Periyava Golden Quotes-272

Maha Periyava-4

ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் லோகத்தையெல்லாம் பகவத் ஸ்வரூபமாக பார்த்து ஸேவை செய்வதும் பூஜைதான் என்கிறார். இப்படிச் சொன்னதால் பூஜை கூடாது, உத்ஸவம் கூடாது என்று அர்த்தமில்லை. பரோபகாரம் பண்ணி ஜனங்களுக்கு சாப்பாடும், துணியும் மற்ற ஸெளகர்யங்களும் கிடைக்கிற மாதிரி செய்துவிட்டு, அவர்கள் தின்று தின்று என்றைக்கோ ஒருநாள் பரமார்த்த ஸத்யத்தைத் தெரிந்து கொள்ளாமலே சாகிற மாதிரி விட்டு விட்டால் என்ன ப்ரயோஜனம்? இந்த உடம்புக்கு சோறு போட்டு, இதற்கு வியாதி வந்தால் சிகித்ஸை பண்ணி, அறிவை வளர்க்கும் படியான கல்வியைத் தந்து உபகாரம் பண்ணுவதெல்லாம் ஆலய தர்சனம், உத்ஸவாதிகள் முதலியவற்றை நன்றாக அநுபவித்துப் பயன் அடைவதற்குத்தான். ஆனபடியால் மக்கள் பணியெல்லாம் அந்த மக்களை பகவானிடம் சேர்ப்பதற்குத்தான். அதனால், எல்லோருமாகச் சேர்ந்து ஆலயத் திருப்பணி செய்தால் மெய் வருத்தி ஒரு கோயிலுக்கு மதில் கட்டினால், அதுதான் ஜனங்களுக்கான மஹா பெரிய ச்ரமதானம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Bhagawan Sri Krishna states in Srimad Bhagawatham says that when one serves the mankind, viewing it as a form of God Himself, it is also a kind of worship. This should not be misinterpreted to mean that regular forms of worship and festivals are not necessary. There is no point in a philanthropy which provides material benefits to people but does not elevate them spiritually during their lifetime. The point of feeding this body, curing it of all diseases and educating the mind are all done with the purpose of reaping more benefits from visiting the temples and participating in the festivals. All service towards the people is aimed at taking them closer to the Divine. So if everyone comes together and labor hard to raise a surrounding wall for a temple, it is the biggest contribution towards the welfare of the people. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading