பெரியவா மறைக் கல்வி(வேத அத்யயனம்) செய்திருப்பார் என்பது தெரியும். ஆனால் முறைக் கல்வி எப்போது கற்றார்கள்?
‘லால்குடியில் உள்ள கல்வெட்டுக்களில் பிராமணர் திருமுறை ஓதவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறது. திருஞான சம்பந்தர் கௌண்டின்ய கோத்ரத்தில் பிறந்த அந்தணர். வேதம் கற்றவர். தன் பாடல்களில் நான்மறை ஓதும் சம்பந்தன் என்று முத்திரையுடன் பாடியிருக்கார். அதனால் ப்ராம்மணர்கள் திருமுறை அவசியம் ஓத வேண்டும்’. பெரியவா வாக்கு இது.
ஒரு சமயம் திருமுறை பாராயணம் நடந்து கொண்டிருந்தது .பகலில் தேவார, இரவில் திருவாசகம், அதன் பின் திருக்கோவையார் என்ற ரீதியில் ஒரு தலத்தின் மீது ஒரு பதிகம் அதாவது பத்து பாடல்கள் பாடப்பட்டிருந்தால் அந்தத் தலத்தைப் பாடல் பெற்ற ஸ்தலம் என்று சொல்வார்கள். அது ஸ்தலத்தின் சிறப்பைக் காட்டுகிறது.
திருமுறைகளில் பகல் பண்கள், ராப்பண்கள் என்றெல்லாம் உண்டு;அவைகளுக்கான ராகங்களும் உண்டு.சிவஸ்தலங்களைப் பற்றிய பதிகங்கள் ஆயிரத்தெட்டு; அவற்றில் பாடல் பெற்ற க்ஷேத்ரங்கள் இரு நூற்றி எழுபத்தைந்து’ என்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் சொல்வார் பெரியவா!
‘சீர்காழிக்கு பன்னிரண்டு பெயர்கள் உண்டு; அந்தப் பன்னிரண்டு பெயரையும் ஒரே பாட்டில் சொல்லியிருக்கிறார்கள்..திரு-இருக்கு-குறள் என்று பெயர். இருக்கு என்றால் என்ன தெரியுமோ?
ரிக்வேதம்..ரிக்வேத விருத்தத்திலேயே இந்தப் பாடல் இருக்கும். இந்தப் பதிகத்தைப் படித்தால்
ரிக்வேதம் முழுதும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்{வம்பறா வரிவண்டுச் சருக்கம்}
சம்பந்தர் ஏராளமான பாடல்களைப் பாடினார், இதையெல்லாம் தினம் பாடமுடியுமா? திருஎழிக் கூற்றிருக்கை என்ற பதிகம் பாடினார். அதை பாராயணம் செய்தாலே தேவாரம் முழுதும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்’ என்ற அறிய தகவல்களை பெரியவா சொல்வதிக் கேட்டு பெரியவா வேத அத்யயனம் செய்தது
தெரியும்; திருமுறை அத்யயனம் எப்போது செய்தார் என நினைக்கத் தோன்றும்!
டாக்டர் ரா. சுப்ரமணியம் இவ்வாறு சொல்கிறார்.
ஜய ஜய சங்கரா….
Thanks to Smt Saraswathi Thyagarajan mami for the share…
Categories: Devotee Experiences
translation for non tamil readers
Hara Hara Sankara Jaya Jaya sankara.Too little even to guess when Mahan learned thirumurai. Layman.