குங்குமத்துக்கு அடியில் ஒரு அழகான பவுன் காசு மாலை!

Thanks Sri varagooran mama for sharing this wonderful article….

All our efforts go waste if we do not follow iur guru’s advice. In todays world we share in social media even for giving Rs 5/- alm to a needy people. We should stop several of those things and learn from staunch devotees like M.S amma and Sri Sadasivam mama on how to lead life. They were so blessed to be guided by mahaperiyavaa ….

This is an important incident and message for all of us…

 

MS_praying_periyava

எம்.எஸ்.இன்று நூற்றாண்டு விழா 16-09-2016

ஸ்பெஷல் போஸ்ட்-வரகூரான்.
சொன்னவர்-ரா.வீழிநாதன்
நன்றி-பாலஹனுமான்

மகாபாரதத்தில் பீஷ்மர், துரோணர், கிருபாசார்யார், சல்யர் — இந்த நான்கு பேரும் பீஷ்ம பர்வத்தில் சொல்கிறார்கள்:

“மனிதன் செல்வத்துக்கு அடிமைப்பட்டவன். செல்வம் ஒரு போதும் மனிதனுக்கு அடிமைப்படாது. இது சத்தியம். நான் செல்வத்தினால் திருதராஷ்டிர புதல்வர்களால் கட்டுப்பட்டுவிட்டேன்” என்கிறார்கள்.

இந்த உலக நியதியை முறியடித்தவர் எம்.எஸ். செல்வத்துக்கு இம்மியும் கட்டுப்படாமல் அதனைத் தனக்குச் சேவகம் செய்ய வைத்தார். செல்வம் சம்பாதித்து, அதிலே கொஞ்சம் தனக்கென வைத்துக்கொண்டு தர்ம காரியம் செய்கிறவர்கள் நிறைய பேர். ஆனால் தர்மம் பண்ணுவதற்காகவே சம்பாதித்தார் எம்.எஸ்.அம்மா. அத்தனையும் தர்மத்துக்கே கொடுத்தார். இவ்வளவு தர்மம் செய்துவிட்டு அதைச் ‘செய்தேன்‘ என்று சொல்லிக்கொண்டால் அது அழிந்து போய் விடும் என்பது வேதவாக்கு.

எம்.எஸ்.அம்மா ஒரு போதும் தமது தர்ம காரியங்கள் பற்றிப் பேசியதில்லை; தப்பித் தவறிக் கூட பேசியதில்லை. அவ்வளவு ஏன்… தர்மம் பண்ணினேன் என்று அவர் நினைத்தது கூட இல்லை. அந்த எண்ணமே இல்லாமல் வாழ்ந்தார்.

“தாமரை நன்றாக வளர வேண்டுமானால் தண்ணீர் தெளிவாக, பரிசுத்தமாக இருக்க வேண்டும்; தண்ணீர் தெளிவாக இருக்க வேண்டுமானால், தாமரை அதிலே வளர வேண்டும்”  என்கிறது யோக வாசிஷ்டம் (ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் செய்த உபதேசம் யோக வாசிஷ்டம்).

சதாசிவமும், எம்.எஸ்.ஸும் இந்தத் தாமரையும் தண்ணீரும் போல் திகழ்ந்தார்கள்.

காளிதாஸ் ஸம்மான்‘ என்று மத்தியப் பிரதேச அரசு வழங்கிய விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டது. அதைப் பெற்று வந்த அன்றே சதாசிவம் எனக்குப் ஃபோன் செய்து அவருக்கே உரிய முறையில் அழைத்தார். “வீழி! கார்த்தால இங்கே காஃபி சாப்பிட வந்துடேன்.”

போனேன். ஒரு லட்ச ரூபாய் பணத்தை அப்படியே மஹா பெரியவர்களிடம் தர வேண்டும் என்று சொன்னார். பெரியவர் காதில் விஷயத்தைப்-போட்டபோது “பணத்தை வைச்சுண்டு என்ன பண்றது ? எட்வர்ட் அரசன் முத்திரை போட்ட பவுனாக வாங்கிக் கொடுத்துவிடச் சொல்லு” என்று ஆணை பிறந்தது. அதற்கு இணங்கி அன்றைய விலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்குப் பவுன் காசுகள்  வாங்கிச் சமர்ப்பிக்கப்பட்டது.

எம்.எஸ். சதாசிவத்தின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டவர், ஒரு தட்டு நிறைய குங்குமப் பிரசாத்தைப் போட்டுக்கொடுத்தார். குங்குமத்துக்கு அடியில் ஒரு அழகான பவுன் காசு மாலை அவர்கள் சென்ற பின்பு பெரியவர்- சொன்னார்கள்.

“அவர்களிடம் பவுன் பெற்றுக் கொண்டேன். அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததினால் ‘இனிமே இதை இன்னொருத்தருக்கு தானமாகக் கொடு’ என்று சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் சொல்ல முடியாது இல்லைய!”



Categories: Devotee Experiences

8 replies

  1. Iread this story else where also.It is Paramacharya’s letter to Sri.P.V.R.K.Prasad that put him into immediate action Paramacharya helped many devotees on several occasions Iam fortunate to have the darshan of Paramacharya at Kanchi mutt on two occasions.Itook my wife to the mutt in 1988 just a few days before her heart operation to get the blessings of Lord Paramacharya.Paramacharya blessed her and the operation was very successful.My wife is leading a normal life thanks to His divine blessings.

  2. MS amma well remembered. Mahaperiava charanam.

  3. the famous quote says ” Give instantly b4 another hand of yours come to know”! lotz of lessons from this incident.! thank you for sharing !!!!!!!

  4. 1st time coming across this incident. So Great

  5. Maha Periyavas plans can never be fathomed. I only regret having lived during his days failed to have his dharsan as many times as possible!

  6. Jaya Jaya Sankara Hara Hara Sankara. There is a saying” COUPLES OF SIMILAR NATURE ARE VERY RARELY CREATED” What a great couple in this KALI YUGA..Their philanthropic attitute and actions will ever remain.Let us try to emulate atleast one percent of their actions and be of service to humanity.Smt M.S amma conducted a free concert for the establishment of a T.B.sanatorium at Sengipatti near Vallam in Tanjore District in the 40’s and but for her the sanatorium would not have come.Many very poor people were befited by their noble gesture. MAY THEIR TRIBE INCREASE. Janakiraman. Nagapattinam.

  7. Super reverence on her centenary day. Really great M S Amma and Sadahashivam Mama and our Super Periyava.

  8. கொடை வள்ளல் M.S அம்மா,சதாசிவம் தம்பதியை பற்றி அறிந்து கொண்டோம்.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading