ஸ்ரீ சுவாமிநாத குருப்புகழ்

Another stuthi from Saanuputhiran. Thanks Suresh….

Muruga TMSkanchi-acharya7

பெரியவா சரணம்.

சங்கரா! அன்று எம் அருணகிரியார் திருத்தணிகை வேலவனை பிரார்த்தித்து, நோயினால் துன்பப்படாத வாழ்வு கேட்டுப் பாடிய திருப்புகழின் சந்தத்திலே அடியவனும் இன்றைய தினம் எங்கள் ஸ்ரீ சுவாமிநாத குருவான ஸ்ரீ மஹாஸ்வாமிகளான உங்களை “குருப்புகழ்“ பாடிப் போற்றுகின்றேன், பராபரனே!

ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர…

இருளென ரோக முடமதன் வாச
மெதுமணு காத …….. கடமோடே

யினிநலி யாத நிலைதனி லேகி
பெறுநல மாக …….. சுகமோடே

பெருவள மீயுங் குருவடி தேட
வரமெனக் கீயு …….. முதல்வோனே

பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாசி …….. அருள்வாயே

வரமொடு கூடி யறிதற்கு மாதி
குருவரு ளாசி ……… பெறவேண்டி

திருவுரு காண மனமுற நாடி
கதியுன தாகி ……… வருவேனே

தருநிழல் போலே யருளிட வந்த
சந்திர சேகர ……… குருநாதா

இருவினை களையு மருட்தல காஞ்சித்
திருத்தல மேவு ……… பெருமாளே!



Categories: Bookshelf

Tags:

4 replies

  1. Hara Sanakara Jaya Jaya Sankara. I find no words to express my appreciation. Excelantly composed.Realy enchanting. Maha Swamis grace. Janakiraman. Nagapattinam

  2. you are a blessed soul,Sir.
    what structure and metre in your song ! amazing talent .full of bhakthi and reverence and an yearning for Guru charana Darishanam
    Ayyarappan

    • சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். மிக்க நன்றி, சார்.

Leave a Reply

%d bloggers like this: