உர்வாருகமிவ பந்தனாத் முக்க்ஷீய

Orikkai_Periyav_Valayal1

Thanks Sri Vignesh Studio for the photo….

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும். மிகப் பிரபலமானது.

“த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்.
உர்வாருகமிவ
பந்தனாத் ம்ருத்யோர்
முக்க்ஷீய மாம்ருதாத்.”

இதில் ‘உர்வாருகமிவ பந்தனாத் முக்க்ஷீய’ என்ற வரிகளின் அர்த்தம், ‘வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து விடுபடுவதுபோல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும்’ என்பதாக அமையும். எனக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம். எந்தப் பழமாயிருந்தாலும், பழுத்தவுடன், ‘பட்’டென்று தன் கொடி, செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும்தானே! இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்று. பல வேத விற்பன்னர்களிடம் கேட்டும் த்ருப்தியான பதில் கிடைக்கவில்லை.

பின் ஒருமுறை, மஹா பெரியவா இதற்கு ஒரு அற்புதமான விளக்கம் அளித்திருந்ததைப் படிக்க நேர்ந்தது. அதாவது, மற்ற பழங்கள் போல் அல்லாமல், வெள்ளரிப்பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும். வெள்ளரிக்கொடி, தரையோடு தரையாய்ப் படரும். அதனால், வெள்ளரிப்பழமும், தரைத்தளத்திலேயே பழுத்துக்கிடக்கும். அது பழுத்தவுடன், அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள், இலைகள் போன்றவை தன்னால் அந்தப் பழத்தை விட்டு விலகுமாம். அதாவது, பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது.

அதுபோல, ஞானிகளுக்கு, அவர்கள் பந்தம், பற்றை விட்டு விலக வேண்டுமென்பதில்லை. சரியான தருணத்தில், ‘இவர் பழுத்து விட்டார்’ எனத் தெரிந்தால், பந்தம், பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே – எப்படி வெள்ளரிக்கொடி தன் பழத்தை விட்டு விலகுகிறதோ, அது போல – விலகி விடுமாம்.

அற்புதமான விளக்கம்.

நமது மந்திரங்களின் ஆழமான கருத்தும் புரிந்துகொள்ள நேர்ந்தது.

மஹா பெரியவா சரணம்.



Categories: Upanyasam

13 replies

  1. Excellent. Words from / for SOUL

  2. Beautiful meaning with mantras .thank you sir
    Janakisundram@gmail.com

  3. I have read somewhere , probably in Deivathin Kural , that vellari Pazham stays in its place and is still liberated from all ties. Similarly, one doesn’t have to go anywhere to forest or Himalayas to attain this blessing. It can happen right where you are with the right mind set, attitide and Guru Krupa, even to Grahasthas.

    He also goes on to explain what another devotee, Ms. Savitri has posted here. He concludes that one is Jeevan Mukthi (Sri. Mahessh’s explanation ) and the other one is Videha Mukthi ( Ms. Savitri’s explanantion).

    Sri Gurubhyo Namaha.

  4. Anybody please translate to English

  5. Also, Periyava will mention about this “fruit life cycle”very detailed way in Deivathin Kural. If I get where is it in Deivathin Kural, I will post it here. In the end, once the cucumber fruit ripe and if you leave it in the plant, the cucumber will break and mixes with the space. No trace will be there. That’s how a Jnani’s life goes.

  6. Soul getting detached from the body begins from gaining control on tongue and manas. Once the soul gained control over tongue and manas,a the withdralw from this costume body will happen as per the will and wish of the body. Beautiful explanation and reasoning by our Mahaperiyava.

    Gayathri Rajagopal

  7. I have heard the explanation in another way . In the “Cotton” tree ( Elava Maram) the riped cotton with the shell detatches itself automatically and fall to the ground at the right time. The explanation from Maha Periva is astounding Jaya Jaya Sankara Har Hara Sankara

  8. A very convincing meaning of the slokam. Great service done by you in sharing this. Thanks.

  9. The detachment from the family and other mundane affairs has to be developed in the third stage: vaanaprastha. This is like the drop of water on the lotus leaf. Here ‘snaps’ from all issues occur, preparing for the next stage: sanyasi yoga. Only a née an mukhtar like Paramaacharya can explain the meaning for the people.

  10. How meaningful our mantras are….. What an explanation in simple terms….. HE is second to none.

  11. Dear Mahesh:

    Greetings. The greatness of Paramaacharya is well seen and understood by the post below about this Vellari Ppazam on Mruthyunjaya Manthram; I know
    About this from Sri Jayendra who wanted me to chant this after my Quituple bypass. Now it is clear who is the orgin of this explanation and why this Rudharms’Sloka
    Is more relevant especially for those like me who have by pass and heart problemsn.. I have two booster rockets for this. One is my Pacemaker combined with
    Debfrilator which I call as “Guardina Anger” and another is this Mrithunjaya Manthram which everyday I chant at least five times even when I drive my car
    Which is my :Guardina Sangel-Pramacharya . With these two, I am confident, that whenever I die, I will not go due to heart failure but some other normal cause;

    God Bless the world. Jai Shanakra ; Hara Hara Shankara: Thanks for this post; Bala

  12. A very beautiful explanation. Thanks.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading