Thanks to Sri Rajesh Gurukripa for sharing this in whatsapp!
சேங்காலிபுரத்தைச் சேர்ந்த தீட்சிதர் ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். அவர் பெண்ணுக்குப்
பதினைந்து வயதாகி விட்டதாம். சரியான வரன் குதிரவில்லையாம். அதனால் அந்தணர்களில் வேறு
உட்பிரிவைச் சேர்ந்த பையன் கிடைத்தால் விவாகம் செய்து கொடுக்கலாமா என்று கேட்டார்.
“கூடாது” என்று நிர்த்தாட்சண்யமாகப் பதில் கூறிவிட்டார்கள் பெரியவா.
அதே சமயம் ஒரு கல்யாணப் பத்திரிகையுடன் ஒரு தம்பதி வந்தனர்.
“பெண்ணுக்குக் கல்யாணம்…”
“பையனுக்கு சொந்த ஊர் எது.?”
சொன்னார்.
“அங்கே எல்லோரும் பிருஹசரணம் ஆச்சே.? நீ வடமன்…”
தகப்பனார் நெளிந்தார். இந்த மாதிரி கேள்வியை எதிர்பார்க்காததால் சங்கடப்பட்டார்.
“பெண்ணுக்கு இருபத்தொன்பது வயசாயிடுத்து, வடமப் பையன், தகுந்த வரன் கிடைக்கல்லே…”
பெரியவாளின் ஜாடையைப் புரிந்து கொண்டு புடவை, திருமாங்கல்யம், பூர்ணபலம் (மட்டைத்
தேங்காய்) எல்லாம் கொண்டு வைத்தார் சிஷ்யர்.
பெரியவா தொட்டு, ஆசிர்வதித்துத் தம்பதியிடம் கொடுக்கச் சொன்னார்கள்.
மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் வந்தனம் செய்து விட்டுப் போனார்கள்.
தீட்சிதரைப் பார்த்தார்கள் பெரியவா.
“என்னடா இது.!…இந்தச் சாமியார் நமக்கு ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயம்
சொல்கிறாரே என்று பார்க்கிறாயோ.?”
தீட்சிதர் பதில் சொல்லவில்லை.
“த்விஜர்களுக்குக் கன்னிகா விவாகம் தான் சொல்லப்பட்டிருக்கு. சாரதா சட்டத்துக்குப் பயந்து அந்தப் பழக்கம் போயே போச்சு.!
“பெண்கள் விவாகம் ஆகாமல் இருக்கக் கூடாது. சாஸ்திரத்தில் உட்பிரிவுகளுக்குள் கொடுக்கல்-வாங்கல்
கூடாது என்று சொல்லப்படல்லே, ஆனா, ரொம்பக் காலமாக ஒரு சம்பிரதாயத்தை நாம் அனுஷ்டித்துக்
கொண்டிருக்கோம். முடிந்தவரை அதை மாற்றாமல் இருப்பது தான் சரி
“இந்தப் பொண்ணுக்கு என்ன வயசுன்னு சொன்னாரே, கேட்டியோ.? இப்போ கல்யாணம் தப்பிப் போனால், மறுபடி எப்போ வருமோ.? அதனால், இவர்கள் விஷயத்தில் சம்பிரதாயத்தை விட விவாகம் நடைபெற வேண்டியதுதான் முக்கியம்.
“அதோடு அவர்கள் லௌகிகர்கள். சாஸ்திரத்திலிருந்து எத்தனையோ விலகிப் போய் விட்டார்கள்.உன்
சமாசாரம் அப்படியில்லை. அக்னி ஹோத்ரிகள் குடும்பம். அதனாலே நீ சம்பிரதாயத்தை மீறக்கூடாது.. கவலைப்படாதே..”
தீட்சிதர் அடுத்த மாதமே பெண்ணின் கல்யாணப் பத்திரிகையுடன் வந்தார்.
“சம்பிரதாய விரோதமில்லாமல் நடக்கிறது”
அவருக்கு தாராளமாகவே அருள்புரிந்தார்கள், பெரியவாள்
Categories: Devotee Experiences
05-04-2014 POST in ALL Groups
“இந்தச் சாமியார் நமக்கு ஒரு நியாயம்,
இன்னொருவருக்கு இன்னொரு நியாயம்
சொல்கிறாரே என்று பார்க்கிறாயோ.?”
(உன் சமாசாரம் அப்படியில்லை.அக்னி ஹோத்ரிகள்
குடும்பம். அதனாலே நீ சம்பிரதாயத்தை மீறக்கூடாது..)
.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
சேங்காலிபுரத்தைச் சேர்ந்த தீட்சிதர் ஒருவர்
தரிசனத்துக்கு வந்தார். அவர் பெண்ணுக்குப்
பதினைந்து வயதாகி விட்டதாம்.சரியான வரன்
குதிரவில்லையாம். அதனால் அந்தணர்களில் வேறு
உட்பிரிவைச் சேர்ந்த பையன் கிடைத்தால் விவாகம்
செய்து கொடுக்கலாமா என்று கேட்டார்.
“Mahesh this is my typing-Varagooran Narayanan.
Thanks Sri TSV for sharing this wonderful episode.
A deekshitar from Sengaalipuram came for darshan of Mahqperiyava. It seems his daughter had completed fifteen yrs. of age and proper match was not getting fixed for her.
He asked if he could look for a groom in another subsect for her.
“Cannot” replied Periyava mercilessly.
At the same time, couple arrived with a wedding invitation.
“Daughter’s wedding…..”
“Which is the native place of the boy?”
They replied.
“There isn’t everybody Brahacharanam? You are Vadaman….”
The father shifted uncomfortably. Not expecting such a question, he was ill at ease.
“Daughter has completed 29 years of age. A suitable Vadaman groom could not be found….”
Understanding Periyaval’s gesture, a bamboo plate carrying saree, thirumaangalyam(thaali),
poorna phalam( unhusked coconut) etc. was brought by the kaingaryam shishya.
Periyava touched and blessed it and gave it to the dampati.
They did vandanam with extreme joy and left.
Periyava looked at the deekshitar.
“What is this!!! This sanyasi is issuing one nyaayam (rule) for me and another nyaayam for another, is that what you are thinking?”
“For dwijaas( twice born, i.e those sects that have sacred thread ceremony) only kannika vivaham (wedding while still a child 10 yrs or younger) is prescribed in our shastras. Out of fear for govt. Law, that tradition has almost disappeared.
A female child should never be unmarried. Our shastras do not say that there cannot be give-take between the subsects.
But the sampradaayam that has been followed since very ancient times should not be flouted, should be adhered to, to the maximum extent possible. That is only right.
For this girl, he said how old she is, did you hear? If the wedding got stalled now, who knows when it will happen again.
Hence, in their case, it is more important that the wedding take place, than following sampradaayam.
Apart from that, these people are laukeekaas( as in those who are not following the vedic way of life). It is many generations since they have distanced themselves from the vaideeka life. But in your case, it is not so. Yours is a family of Agnihotris. You should not break the sampradaayam. Do not worry……..”
The deekshitar came the very next month itself with hjs daughter’s wedding invitation.
“It is happening without going against sampradaayam” said he.
Very generously itself He graces and blesses him, our Periyava!
Is it wrong for a Vedama Brahmin to get married to Bracacharanam or Asta sagasram?
YOU show the way… we just follow Periva!