நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா

Thanks to Sri Varagooran mama for the article

img-20160927-wa0003

சொன்னவர்-மணக்கால் நாராயண சாஸ்திரிகள் பாலசுப்ரமணியம்-மஸ்கட்-2012-ல் சொன்னது

எங்கள் தகப்பனார் ஸ்ரீ மணக்கால் நாராயண சாஸ்திரிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முத்ராதிகாரி யாக ஸ்ரீ பெரியவாள் கைங்கர்யம் செய்து கொண்டு தன்னை விஜய தசமி அன்று ஸ்ரீ பெரியவா ஸ்ரீ சரணம் அடைந்து கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறார். ்.

ஒரு சமயம் சுமார் 48 வருஷம் முன்பு வியாச பூஜா முடிந்து ஊருக்கு கிளம்ப உத்தரவு வேண்டி இருந்த சமயம் ஸ்ரீ பெரியவா இந்த முறை நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்றார். எங்கள் தகப்பனார் எனக்கு ரெண்டு பிள்ளைகள் தான் ஸ்திரீ பிரஜை இல்லை என்று சொன்னார். திரும்பவும் ஸ்ரீ பெரியவா நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்று திரும்பவும் சொன்னார். இதே போல மூன்று முறை சொல்லிவிட்டுஸ்ரீ பெரியவா உள்ளே சென்று விட்டார்.

அப்பா மணக்கால் வந்ததும் எங்கள் பாட்டி (பார்வதி) இடம் ஸ்ரீ பெரியவா முன்பு நடந்த சம்பவத்தை சொன்னார். எங்க பாட்டி சொன்னது ~ ஆமாண்டா நீ ஸ்ரீ பெரியவாள் சொல்வது சரிதான் உன் மனைவி இப்ப மாசமாகத்தான் இருக்கா என்றார்.

அப்பா ஸ்ரீ பெரியவாளிடம் ஸ்திரீ பிரஜை பிறந்த விஷயம் சொன்ன சமயம் ஒன்றும் தெரியாதது மாதிரி ‘அப்படியா’ என்று கேட்டாராம். ஸ்ரீ பெரியவா பரிபூர்ண ஆசிர்வாத மகிமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்ரீ பெரியவா காமகோடி என்று பெயர் சூட்டினார்.

ரெண்டு நவராத்ரி பூஜைக்கு கலந்துகொள்ளும் பாக்கியம் ஸ்ரீ பெரியவா கொடுத்தார்.

இப்ப அந்த காமகோடி பெண்ணின் (அகிலாண்டேஸ்வரி) கல்யாணம் நடந்து தற்சமயம் கனடாவில் இருக்கா

இது போல அந்த மகான் நடத்திகொண்டிருக்கும் அற்புத லீலைகள் பல,

இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்கிறது

ஸ்ரீ பெரியவா சரணம்Categories: Devotee Experiences

1 reply

  1. Hara hara shankara

Leave a Reply

%d bloggers like this: