44. Gems from Deivathin Kural-Adwaitham-Remedy for Sorrows

album1_154

Jaya Jaya Sankara – What is the “true” remedy for our sorrows? Keep quite and do Bhagawath Dhyanam & Nama Japam. Sri Periyava explains delightfully!

Anatha Jaya Jaya Sankara to Smt. Priya Krishnan for the translation. Ram Ram

துக்க பரிகாரம்

ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். தாது வித்தியாசத்தால் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வார். இதற்கும் மாறாக இன்னொறு ‘ஸைகலாஜிகல்’ காரணத்தை இந்நாட்களில் பிரபலமாகி வரும் மனோதத்வ நிபுணர் கூறுவார். மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றால் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பார். தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ பூர்வ கர்ம பலனாகத்தான் வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.

வியாதிக்கு மட்டுமின்றி நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவிதக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒரே விஷயத்துக்கு இப்படிப் பல காரணங்கள் சொன்னால் நமக்குக் குழப்பமாயிருக்கிறது. நம் சுக துக்கங்களுக்கு கிரகங்களின் போக்குத்தான் காரணமா? ஜோதிஷர் சொல்கிறபடி கிரகப் பிரீதி செய்வதா? அல்லது மாந்திரீகர் சொல்கிறபடி குலதெய்வத்துக்கோ அல்லது வேறு தெய்வத்துக்கோ கிராம தேவதைக்கோ செய்த அபசாரம் காரணமா? அந்தத் தெய்வத்துக்கு சாந்தி பரிகாரம் செய்வதா? நோய்நொடி என்றால் வைத்தியமும் செய்யத்தானே வேண்டும்? கடைசியில் எல்லாம் கர்ம பலன் என்றால், அது தீருகிறபோதுதான் தீரும் என்று வெறுமே, இருந்துவிட வேண்டியதுதானா? இப்படியாகக் குழப்பம் ஏற்படுகிறது.

பல காரணங்களில் எது சத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மம்தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது; மழை ஒன்றுதான் – ஆனால் அதிலிருந்தே எத்தனை விளைவுகள் உண்டாகின்றன? பூமி முழுவதும் ஈரம் உண்டாகிறது; ஈசல் உண்டாகிறது; தவளை கத்துகிறது; சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன; வேறு சில அழுகுகின்றன. இத்தனையும் ஒரே மழைக்கு அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதியிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம். இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பலவிதமான பிரச்னைகள்! பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவுசக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்னைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகள், கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ்படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause) இருந்தேயாக வேண்டும்.

ஜகத் முழுதும் காரணம்—விளைவு, செயல்—பிரதிச் செயல் (Action and Reaction) என்ற துவந்தத்துக்குள்தான் கட்டுண்டிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் (Physics) முழுதும் இந்த உண்மையைத்தான் விளக்குகிறது. ஜடப் பிரபஞ்சம் ஜீவப் பிரபஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித வாழ்விலும் உண்டு. நம் செயலுக்கெல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அநுபவிக்கின்ற சுகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் காரணம் நாம் முன்னமே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள்தான். சில சமயங்களில் நம் சொந்த பாப புண்ணிய விளைவோடு, குறிப்பிட்ட வேறு சிலரது பாப புண்ணிய பலனும் நம்மைச் சேருவதாகச் சொல்வதுண்டு. உதாரணமாக, குழந்தைக்கு வியாதி வந்தால், மாதா பிதாவின் பாப பலன் என்பார்கள். அவர்கள் குழந்தைக்கு ஸதா சிசுருஷை செய்வதையும், மனத்தால் அந்தக் குழந்தைக்காக அவர்கள் வேதனைப்படுவதையும் பார்க்கும்போது இதுவும் நியாயம் என்றே தெரியும். எனக்கு இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. அதாவது, நமக்கு ஒரு கெடுதல் வந்தால் அது நம் சத்துருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம்.

பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்திதான். அந்த ஒரே ஈசுவரனுடைய ஆக்ஞைப்படிதான் உலக இயக்கம் முழுதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்பந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்பந்தமில்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான் ஸர்வேச்வரன்.

ஒருவர் செய்கிற கர்மம், அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுக துக்கங்களுக்கு முதற் காரணம். இதற்கே துணைக் காரணமாக—அல்லது அடையாளமாக—கிரகசாரம், தெய்வ குற்றம், ஆரோக்கியக் குறைவு முதலியன அமைகின்றன.

ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால், எல்லாவற்றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிகாரம்; உண்மையான பரிகாரம்.

பூர்வ கர்ம சமாசாரம் எப்படிப் போனாலும் இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதைவிட, புதிய சுமை சேராமல், பாபம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈசுவரனைத் துணைகொள்வதே முக்கியம்.

பூர்வ கர்மத்தால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத்துக்கும் உண்மைப் பரிகாரம் ஈசுவர தியானம்தான்; இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம்தான். துக்கம் தருவதாக இன்னொரு வஸ்துவே இல்லை என்ற அத்வைத அநுபவம் சித்திப்பதே இதன் முடிந்த முடிவான துக்க பரிகார நிலை. அங்கே துக்கமும் இல்லை; சுகமும் இல்லை; இரண்டுக்கும் ஆதாரமான சத்தியம் மட்டும் ஸ்வயம் பிரகாசமாக இருக்கும்.

Remedy for Sorrows


When a person falls sick different people quote different reasons. The Ayurveda doctor will say it occurred due to chemical imbalance, the allopathic doctor will quote a totally different reason. In the midst of all this, based on current trends a psychological reason will be attributed by some renowned psychiatrist. The pundits who practice Manthra sastra will claim that this is due to Deiva Kuttram (offence to Bhagawan). The astrologer will say that this occurred on account of the planets not being in a favorable position. Those who are well versed with the Dharmas & Shastras will say, this is on account of our doings in the past karma. (results of past actions).

Not only for health, for all happy & sad events in our life tends to be attributed to various causes. For the same issue when we hear about different reasons we get confused. We are led to think if we should please the grahas (planets) per the astrologer or do pooja to various deities / family deity / Village Gods per the instruction of pundits as we may have committed offence to them? Should we do puja as an atonement for those gods? But if we are not well, don’t we have to get treated?  If in the end everything is due to Karma do we just remain silent and watch? This leads to confusion in our minds.

Among the various reasons, if we think of what the truth is, all these seem to be truthful. One this is for sure, the primary reason is Karma, but the same karma leads to various problems/effect.

For example, Rain is just one and the same. But the same rain has various dimensions. It drenches the soil, gives birth to flies, causes some plants to grow, causes some plants to rot, causes the frogs to croak, etc. All these are different aspects of the same rain. Though we treat the illness using mantras, astrology or medicines, the fact remains that our karma is the primary reason for sickness. Other than ill health there are countless problems in life which need our attention. The cause for all these problems and issues is also our Karma. Per Science for every “Effect” there has to be a “Cause”.

The universe itself revolves around the concept of action and reaction. That is what the law of physics explains in detail. Since both living and non-living beings on this universe came from the same source, the law of universe applies to our lives too. Definitely, there is a result for every action of ours. For every good or bad event that we experience in our lives it is due to our good or bad karmas in this birth or our previous births. Apart from our own karmas, sometimes it is said that the karmas (good & bad) of others also impacts us. For example, when a child falls sick it will be attributed to the karmas of the parents. When we see the parents serving their children physically and also feel sad on seeing their children’s plight & sufferings this seems true as well. I also feel something else. Whenever a bad event strikes us it can be the result of our enemy’s good karma.

All the events in the universe is the handwork of the one & only Parasakthi.

The whole universe is run by the order by Eswara. He (Easwaran) is the one who interconnects various events. There is nothing that happens in this universe without any relation or connection. At times it seems as if we have no connection with many of the happenings around us but Eswaran connects us in an invisible manner & watches all these happenings.

The karma that one does and its fruits are the prime reason for a human being’s happiness & sorrow. The secondary reason or the proof of this is evident in a person’s planetary position, declining health, and ill effects of Deiva Kutram (offence to Bhagawan).

We can search for recourse through astrology, medicine & mantras however they will show positive results only when we have completely undergone the effects of our karmas. If we leave everything to Bhagawan, have faith and patience that is the greater than all, the “biggest remedy” & the “true remedy”.

Whatever be the past karma, it is critical to ensure that we take care not to increase our karma burden in the future. Instead of searching for solutions to our past karmas it is imperative that we do not increase further sins. To achieve this, we have to cling on to Bhagawan.

Faith & Bhakthi towards Bhagawan is the only “true remedy” for our current sorrows. This is also the way that will prevent us from sowing fresh seeds due to bad karmas. Per Adwaitha philosophy we need to come to the realization that is no second thing or being that causes us sorrow. This is the ultimate state; the state of “true remedy” for our sorrows.  When we reach that state there is no happiness or sorrow, only the ultimate truth that is the underlying base for both happiness and sorrow that prevails.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. “கடைசி 4 பாராக்களை எழுதி அல்லது பிரிண்ட் அவுட் போட்டு வைத்து கண்ணில் படுமாறு ஒட்டி வைத்து கொள்ளவும் ,,,மீண்டும் மீண்டும் படிக்கவும் ….படிக்க படிக்க ஒரு தெளிவு பிறக்கும் …
    ஓரிடத்தில் பெரியவா சொல்கிறார் :”பரணியில் வருட கணக்காக தேய்க்காமல் பாசி பிடித்த கிடந்த பித்தளை சொம்பை ஒரு தடவை தேய்த்தே பளிச் என ஆக்க முடியுமா?”புளி…சாம்பல், எலுமிச்சை என பல தினுசான பொருளை பயன்படுத்தி எத்தனை தடவை தேய்க்கணும்? தேய்த்து வெள்ளை ஆனா பிறகும் …தினம் சுத்தம் செய்தால்தான் எப்போதும் வெள்ளையாகவே இருக்கும் …அதுபோலவே பல ஜென்மாக்களாக செய்த கர்மா என்ற களிம்பு ஏறிப்போன மனசை,புத்தியை ,பக்தி அனுஷ்டானம் தனக்கு என விதிக்கப்பட்ட தர்மம் இவைகளை தொடர்ந்து செய்வது ஒன்றே சித்த சுத்திக்கு வழி ..
    பத்திரிக்கை நிருபர் ஒருவர் …”நீங்கள் வலியுறுத்தும் காபி பட்டுப்புடவை வரதட்சிணை போன்றவற்றை ….குறைந்த பக்ஷம் பிரமணர்களாவது கடைபிடிப்பது இல்லையே? என கேட்டதற்கு அந்த தெய்வம் கூறியது:”என்ன செய்வது? எல்லோரையும் கேட்க வைக்கும் அளவுக்கு எனக்கு தபஸ் போறவிலேயே…????அப்போதும் நம்மை அவர் குறை சொல்ல வில்லை …..தன்னையேதான் நொந்து கொண்டார் …
    எல்லாம் அவன் பார்த்து கொள்வான் ….என வாளாயிருப்பது ரொம்ப கஷ்டம் ….அப்படி இருந்தால் பிறர் கையாலாகாத்தவன் என்பர் …பெரியவா சொன்னதுபோல் கோவிலுக்கு செல்வோம் …முடிந்த அளவு பிறர் துயர் போக்குவோம் ….பெரியவா பாதத்தை பிடித்து கொண்டு என்ன செய்ய வேண்டும் என மனமுருகி கேட்போம் ….அவர் நல்ல வழி காட்டுவார் ….ஜெய ஜெய சங்கர…ஹர ஹர சங்கர ….நன்றி நமஸ்காரம்.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading