கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ!

periyava-chronological-416

Thanks to Sri Bala Thiru for sharing

காஞ்சிப்பெரியவரின் சீடர் குமரேசன் கூறிய உண்மைச் சம்பவம் இது.

திருக்கோவிலூரைச் சேர்ந்த பெரியவரின் பக்தரான மணி, தன் மனைவியுடன் காஞ்சிபுரம் வந்திருந்தார். பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தன்று தவறாமல் விரதமிருந்து பூஜை செய்வது அவரது வழக்கம். முடிந்தால் அனுஷத்தன்று காஞ்சிப் பெரியவரை தரிசிக்கவும் செய்வார்.

மணிக்கு இரு குழந்தைகள். மூத்தவள் பெண். இளையவன் பையன். பெண்ணுக்குத் திருமணம் முடிந்து பிரசவத்திற்காக தாய் வீடு வந்திருந்தாள். பையன் படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தான். இந்நிலையில் தான், மணி தம்பதி பெரியவரைத் தரிசிக்க வந்திருந்தனர். அன்று அனுஷம் என்பதால் மடத்தில் பெருங்கூட்டம் காத்திருந்தது. வீட்டில் நிறைமாத கர்ப்பிணி தனியாக இருக்கிறாளே என்ற எண்ணம் அடி மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

என்ன ஆச்சரியம்! காஞ்சிப்பெரியவர் சீடர்களிடம் வரிசையில் நிற்கும் திருக்கோவிலூர் மணி தம்பதியை அருகில் அழைத்து வர உத்தரவிட்டார். மணி அருகில் வந்ததும் பெரியவர், “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு. உன் பையனும் இப்பவே வடக்கே போயாகணும். பிரசாதத்தை வாங்கிண்டு உடனே ஊருக்கு கிளம்பு. கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ” என்று சொல்லிக்கொண்டே அட்சதை கொடுத்து ஆசியளித்தார்.

தாமதம் செய்யாமல் மணியும் உடனே டாக்சியில் திருக்கோவிலூர் திரும்பினர்.

வீட்டிற்குள் நுழையும் போதே அடுத்த வீட்டுப் பெண்கள் ஓடி வந்தனர். “உங்களுக்கு இப்ப தான் பேரன் பிறந்திருக்கான். சுகப்பிரசவம் தான்” என்று சொல்லி விட்டு ‘தந்தி ஒண்ணு வந்திருக்கு’ என்று சொல்லி அதையும் கையில் கொடுத்தனர். அதைப் பிரித்து பார்த்த மணியின் கண்கள் அகல விரிந்தன. மகனுக்கு ரயில்வே துறையில் நாக்பூரில் சேர்வதற்கான பணி குறித்து தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மகிழ்ச்சியுடன் மணி பேரக்குழந்தையைப் பார்க்கச் சென்றார். தாத்தாவிடம், ‘எல்லாம் காஞ்சிப்பெரியவரின் கருணையே’ என்று அந்தக் குழந்தை சொல்வது போலிருந்தது. குழந்தைக்கு ‘சந்திரசேகரன்’ (பெரியவரை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று அழைப்பது வழக்கம்) என்று பெயரிட்டு வாழ்த்தினார். வாழ்வில் என்றும் மறக்க முடியாத இனிய அனுபவமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது என்றால் மிகையில்லை.

இதே போலவே, வேறொரு அற்புதமும் பெரியவரால் நிகழ்ந்தது.

ஒருமுறை பெரியவரை தரிசிக்க பெங்களூருவில் இருந்து பணக்காரர் ஒருவர் வந்தார். பழம், பூ, பட்டுப்புடவை, திருமாங்கல்யம் ஆகியவற்றை தாம்பாளத்தில் வைத்தபடி அவரது மனைவி உடன் நின்றாள். பெரியவரை வணங்கிய அவர்கள், “சுவாமி… யாராவது ஒரு ஏழைப் பெண்ணுக்கு இதை அளிக்க விரும்புகிறோம்,” என தெரிவித்தனர். அதே நேரத்தில், திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலைச் சேர்ந்த ஏழை சமையல்காரர் ஒருவர் தன் மனைவி, மகளுடன் அங்கு வந்திருந்தார். தன் மகளுக்கு திருமணத் தேதி குறித்து விட்டதை தெரிவித்து ஆசியளிக்கும்படி வேண்டினார். அப்போது பணக்காரரை அழைத்த பெரியவர், “திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியே இவாளை இங்க அனுப்பியிருக்கா… அதுக்கு காஞ்சி காமாட்சி வழிகாட்டியிருக்கா… கொடுக்க விரும்பினதை இந்த பொண்ணுக்குச் சீதனமாக கொடுங்கோ” என்று சொல்லி ஆசியளித்தார்.

பணக்காரரும் மகிழ்ச்சியுடன் திருமாங்கல்யம் உள்ளிட்ட அனைத்தையும் அவரிடம் கொடுத்தார். அப்போது அந்தப் பெண்ணை தீர்க்க சுமங்கலியாக வாழ பெரியவர் வாழ்த்தினார்.Categories: Devotee Experiences

7 replies

 1. Hara Hara Shankaara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe Charanam!

 2. the language used is

  திருக்கோவிலூர் மணி தம்பதியை அருகில் அழைத்து வர உத்தரவிட்டார். மணி அருகில் வந்ததும் பெரியவர், “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு……

  if you intended something else, clarify there itself inside the narrative….

 3. pasted from sivabgs blog

  ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களுடன் இருந்த சமயத்தில்.. ஒரு நாள் நண்பருடன் அந்த ப்ரபல உபன்யாஸகரின் நிகழ்ச்சிக்குப் போய் வந்தோம்..
  இரவு வெகு நேரம் கழித்து நாங்கள் திரும்பி வரும்வரையிலும் ஸ்ரீஸார் எங்களுக்காகக் காத்திருந்தார்கள்..
  ஸ்ரீஸார் அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு “தாமதமாகிவிட்டது ஸார் ” என்று மன்னிப்பைக் கோரினார் நண்பர்..
  உடனே ஸ்ரீஸார் ..
  ” தாமதமானால் பரவாயில்லை .. கதை கேட்கப் போயிருந்தேளே .. அவன் ஸ்வாமியைப் பத்தி கதை சொன்னானா .. அல்லது கதை விட்டானா .. அதை முதலில் எனக்கு சொல்லு ! ”
  என்று புன்முறுவலுடன் கேட்டார்கள்..
  பிறகு ஸ்ரீஸார் ஆரூரனைப் பார்த்து அவர்கள் எழுதிய ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகத்தில் ஒரு பக்கத்தில் இருந்த –
  “தூயவர் மேன்மையை மிகைப்படுத்தும் சீடர்கள் பாமரன்”
  ” போலியையும் அஸலையும் ஒன்றாகப் போற்றுபவர்கள் பாமரன்”
  என்னும் வரிகளைச் சுட்டிக் காட்டி வாசிக்கச் சொன்னார்கள்..
  ….
  ஸ்ரீபெரீவாளின் திவ்ய சரித்ரம் .. மஹிமைகளைப் பற்றி அநேக புஸ்தகங்களும்.. பகிர்வுகளும் மழைபோலத் தொடர்ந்த வண்ணம் உள்ளன..
  இவரைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு .. அன்று ஸ்ரீஸார் போட்ட கேள்விதான் நினைவுக்கு வருகிறது..
  சமீப காலமாக , பக்தி அல்லது ஆர்வம் காரணமாக நடக்காத சம்பவங்களையோ அல்லது ஸ்ரீயவாளின் வாழ்வுக்கும் , வாக்குக்கும் முரணானவற்றையோ ஸ்ரீமடத்திற்கே தொடர்பற்ற சிலர் அச்சுப் போடுவதும்.. உபந்யஸிப்பதும்..
  தொடர்ந்து பலர் அவற்றை முகநூலில் வித்யாசமான தலைப்புகளை போட்டு.. காபி.. பேஸ்ட் செய்து வெகுஜன விநியோகம் செய்வதும்…
  ..ஸ்ரீயவாளையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்து வரும் பல எளிய பக்த ஜனங்களை பெரிதும் வருந்தச் செய்துள்ளது..
  இன்று காலை “மஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்.” என்று நம்மை அதிரவைக்கும் திடுக்கிடும் தலைப்பிட்டு ஒரு மேட்டரைப் பதிவிட்டிருக்கிறார் ஒரு நண்பர்..
  சமயங்களில் இவற்றையெல்லாம் படிக்க வேணுமா .. என்றும் தோணுகிறது..
  ஏற்கனவே ஸ்ரீசங்கர பகவத்பாதாள் காலம் மற்றும் அவர்கள் ஸ்தாபித்த மடங்கள் விஷயத்தில் ஸ்ரீயவாள் பலகாலும் அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டிருக்கும் உண்மைகளுக்கு மாறாக மனம்போன போக்கில் உளறிவைக்கும் இவர்களால் ஸ்ரீமடத்திற்கும்.. சிஷ்யாளுக்கும்,.. உண்மைக்கும் .. பிற்காலங்களில் ஈடு செய்ய முடியாத இழப்பே ஏற்படும்..
  நவீன எழுத்தாளர்கள் .. ஸ்ரீயவாள் பற்றி எழுதும் முன் .. ஸ்ரீமடத்திற்குச் சென்று ஸ்ரீசந்த்ரமௌளீச்வரரை வணங்கி, அதிஷ்டானங்களை தரிசித்து, ஸ்ரீமதாசார்யர்களை நமஸ்கரித்து ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு , மனமுருகி பிரார்த்தனை செய்து..
  ..அங்குள்ள அதிகாரிகளிடமும், பெரியோர்களிடமும் உங்களது நோக்கம் பற்றித் தெரிவித்து .. ஸ்ரீமடம் பற்றியும், ஸ்ரீயவாளைப் பற்றியும் விஷயங்களை நன்கு கேட்டறிந்து.. பதிவு செய்து கொண்டு ..
  ..எழுதிய பின் தக்கவர்களிடம் சரிபார்த்து பின் வெளியிட்டால் நல்லது ..
  ஏதோ எளியவர்களின் மனத்திற்குப் பட்டதைச் சொல்லிவைக்கிறோம்..
  ..மற்றவை எசமான் திருவுள்ளம்…

 4. HARA HARA SANKARA JAYA JAYA SANKARA. jJANAKIRAMAN. NAGAPATTINAM

 5. false story….. as per balu swamigal and other sishyas, periyava will not give prasad or see people with such circumstances…(vridhhdhi etc).

  • Just one of the hundreds of false stories circulating on Internet and Social Media.
   So no surprise that this is one more!
   Such false narratives are an apachaaram to the Great Avatara Purusha !

   • narasimhan sir and venkat sridharan sir please read it properly, it is clearly written that mani came from thirukoilure to kanchipuram to have periyava darisanam and he went back by taxi to thirukoilure and when he entered his house the neighbors told that your daughter just delivered a baby. so to travel by car from thirukoilure to kanchipuram at least it takes 2 and half hours, so when periyava gave prasadam she had not yet delivered the baby and there was no vriddhi. I request without reading or understanding properly please don’t give judgement that it is a false story and please don’t try to instill doubt in other devotees minds, sorry if i have hurt you.

Leave a Reply

%d bloggers like this: