ஸ்வர்ணத்வீபம்தான் (லங்கை) ஸெரென்டீப்

Periyava_laying_down

What a divya darshanam in this photo!!

கட்டுரையாளர்-ரா.கணபதி.
கருணைக் காஞ்சி கனகதாரை-புத்தகம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன். Thanks mama for the share

(பொன் பற்றிய கட்டுரையில் ஒரு பகுதி)

அமரம் என்ற ஸம்ஸ்கிருத அகராதியில் பொன்னுக்குச் சுமார் இருபது பெயர்கள் இருப்பதைக் கடகடவென்று விரல்விட்டு எண்ணியவாறு ஒப்பித்தார் பெரியவா.

ஸ்வர்ணம், ஸுவர்ணம், கனகம், ஹிரண்யம், ஹேமம், ஹாடகம், தபநீயம், சாதகும்பம், காங்கேயம், பர்மம், கர்புரம், சாமீகரம், ஜாதரூபம், மஹாரஜதம், காஞ்சனம், ருக்மம், கார்த்தஸ்வரம், ஜாம்பூநதம் என்று அஷ்டாதச (பதினெட்டு) பெயர் இருப்பதைக் கூறி, அடுத்தாற்போல ‘அஷ்டாபதம்’ என்றும்
பத்தொன்பதாவதாகப் பொன்னுக்கு ஒரு பெயரிருப்பதைக் காட்டினார்.

‘பர்மம்’ என்ற பெயர் பற்றி தமது ஆராய்ச்சியறிவின் அரிய சுவை காட்டினார்.

“வெளி தேசத்தவர் ‘எல் டொராடோ’ என்ற மாதிரியே நாமும் ‘ஸ்வர்ண த்வீபம்’ (பொற் தீவு) என்று
சொன்னதுண்டு.அப்படிப் பொன் விளையும் பூமியாகச் சொல்லப்பட்ட பர்ம தேசந்தான் பர்மா

என்றாகியிருக்கலாம். ஸாதரணமாகச் சொல்வது, ‘பிரஹ்ம தேசம் என்பதுதான் ‘பர்மா தேசம்’
என்றாயிற்று என்று, ஆனால் நான் வேற விதமாக நினைக்கிறேன் என்றால்,பர்மா மாதிரியே அகண்ட
பாரதத்தில் அங்கமாக இருந்த லங்கைக்கு ஸ்வர்ணத்வீபம் என்றும் ஒரு பேர் வழங்கியதால்தான்.

“வெள்ளைக்காரர்களுங்கூட லங்கையை ‘ஸெரென்டீப்’ ‘ஸெரென்டீப்’ என்று சொல்லி வந்தார்கள்.

ஸ்வர்ணத்வீபம்தான் ‘ஸெரென்டீப்’ உத்தேசிக்காமலே, ஃப்ளூக்’காக ஏதாவது கண்டுபிடிப்பதை
‘ஸெரென்டிபிடி’ (serendipity) என்று இங்கிலீஷில் சொலவது இந்த ‘ஸெரென்டீ’பிலிருந்துதான்.

“முதலில் நான் என்ன நினைத்தேன் என்றால், இந்தியாவைக் கண்டுபிடிக்கப்போன கொலம்பஸ்
ஃப்ளூக்காத்தானே அமெரிக்காவைக் கண்டுபிடித்தது. அதுதான் இந்தியா என்று அவர் நினைத்ததால்தானே.
இன்றைக்கும் அந்தக் கண்டத்தின் ஆதி ப்ரஜைகளுக்கு ‘Red Indians’ என்றே பேர் இருப்பது? அந்த மாதிரிதான் வேற யாரோ ‘ப்ளூக்’கா லங்கையை – ஸெரன்டீப்பை – டிஸ்கவர் பண்ணி,அதிலிருந்தே ப்ளுக் டிஸ்கவரிக்கெல்லாமே ‘ஸெரென்டிபிடி’ என்று பேர் வந்ததாக்கும் என்று நினைத்தேன் அப்புறந்தான் தெரிந்தது அப்படியில்லை;

யாரோ ஒரு நாவல் எழுதினான். (ஹொரேஸ் வால்போல் எழுதிய The Three Princes of Serendip) அதிலே முக்ய கதா பாத்திரங்கள் ஸெரென்டீப்பைச் சேர்ந்த மூன்று ராஜ குமாரர்கள்; அவர்கள் உத்தேசிக்காமலே ஃப்ளூக்காக அநேக டிஸ்கவரி செய்த்தாகக் கதை. அதை வைத்துத்தான்
serendipity என்ற வார்த்தை வந்தது என்று.



Categories: Deivathin Kural, Upanyasam

3 replies

  1. English translation please.

  2. English translation please

  3. Wonderful thinking.Mahaperiyava always proves his identity as Eswara.

Leave a Reply

%d bloggers like this: