அந்த ரெண்டு பாதுகைகளுமே என்னிடம் இருக்கட்டும்!

Thanks to Smt Saraswathi Thyagarajan Mami for the share…

Periyava_Padhuka_Sudhan

 

பெரியவா சுருட்டப்பள்ளியில் முகாம்.இரண்டு ஜோடி மரப்பாதுகைகள் எடுத்துச் சென்றிருந்தேன். நான் பூஜை செய்ய ஒரு ஜோடி அநுங்க்ரஹிக்க வேண்டும் என்ற ப்ரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்பது என் உள் மனசு ஆவல்.

பெரியவாளிடம் பாதுகைகளை சமர்ப்பித்தேன்.

‘என் பூஜைக்கு ஒரு ஜோடி அனுக்ரஹிக்க வேண்டும்’ பெரியவாள் இரண்டு ஜோடியையுமே தன்னிடத்தில்
நகர்த்தி வைத்துக் கொண்டார்! ‘நான் அனேக ஊர்களுக்குக் கால் நடையாகவே போறேன்; இரண்டு ஜோடியுமே எனக்குத் தேவைப்படும்! என்னை மனசால் நெனைச்சுக்கோ அதுபோதும்’ என்று சொல்லிவிட்டார்!

பெரியவாளுக்குப் பயன்படும் விதமாக இரண்டு ஜோடியாகக் கொண்டுவந்தோமே நல்ல காலந்தான்.என்று சந்தோஷப்பட்டேன்.

1950ல் என் தகப்பனாருக்கு பெரியவா அனுக்ரஹம் செய்த பாதுகைகள் இருந்தன. என் தகப்பனார் சிவலோக ப்ராப்தி அடைந்தவுடன் யாருக்கு அந்தப் பாதுகை என திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்ததில் என் பெயருக்கே வந்தது. அது சாக்ஷாத் பரமேச்வரனான பெரியவா திருவுள்ளமாச்சே!

பகிர்ந்தவர் டி.சுப்ரமணியன் சென்னை 93Categories: Devotee Experiences

4 replies

  1. The padhukas above were drawn by Sundhan Kalidas @ Chennai. While the one on the left side are drawn after seeing MahaPeriyava’s Padhugas from one if his postures, the MahaPadhugas on the right are drawn after seeing the photograph of the original MahaPadhugas that He Himself left them at our thatha’s home in Sathanoor. My paternal grandfather was serving MahaPeriyava when He was at Kumbakonam Mutt. These MahaPadhugas are still at our home in Kulithalai.

  2. Jaya Jaya sankara Hara Hara Sankara..Sri S. Subramanian by the grace of Sri Maha Swami got an opportunity to perform Abishegam ans Arcanai on an very aupicious day like Jayanthi Mahotsavam..That is the will of Sri Paramacharya for a person who wanted the padukais. Janakiraman. Nagapattinam

  3. இரு ஜோடி பாதுகைகள்

    சில வருடங்களுக்கு முன் உத்தர சிதம்பரம் என்று அழைக்கப்படும் சதாரா கோவிலுக்கு சென்றிருந்தபோது அங்குள்ள மஹாபெரியவாளின் பாதுகைகளை சிரத்தால் வணங்கும் பாக்யம் கிடைத்தது. பின்பு காஞ்சிபுரம் சென்றபோது மடத்தில் இரண்டாவது ஜோடி பாதுகைகளை மறுபடியும் வணங்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க ஆனந்தம் அடைந்தேன்.

    மறு வருடம் சென்னை சென்ற போது, அபிராமிபுரத்தில் உள்ள சங்கர மடத்தில் பெரியவா ஜெயந்திக்கு சில பஜனை பாடல்கள் பாட அழைப்பு வந்தது. மகிழ்ச்சி அடைந்தேன். ஜெயந்திக்கு இரண்டு நாட்களுக்கு முன், நிர்வாகி அவசரமாக வெளிநாடு போகவேண்டிய நிர்பந்தத்தால், ஜெயந்தியன்று காலையில் நடந்த வேண்டிய முக்ய சடங்குகளின் பொறுப்பை என்னிடம் கொடுத்து விட்டார். அஹோ பாக்யம் – மிக்கவும் எதிர்பாராத வகையில், மஹாபெரியவாளின் இரு ஜோடி பாதுகைகளுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்யும் பாக்யம் கிடைத்தது.

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!

  4. Smt Saraswathi Thyagarajan maamikku aneka namaskaram. How lucky and Blessed she is!

Leave a Reply

%d bloggers like this: