24. Gems from Deivathin Kural-Karma Margam-Samsare Kim Saaram? (Essence of Life)

album2_111

Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this great chapter Sri Periyava prescribes the road-map to ripen us and Karma Margam plays a vital role in it.

Thanks to our sathsang seva volunteer for the translation. Ram Ram.

ஸம்ஸாரே கிம் ஸாரம் ?

‘இந்த ஸம்ஸார வாழ்வில் என்ன சாரம் இருக்கிறது?’ என்று நம் ஆசாரியாள், ‘பிரச்னோத்தர ரத்ன மாலிகா’வில் ஒரு கேள்வி போடுகிறார், ‘கிம் ஸம்ஸாரே ஸாரம்?’ என்று கேட்கிறார். (ஸம்ஸாரே – ஸம்ஸாரத்தில்; கிம் – என்ன; ஸாரம் – சாரம் இருக்கிறது?) அதற்குப் பதிலும் சொல்கிறார்: ‘அப்பா, இப்போது இப்படிக் கேள்வி கேட்டாய் அல்லவா? இதை எப்போதும் கேட்டுக்கொண்டே இரு. அதுவே ஸம்ஸாரத்தின் ஸாரம்’ என்கிறார். பஹுச: அபி விசிந்த்யமானம் இதம் ஏவ.

அதாவது, ‘நாம் பிறந்ததற்கு என்ன பிரயோஜனம்? எதற்காகப் பிறந்தோம்?’ என்று அடிக்கடி நினைக்க வேண்டும். அந்தப் பிரயோஜனத்தை அடைவோமா என்று நினைக்க வேண்டும். ‘நமக்கு ஏன் பாபம் வருகிறது? கோபம் வருகிறது? காமம் வருகிறது? இவையெல்லாம் ஏன் வர வேண்டும்? எப்போதும், ஆனந்தமாக, சந்தோஷமாக இருக்கக்கூடாதா’ — என்று தோன்றுகிறது. இதற்குப் பதில் ஒன்றும் நமக்குப் புரியவில்லை.

எல்லாம் நல்லதற்குத்தான். ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்துதான் காயும் பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக இருக்கும்போது மூக்குக்கும் பழமாக இருக்கும்போது நாக்குக்கும் ரஸமாக இருக்கின்றன. பழம் நல்ல மதுரமாக இருக்கிறது. இந்த மதுரம் வருவதற்கு முன்பு எப்படி இருந்தது? பூவில் கசப்பாகவும், பிஞ்சில் துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும், பிறகு மதுரமாகவும் ஆகிறது. மதுரம் என்பதுதான் சாந்தம். சாந்தம் வந்தால் எல்லாப் பற்றும் போய் விடுகிறது. பழத்தில் மதுரம் பூராவாக நிரம்பிய உடனே கீழே விழுந்து விடுகிறது. அதுபோல் இருதயத்தின் எல்லா இடத்திலும் மதுரம் வந்துவிட்டால் தானாகவே எல்லாப் பற்றும் போய்விடும். புளிப்பு இருக்கும்வரை பற்று இருக்கும். அப்போது காயைப் பறித்தால் காம்பில் ஜலம் வரும். காயிலும் ஜலம் வரும். அதாவது மரமும் காயை விட்டுவிட விரும்பவில்லை; காயும் மரத்திலிருந்து விடுபட விரும்பவில்லை. ஆனால் நிறைந்த மதுரமாக ஆகிவிட்டால் தானாகவே பற்றும் போய்விடும்! பழம் தானே இற்று விழுந்துவிடும். மரமும் பழத்தை விடுகிறது; பழமும் மரத்தை விடுகிறது. இரண்டும் ஜலம் விடாமல் — அதாவது அழாமல் — ஆனந்தமாகப் பிரியும். படிப்படியாக வளர்ந்து மனம் முழுவதும் மதுரமயமான ஒவ்வொருவனும் இப்படியே ஆனந்தமாக சம்ஸார விருட்சத்திலிருந்து விடுபட்டு விடுவான். பழமாக ஆவதற்குமுன் ஆரம்ப தசையில் எப்படிப் புளிப்பும் துவர்ப்பும் வேண்டியிருக்கின்றனவோ அது போலக் காமம், வேகம், துடிப்பு எல்லாமும் வேண்டியவைதாம் போலிருக்கிறது!

இவற்றுக்கு நாம் ஆரம்ப தசையில் ஆட்படும்போதே, இவற்றிலிருந்து பூரணமாக விடுபட முடியாது. ஆனாலும், இவையெல்லாம் ஏன் வருகின்றன என்று அடிக்கடி நினைத்தாவது பார்க்க வேண்டும். ‘இப்போது இன்ன உணர்ச்சி வந்ததே! ஆசை வந்ததே! கோபம் வந்ததே! பெருமை வந்ததே! பொய் வந்ததே! இதனால் ஏதாவது பிரயோஜனம் உண்டா? இந்த உணர்ச்சி அவசியமாக வருகிறதா? அநாவசியமாக வருகிறதா?’ என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைக்கவில்லையென்றால் அவை நம்மை ஏமாற்றி விடும். ஏமாந்து விடுவோம்.

புளிப்பு இருக்கவேண்டிய சமயத்தில் புளிக்க வேண்டும்; துவர்ப்பு இருக்கவேண்டிய சமயத்தில் துவர்க்க வேண்டும்.

ஆனாலும், அந்தந்த நிலையோடு நிற்காமல் பிஞ்சு அனவரதமும் பழமாகிக்கொண்டே இருப்பதுபோல் நாமும் மேலும் மேலும் மாதுரி்யமான அன்பையும் சாந்தத்தையும் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் நாமாகப் போய் மோக்ஷத்தைத் தேடவேண்டாம். எந்தக் காலத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால், தானாக மோக்ஷம் என்கிற மதுர நிலை வந்துவிடும். அப்படியில்லாமல் தகாத பருவத்தில் முயற்சி செய்தால் பிஞ்சிலே பழுத்த மாதிரிதான். அது வெம்பல்தான். அதில் மதுரம் இருக்காது. “வெம்பி விழுந்திடுமோ?” என்று இராமலிங்கர் பாடின மாதிரி நாம் வெம்பிப் போவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.

இப்போது நாம் இருக்கிற மாதிரி, கண்டதே காட்சி என்று இருக்கிறதும் தப்பு; அதற்காக, நாம் தீர்க்க வேண்டிய கர்மா மூட்டை ஏகமாக இருக்கிற இப்போதே, நமக்கும் பரம ஞானம் உடனே வந்துவிட வேண்டும் என்று தவியாகத் தவித்து ஆத்திரப்படுவதும் தப்பு.

நாம் இப்போதே பரம ஞானம் வேண்டுமென்று அதைத் தேடிப்போக வேண்டாம். இந்த ஜன்மத்திலே வரவில்லை என்றால் எத்தனை ஜன்மம் கழித்தாவது வரட்டும் என்று கருதி, நம் கடமைகளைச் செய்து கொண்டிருப்போம். நம்முடைய வேதம் விதிக்கிறபடி தர்மத்தை அநுஷ்டானம் பண்ணுவோம். அப்படிச் செய்தால் படிப்படியாகப் பரம ஞானமும் தானே வந்துதான் ஆகவேண்டும். இப்போது நமக்கு வெளிக்காரியங்கள், வெளி வேஷங்கள்தானே தெரிகின்றன. அதனால் மத சம்பந்தமாகவும் வெளிக் காரியங்களாக இருக்கிற சடங்குகள், வெளியே போட்டுக்கொள்கிற சமயச்சின்னங்கள் இவற்றிலேயே ஆரம்பிப்போம். படிப்படியாக பக்குவமாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகிய உள்ளேயிருக்கிற தத்துவத்துக்குப் போவோம்.

‘Samsare Kim Saaram’

‘What is the essence of life in this world?’ asks Sri Adi Sankara in his ‘Prashnottara Malika’. He asks ‘kim samsare saaram?’ (samsare – in this world; kim – what; saaram – is the essence). He also replies: “Child! You have now asked this question. Keep asking yourself this question always. That is the real meaning of this worldly life”. “bahushaha api vichintyamaanam idham eva”.

We have to regularly question ourselves ‘What is the use of us having been born? Why were we born?” We should reflect whether we will attain the purpose of our birth. We typically wonder: ‘Why do we accumulate sin? Why do we get angry? Why do we desire things? Why do we have to go through these? Why are we not happy and joyful always?’ We are not able find answers to these questions.

Whatever happens is for good. In a tree, the fruit evolves from the flower. The flower is fragrant and the fruit is tasty. The fruit is also sweet. But before it attained this sweetness, how was it? As a flower it was bitter, astringent when it just formed, sour when unripe and sweet when fully ripe. Sweetness can be compared to peace. When there is peace, all attachments leave us. When the fruit is fully ripe, it leaves the tree and falls down. Likewise, if the human mind is filled with sweetness, then all attachments go away. Till the fruit is sour, it is attached to the tree. If we pluck the unripe fruit, water oozes out from the stalk of the fruit and also from the tree. We may conclude that the tree and the unripe fruit are not willing to be separated from each other. But when the fruit ripens and is filled with sweetness, the attachment to the tree goes away. The ripe fruit falls down on its own. The tree and the fruit overcome their attachment for each other. Neither of them sheds tears – no water oozes! They part with each other happily. When a person gradually evolves, his heart is finally filled with love and he gets detached from the worldly bonds. (Samsara Vriksham). The fruit goes through the phases of being astringent in the beginning and then sour. Maybe the human life too needs the initial phases of going through desires and non stop activities.

Initially when we are under the influence of these emotions, we will not be able to detach ourselves from them. But we should frequently question ourselves as to why we are going through these emotions. ‘I go through these emotions like desire, anger, ego, falsehood etc. Are these of any use to me? Are they necessary or unnecessary?’ If we do not question ourselves, these emotions will dupe us and we will become the victims (of these emotions).

When it is time for astringency, one should be astringent; when it is time to be sour, one should be sour.

The fruit does not stagnate at the initial stages. It continues to evolve into a ripe fruit. We too should regularly contemplate on peace and love. If we do this, we need not go in search of Moksha (Liberation). If we go through the initial stages systematically, the final sweet stage of Moksha will come on its own. If we attempt to forcibly do things at the inappropriate time, it is like the fruit trying to get ripe in the initial stage itself. There will be no sweetness in it (and the fruit itself will be of no use).

It is wrong to remain indifferent to the happenings around us. But this is the state we are in now. At the same time, it is of no use getting anxious and angry in trying to realize the Ultimate Knowledge (Parama Gnanam) immediately, since this will be realized only after we have paid back for all the sins accumulated in our previous births.

We need not go in search of the Parama Gnanam now itself. Let us continue to do our duties with the hope that the Parama Gnanam will come to us at least after a few more births, even if not in this birth itself. Let us follow the path of dharma as prescribed in the Vedas. If we do this, gradually the Parama Gnanam will have to come to us. Now we are aware only of the outward tasks and outward acts. So let us start with the application of external symbols and performance of outward rituals. Gradually we will evolve from rawness to ripeness. This ripeness will be the reality within us.



Categories: Deivathin Kural

Tags: ,

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading