வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?

Kamakshi Will Take Care

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சதாரா அருகிலுள்ள ஸஜ்ஜன் கட் என்ற மலையில், சமர்த்த ராமதாஸ் சுவாமிகள் கோவில் இருக்கிறது.
செங்குத்தான மலையில் சிரமப்பட்டு ஏறிச் சென்றார்கள், பெரியவாள்.

அந்த மலையில்,’அய்யாபுவா’ ‘அன்னாபுவா’ என்ற இனங்களைச் சேர்ந்த மலைவாசிகள் வாழ்ந்து
வருகிறார்கள்.

மலை ஏறி வந்திருக்கும் மகானுக்கு காணிக்கை செலுத்த வேண்டுமே? காசு – பணம் ஏது?.

செழுமையான வாழைத்தோட்டங்கள் நிறைந்த மலை. அவர்கள் உணவும் வாழையை மூலப்பொருளாகக்
கொண்டது தான்.

காய்ந்து போன வாழைக்காய்களின் தோலை நீக்கிவிட்டு, உட்பகுதியை மாவாகச் செய்வார்கள்.

அந்த வாழைக்காய் மாவை, பெரியவாளுக்கு சமர்ப்பித்தார்கள் – சங்கோஜத்துடன்.

“இது என்ன மாவு?”

“வாழைக்காய் மாவு…”

“இதை எப்படிச் சாப்பிடறது?”

“இட்லி,தோசை பண்ணலாம்…”

சிறு புன்னகை

” ஓ! வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

“ஆமா, சாமி…”

பெரியவாள், கள்ளங்கபடமற்ற அந்த மக்களின் ஆனந்த முகங்களைப் பார்த்து பெரிதும் சந்தோஷப்பட்டார்கள்.

அன்று முதல், பெரியவாள் பிக்ஷைப் பக்குவத்தில், வாழைக்காய் மாவு நீங்காத இடத்தைப் பெற்று விட்டது
தானியங்களான உணவை முற்றிலுமாக நிறுத்தி விட்டிருந்த பெரியவாளுக்கு வாழைக்காய் மாவு
ரொம்பவும் கைகொடுத்தது.

அய்யாபுவாவும்,அன்னாபுவாவும் நம்மைக் காட்டிலும் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஆம் அவர்கள்
மலைச் சிகரங்களில் அல்லவா வாழ்கிறார்கள்.



Categories: Devotee Experiences

6 replies

  1. Maha Periyava ThiruvadigaLe CharaNam! Holy Episode about His Food! How much Blessed are these Ayyabhuva and Annabhuva people! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  2. Jaya Jaya Sankara Hara Hara Sankara. The poor adivasis bikshai is well received by our Holiness Sri Maha Periyava and he also continued to take the “Vazakkai Powder” regularly from that time onwards.Sri Swami has followed the old saying ” Let noble toughts come to us from every side'” Instead of rejecting the idea as one that has come from adivasis he has accepted it and used the same later also.That is Maha Periyava. Janakiraman. nagapattinam.

  3. English translation

    Vazhaikkai Maavilrundhu Idli paNNalama ?

    Compiler: TS Kodandarama Sharma
    Typing: Varagooran Narayanan

    There is a temple for Swami Samartha Ramadas at a hill by name Sajjangad near Satara. Periyava climbed the steep hill with difficulty.
    Tribal people belonging to the clans ‘Ayyabuva’ and ‘Annabuva’ used to live on that hill.

    These people did not have any cash or coins to offer to Periyava. The hills were full of healthy banana groves. Their diet used to be predominantly banana based.
    They used to discard the skins from dry raw bananas and grind the pulp to a paste. Hesitatingly, they offered this ground paste to Periyava.

    “What paste is this ?”
    “It is the paste made from raw bananas”
    “How is this eaten ?”
    “This can be made into Idlis and dosas”
    A smile from Periyava.
    “Oh, is it possible to make idlis from banana paste ?”
    “Yes, ‘Saami'”

    Periyava felt very happy looking at the beaming faces of those innocent people.
    From that day onwards, raw banana paste became an important part of Periyava’s diet
    Periyava, who had given up all kinds of pulses, found banana paste very useful.

    ‘Ayyabuvas’ and ‘Annabuvas’ have attained a position much higher than us. Yes, after all, aren’t they people who live on hills ?

  4. Dear Mahesh,

    Namaskarams.

    I am blessed to read this article and more particularly the DIVINE PICTURE with HIS MESSAGE, when I opened the laptop after we were shielded by Him in a Major Accident on the High Way from Chennai-Bangalore, (Our Car was hit from Behind by a highly speeding lorry with full load). He has blessed me to be at His Divine Abode during Pradosha Pooja at Adhishtanam of Sri Matam.

    HIS MESSAGE WAS DELIVERED TO ME IN THIS PICTURE is to me apart from many miracles before and after the incident….

    We are blessed to be at His Divine Foot

    Jaya Jaya Shankara Hara Hara Shankara

    Om Namo Bagawathe Sri Ramanayah

  5. An another interesting story on the lines of Vaazhakai Powder
    http://periva.proboards.com/thread/2427

  6. English translation please

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading