or subtracted from the garland, it continues to be the complete garland! This is what the Upanishad says that when you remove completeness (Poornam) from completeness, the balance is still completeness.

Why was the garland seen as snake? It was due to darkness. It is because of Maya which is darkness, Brahmam is seen as the universe. Maya means “what it is not, that”.  The Maya which is not there, multiplies the only substance that is Brahmam into many things. How is this, possible for something which is not there (Maya)?  I will answer with a mathematical example.

In respect of Brahmam, we saw the effects of addition and subtraction above and how it is does not become more due to addition and how strange, that inspite of subtraction also it remained the same! Now let me state on multiplication and division.

When we divide one number by another, if the denominator is smaller, then the balance or the answer, which is the numerological number will keep on increasing. For example, if we divide 16 by 16, then it is 1; if it is divided by 8 then it is 2; if it is divided by 4, then it is 4; if it divided by 1 then it is 16.  If the denominator is smaller, then, the balance (answer) is larger.  If the denominator is the smallest, that is zero, then the balance (answer) is a far bigger number and which cannot be counted (Infinity).  If we divide any number by zero, then the answer is Infinity.

If 1 is divided by zero then it is          = Infinity;

If 2 is divided by zero then it is          = Infinity;

If a crore is divided by infinity, then also    = Infinity.

If we multiply the balance (answer) with the denominator then, we should get the numerator. For example,

If 16 divided by 2 is 8; then 8 multiplied by 2 is 16.

So Infinite(y) multiplied by zero = 1

So Infinite(y) multiplied by zero = 2

So Infinite(y) multiplied by zero = 3

This will go on and on without an ending. One infinite(y) along with zero is multiplying itself into 1, 2, 3, crore, 10 crores etc. without an end.

This infinity is Brahmam (ultimate reality). What is not there, the Maya, is zero. What is not there, it is zero isn’t it? Maya itself means “what is not there that”. Hence Maya is zero. The way infinity when it is multiplied with zero, it manifests itself as innumerable things, Brahmam with the power of Maya, manifests itself as innumerable things in this universe. One can give any number to be divided by infinity. Whatever number is assigned, since it is divided by the Maya zero, it will not change. The balance (answer) will always will be infinity, Brahmam, the ultimate reality. This universe hence can be obtained through any numerical combination, with no limitation, it is also limitless. We see so many things in this universe established by nature. Even our minds also runs in different ways!  There is no limitation, in numerous it is. In the beginning when we said, the upanishad states that the Brahmam is Poornam, we can mean that to be – that it is unchanging limitless wonder and when we say the universe is Poornam, we can say that it is always the ever changing one.

Whatever is changing always can never be the real thing. Even though it may be assigned varying numbers as 1, 2, 3, a crore, 10 crores, the truth is it is not reality – one which is not there – that is zero. In other words, we should take the mathematical example of when we multiply anything by zero, the answer will be zero.  Even though, the limitless (Brahmam) multiplied by Maya (zero) = 1, 2, 3… as we saw above, the truth is that when we multiply Brahmam with Maya, and which is the universe, it is nothing else but Maya personified zero.

The limitless Brahmam is the only truth says Adwaitam; This limitless universe is true says dwaitham; Brahmam, universe have no difference and these are zero, Maya says boudham (Buddhism). In other words, Brahmam is true says Adwaitam, everything is Maya says Buddhism, this universe is true says Dwaitham.

Brahmam  X Maya   = This Universe (as per the above equation can also be stated as below):

Adwaitham X Buddhism = Dwaitham (or can be stated as below)

Dwaitham /  Buddhism = Adwaitham



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. MahaPerivaa alone can explain the Brahma Thathvaartham, on a simple Manner with that too on the mathematical quote!..’ Purnamadha, Purnamidham’ the Mantra, spells, this is infinite,. that is infinite.. Brahmaa Swarupar MahaPerivaa Padara Kamalam Saranam.

  2. It is stated “Brahmavith Brahmaiva Bhavathi”. The knower of Brahmam, is the Brahmam. Only the Brahmam itself can declare/say anything about itself, with authenticity. Periyava brilliantly elucidates the relationship between Brahmam, Maya and the universe.

    Periyava is sakshat Brahmam.

Leave a Reply to RamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading