27. Gems from Deivathin Kural-Karma Margam-Karma is the Beginning of Yoga

album2_18

Jaya Jaya Sankara Hara Hara Sankara – What a great insight by Sri Periyava! Thanks to our sathsang seva volunteer for the translation. Ram Ram

யோகத்தின் தொடக்கம் கர்மமே

யோகம் என்றால் சுவாசத்தை அடக்கி அடக்கியே சிலை மாதிரி உட்கார்ந்திருப்பதுதான் என்றுபொதுவாக நினைக்கிறார்கள். ‘யோகம்’ என்பதற்கு நேர் அர்த்தம் சேர்க்கை என்பது. பல வஸ்துக்களோடு நாம் வாழ்க்கையில் சேர வேண்டியதாகிறது. ஆனால் இந்தச் சேர்க்கை எதுவும் நிரந்தமாக இருக்கவில்லை. அதனால்தான் மனசு கிடந்து ஆடிக்கொண்டேயிருக்கிறது. இப்படியில்லாமல் முடிந்த முடிவான ஒரே வஸ்துவுடன் எந்தநாளும் சேர்ந்துவிட்டோம், அதற்கப்புறம் நாம் என்று ஒன்று, அதிலிருந்து பிரிந்து வரவே முடியாது என்று ஆக்கிக் கொண்டுவிட்டால், அதுதான் நிஜமான யோகம். நம் மனசுகளுக்கெல்லாம் மூலமாக இருக்கிற பரமாத்மாதான் அந்த ஒன்று. மனசை மூலத்தில் திருப்புவதற்காகவே யோகிகள் சுவாசத்தை அடக்குகிறார்கள்! ஏனென்றால் எண்ணம் உதிக்கிற வேர் எதுவோ, அதுவேதான் சுவாசத்தின் வேரும் ஆகும். எனவே சுவாசம் மூலத்தில் நின்றால் மனமும் அதன் மூலத்துக்குப் போய் அடங்கிவிடுகிறது.

யோகம் என்பதற்கு எதிர்ப்பதம் ‘வியோகம்’ விட்டுப் போவதை ‘வியோகம்’ என்கிறோம். உடம்பைவிட்டு ஒருவர் செத்துப் போய் விட்டால் ‘தேக வியோகம் ஆகிவிட்டார்’ என்று சொல்கிறோம் அல்லவா?

ஒரு தினுசான வியோகம் வந்துவிட்டால் அதுவே யோகம் ஆகிவிடும் என்று பகவான் கீதையில் சொல்கிறார். ஏதோ ஒன்றில் வியோகம் வந்தால் — அதாவது, எதுவோ ஒன்றை விட்டுவிட்டால் அதுவே யோகம் என்கிறார். அந்த ஒன்று என்ன? துக்கம் என்பதே. துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரித்துத் தள்ளிவிட்டால் அதுவே யோகம் என்கிறார். (தம் வித்யாத் து:க ஸம்யோக வியோகம் யோக ஸமஞிதம்.)

லோக ரீதியில் நாம் சொல்கிற ‘இன்பங்களும்’ கூட இந்தத் துக்கத்தைச் சேர்ந்தனவே. பரமாத்மாவைப் பிரிந்திருக்கிற எல்லா அநுபவமுமே துக்கம்தான்.

சித்தம் ஒடிக்கொண்டே இருப்பதால்தான் இன்ப துன்ப அநுபவங்கள் ஏற்படுகின்றன. சித்தம் சஞ்சலிக்காமல் நிறுத்திவிட்டால் இவை இல்லை. ஒரே முனையைவிட்டு அகலாமல்—ஏகாக்ரம் என்று சொல்வார்கள்—இருக்கச் சித்தத்தைப் பழக்குவதே சித்தசுத்தி. யோக ஸித்திக்கு இதுவே உபாயம். பொதுவாக நாம் ‘யோகிகள்’ என்று சொல்கிறவர்களைப் போல் எல்லோரும் ஆரம்பத்திலேயே சுவாச பந்தம் செய்துகொண்டு உட்காருவதில்லை. ஏதாவது ஒரு நல்ல விஷயத்திலே நாம் பூரணமாக ஈடுபடப் பழகினால், அப்போது சித்தம் கூடியமட்டும் அழுக்குப் படாமல் இருக்கும். சித்தத்தை நேராக அடைக்க முயன்றால் அது திமிறிக்கொண்டு நாலாதிசையும் பாயத்தான் செய்யும். எனவே சித்தத்தில் கவனம் வைக்காமல் ஏதாவது ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட்டுவிட்டால் அப்போது சித்தத்துக்கு சஞ்சலிக்க இடம் குறைந்து போகும்.

பழைய நாளில் அரிகண்டம் என்று போட்டுக்கொள்வார்கள். படுக்காமலே நியமமாக இருக்கவேண்டும் என்பதற்காக கழுத்திலே பெரிய கம்பி வளையம் போட்டுக் கொள்வார்கள். அதற்கு அரிகண்டம் என்று பெயர். ஒருத்தர் இதைப் போட்டுக் கொண்டபின் இஷ்டப்பட்டால்கூட படுக்க முடியாது. அந்த மாதிரி, நம் சித்தத்தை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் போகாதபடி செய்வதற்கு அரிகண்டம் மாதிரி, ஸத் காரியங்களில் பூரணமாக தலையைக் கொடுக்க வேண்டும்.

அநேக நியமங்களோடு பெரிய யக்ஞம் செய்வது, விரதம் இருப்பது, பிரம்மாண்டமான கோயில் கோபுரங்களைப் பார்த்துப் பார்த்துக் கட்டுவது, குளம் வெட்டுவது என்றிப்படியெல்லாம் முன்னே பல காரியங்களைச் செய்து வந்தார்களே, இவையெல்லாம் அந்தந்த லட்சியத்தோடு நின்றுவிடவில்லை. இவற்றின் முக்கியமான லட்சியம் சித்தத்தை ஒருமுகப்படுத்தி சுத்தமாக்கப் பழக்குவதேயாகும். இந்த ஸத்காரியங்களின் நடுவிலும் அநேக கஷ்டம், அநேக அவமானம் எல்லாம் வரத்தான் செய்யும். ஆனாலும் காரியத்தை முடித்தாக வேண்டும் என்பதால், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மேலே மேலே எடுத்துக் கொண்ட வேலையில் போய்க் கொண்டிருப்பார்கள். இதுவே சித்த சுத்திக்கு நல்ல உபாயமாகும். அப்புறம் சுவாசபந்தம், தியானம் எல்லாம் வைத்துக் கொள்ளலாம்.

முடிவிலே, ஒரு கழக்கோடி எப்படி எந்த அழுக்கிலும் பட்டுக்கொள்ளாமல் கிறுகிறு என்று உருளுகிறதோ — அந்தக் கழக்கோடி மேல் நாம் கொஞ்சம் விபூதியைப் பூசினால் அதைக்கூட உதிர்த்துவிட்டு ஓடும் — அப்படி எந்த இன்ப துன்பத்திலும் ஒட்டாமல் பரமாத்மாவை நோக்கி ஓடி அவரைச் சேர்ந்துவிடுவோம். இந்தச் சேர்க்கைதான் யோகம் என்பது. அதுதான் நம் மூலமான நிலை. அதுவேதான் முடிவான நிலையும். நடுவாந்திரத்தில் நாம் எப்படியோ மாறிப் போயிருக்கிறோம். அதனால் அந்த நிலை இப்போது நமக்குப் புரியவில்லை. நமக்குப் புரிகிற இடத்திலிருந்து அந்த நிலைக்குப் போக வேண்டுமானால் கர்மத்திலேயே ஆரம்பிக்கவேண்டும்.

Karma is the beginning of Yoga

Many people think that Yogam (Yoga) is the process of controlling one’s breath and sitting still like a statue. The direct meaning of Yogam is ‘to combine or merge’. In our lives we need to merge (combine) with many things. But none of these combinations are permanent.  The mind is also constantly wavering. On the contrary, if we can join with the thing that is the ultimate and if we remain inseparable from it, that is true yoga. Paramatma, the origin of our mind is that ‘ultimate thing’. Yogis control their breath to turn their mind inwards – towards that ‘Original’ thing. The root of all thoughts is also the root of our breath. So if the breath can be focused towards that ‘Origin’, the mind too reaches there and settles down.

The opposite of Yogam is ‘Viyogam’. We use the word Viyogam to indicate separation. When a person dies he leaves his body. We refer to this as ‘Deha Viyogam”.

“If we can bring about a kind of Viyogam, that itself will become Yogam” says Sri Krishna in the Gita. If we can bring about Viyogam in a specific thing, i.e if we leave it, then that is Yogam- says He. What is that one thing? It is ‘Sorrow’. He says ‘if you are able to keep sorrow away- without it getting attached to you, that is Yogam’.

“Tam vidyaad dukha samyoga viyogam yoga samjnitam’ ( 6: 23)

Even ‘worldly pleasures’ are a form of this sorrow. All experiences where one remains separated from Paramatma are sorrowful.

Happiness and sadness occur because the mind is constantly wandering. If the mind could be stopped from wandering, there is no happiness or sadness. Training the mind to pointedly focus on a single object develops purity of mind. This is referred to as ‘Ekagram’. This is the means to attain Yoga Sidhi. Only Yogis are capable of controlling  their breath and sitting still, right from the beginning. This is not possible for others. If we can involve ourselves completely in a good activity, the mind will remain pure. If we directly try to control the mind, it will become unmanageable and run in different directions. Therefore, without paying attention to the mind, if one gets involved in a good activity, then the mind will have less chance of wandering.

In the olden days devotees used to wear a ‘Arikantam’. It is a big iron ring worn round the neck to prevent them from lying down. After wearing it, a person will not be able to lie down even if he wishes to. We too should fully immerse ourselves in good activities, which, like the arikantam, will prevent the mind from unwanted thoughts.

In earlier times, people took up many valuable activities like performing massive Yagnas, practising vrathas, constructing large Gopurams for temples, digging ponds etc. Completing these was not their only goal. The main objective was to focus the mind and develop purity of mind. While carrying out these responsibilities they would have faced many difficulties and insults. Since the work had to be completed, they used to ignore the difficulties and insults and continue with the effort. This is a good way to develop purity of mind. Control of breath and meditation can come later.

Finally, like the kazhakkodi (a spherical seed) which rolls without allowing any dust to settle on it – if we were to sprinkle some vibhuti on it, it would shake off the vibhuti and roll – we too will roll towards Paramatma and join Him, without getting attached to joy and sorrow. This ‘joining’ with Him is called Yogam. That was our original state and is the final state too.  In between we have got distorted and are not able to comprehend that state. If we have to start from where we are and reach that state, we have to start with the performance of Karma (Anushtanams).



Categories: Deivathin Kural

Tags: ,

2 replies

  1. Divine message.Namo Namaha. Janakiraman. Nagapattinam.

  2. Thanks to Srimaan Sai Srinivasan for posting such great treasures and thanks also to the selfless volunteers who do such a great job in translation.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading