Sri Periyava Mahimai Newsletter – March 11 2007

album1_156

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Newletter from Sri Pradosha Mama gruham. What an experience and anugraham for Smt. Sasikala.

Let’s take a moment to thank our sathsang seva volunteer (anonymous) who did the Tamizh typing (the scanned copy is a bit difficult to read) and the translation as well. Many Many Jaya Jaya Sankara’s to him. Ram Ram

வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா மகிமை (11-3-2007)

“அபார மகிமை”

சாட்சாத் சர்வேஸ்வரரான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா சுகபிரம்ம ரிஷியின் மேன்மையோடு நம்மிடையே நடமாடும் காருண்யராக திகழ்ந்து அருளுவது நாம் செய்த பாக்யமே!

சசிகலா எனும் ஸ்ரீ பெரியவா பக்தைக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அவர் மராட்டி மொழியில் எழுதியுள்ளார். அந்த அனுபவம் அபூர்வமானதாக அமைந்துள்ளது.

பூனாவை சேர்ந்த சசிகலா சிறுமியாக இருந்தபோது அவளுடைய தாத்தாவின் நண்பர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் தட்சிணாமூர்த்தியின் படத்தையும் ஸ்ரீ பெரியவாளின் திரு உருவப்படத்தையும் அனுப்பி அதைப்போலவே சசிகலாவை சித்திரமாக வரைந்து அனுப்புமாறு
கூறியிருந்தார்.

1961 இல் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளை சிறுமி சசிகலா தரிசித்தபோது அவள் வரைந்திருந்த தட்சிணாமூர்த்தி படத்தைப்பற்றி மிக நன்றாக வரைந்திருப்பதாகவும் முக்கியமாக தட்சிணாமூர்த்தியின் கண்களை வரைவது சிரமம் அதை குழந்தை நன்றாக வரைந்துள்ளதாக ஸ்ரீ பெரியவா கூறியது சிறுமிக்கு மிகவும் ஆனந்தமளித்தது.

தானே தட்சிணாமூர்த்தி என்பதை சிறுமிக்கு உணர்த்தவே ஸ்ரீ பெரியவாளின் அருள் இப்படி வகை செய்ததோ என்னவோ! அப்போதிலிருந்தே சிறுமியான சசிகலா மனதில் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்கும் ஆவல் எழலாயிற்று. ஆனால் தாத்தாவின் மறைவிற்கு பிறகு அந்த சந்தர்ப்பமே ஏற்படவில்லை.
பிறகு சுமார் 18 வருடத்திற்கு பிறகு தென் இந்தியாவிற்கு சசிகலா வரும் சூழ்நிலை ஏற்பட, ஸ்ரீ பெரியவாளை தரிசிக்கும் தீராத ஆவலோடு காஞ்சி மடத்திற்கு சசிகலா ஓடினார். ஆனால் அங்கே பெருந்தெய்வம் இல்லை. ஸ்ரீ பெரியவா வடக்கே சென்றுவிட்டதாக தகவலால் சசிகலா ஏமாற்றம் அடைந்தார். ஸ்ரீ பெரியவா பெல்காமில் இருப்பதாக தெரிந்தும் அப்போது சசிகலாவிற்கு தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டவில்லை. 1978 மே மாதத்தில் இது நடந்தது.

நவம்பர் 1979 இல் ஸ்ரீ பெரியவா மகாராஷ்டிராவில் இருப்பதாக சசிகலா கேள்விபட்டவுடன், மகான் எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள பலரிடம் கேட்டும் சரியான் பதில் கிடைக்கவில்லை.

ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்காக ஏங்கும் மனதோடு அமைதியின்றி சசிகலாவின் நிலை மாறியது.  சாலை வழியே எந்த ஒரு மதகுருமார்களையோ, பூசாரிகளையோ பார்க்கும்போதெல்லாம் அவர்களை நிறுத்தி ஸ்ரீ பெரியவா எங்கே இருக்கிறார் என்று கேட்பதே சசிகலாவின் பழக்கமாகிவிட்டது. இருந்தும் யாரிடமிருந்தும் பதில் இல்லை. மாறாக காஞ்சிமடம் எங்கே இருக்கிறது? என்று அவர்களிடமிருந்து எதிர் கேள்வி எழுந்ததுதான் மிஞ்சியது.

அப்படியும் சசிகலாவின் தேடல் ஓய்ந்தபாடில்லை. கடைசியாக உதிர்ந்துவிடட மரத்தில் துளிர்வதுபோல சற்றே நம்பிக்கையூட்டும் எண்ணம் சசிகலாவின் மனதில் உதித்தது. பால் பிரிண்டன் என்ற ஆங்கிலேயர் தான் எழுதிய புத்தகத்தில் ஸ்ரீ பெரியவா தரிசன மேன்மையை விவரித்ததை சசிகலா நினைவு கூர்ந்தார். அதில் ஸ்ரீ பெரியவா அவரிடம் ஸ்ரீ ரமணமகரிஷியை தரிசிக்குமாறு அருளியதை படித்தபோது ஸ்ரீரமணரிடம் வேண்டிக் கொள்ள தோன்றியது. உடனே ஸ்ரீ ரமண பகவானின் படத்திற்கு முன் நின்றபடி தன் அடக்கமுடியாத ஆதங்கத்தை சொல்லி ஸ்ரீ பெரியவா தரிசனம் கிட்ட அருளுமாறு சசிகலா வேண்டினார். ஸ்ரீ ரமண மகரிஷியும் பக்தைக்கு உடனே அருளுவதுபோல அது நிகழ்ந்தது.

சசிகலா, கோகலே என்கிற புரொபஸரை சில தத்துவ விளக்கம் கேட்க சென்றபோது அங்கே அவருடைய சொந்தக்காரர் அவரை பார்க்க வந்திருந்தார். அவர் சாஸ்திரிகளாக இருக்கவே உடனே அவரிடமும் சசிகலா காஞ்சி முனிவர் எங்கே இருக்கிறார் என்ற கேள்வியை விடுத்தார்.

“ஸ்ரீ பெரியவா உகாருக்கு வருவதாய் சொன்னார்கள், ஆனால் சரியான விலாசம் தெரியவில்லை” என்ற சாஸ்திரிகள் கூறியபோது சசிகலாவின் மகிழ்ச்சி எல்லையை கடந்தது.

“உகார் எங்கே இருக்கிறது? யாரிடம் ஸ்ரீ பெரியவா இருக்கும் இடத்தை கேட்டால் தெரியும்”

கேள்விக்கனைகளை சசிகலா விடுக்க, அவர் “உகார என்பது சங்கலி என்ற இடத்திற்கு பக்கத்தில் உள்ள சின்ன ஊர். அங்கு மகாதேவ் கோயில் உள்ளது. ஸ்ரீதிவாக்கர் என்பவருக்கு கடிதம் எழுதினால் பதில் கிடைக்கலாம். இதற்கு மேல் எனக்கு தெரியாது” என்றார் சாஸ்திரிகள்.

உடனே சசிகலா வீட்டிற்கு விரைந்தார். பரமேஸ்வரா! ஒளிந்து மறைந்து நடத்தும் உன் விளையாட்டை இனிமேலும் பொறுக்க இயலாது. உடனே உன் தரிசனத்திற்கு அருள்வாயாக என்று பிரார்த்தித்தபடி ஒரு ரிப்ளை கார்டை எடுத்து குத்துமதிப்பாக திவாகர், விலாசத்தை எழுதி மகான் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு அனுப்பினார். எப்படியோ தபால்காரர் அதை சேர்ப்பித்துவிட பதிலும் வந்துவிட்டது.

உடனே கிளம்ப தயாராகிவிட்டாலும், சசிகலாவிற்கு தடைகள் இருந்தன. பூனாவிலிருந்து அதிகாலை 4.30க்கு ஒரே ஒரு பஸ்தான் இருந்தது. அதில் தனியாக சசிகலா போவதற்கு வீட்டில் பயந்தார்கள். ஆனால் ஸ்ரீ பெரியவாளின் அருளால் அன்று மாலை அடுத்த நாள் காலை பஸ்ஸிற்கு டிக்கட் வாங்க சென்றபோது அங்கே ஒரு நண்பர் எதிர்பட அவரும் துணைக்கு வருவதாக சொன்னார். தெய்வாதீனமாக பஸ்ஸில் இவர்கள் இருவருக்கு மட்டுமே இரண்டு டிக்கட் மிஞ்சியிருந்தது.

ஸ்ரீ ரமண பகவானிடம் வேண்டிக் கொண்டதில் எட்டே நாட்களுக்குள் சசிகலாவிற்கு ஸ்ரீ மகானின் தரிசனம் 1980, ஜனவரி ஒன்றாம் நாள் கிடைத்து விட்டது.

பதினெட்டு வருடங்கள் கழித்து ஸ்ரீபெரியவாளை தரிசித்தபோது, அந்த நடமாடும் தெய்வம் தன்னை நேராக பார்த்தபோது அந்த தீட்சண்யத்தை தாங்க முடியாமல் சசிகலாவின் கண்களில் ஆனந்த நீர் பெருகியது.

இந்நேரத்தில் யாரோ ஒருவர் பக்கத்து அறை ஒன்றில் அமருமாறு சசிகலாவிடம் கூறினார். சசிகலா சென்று அங்கே உட்கார உடனே ஒருவர் அங்கே வந்து “உங்கள் பெயர் என்ன?” என்கிறார் இவர் “சசிகலா” என்று கூற “ஓகோ! அதைதான் பெரியவா சைகை மூலம் நெற்றியில் சந்திரன்போல் காட்டியிருக்கிறார்” என்று அந்த சிப்பந்தி அழைத்துச் சென்றார். அங்கு சென்ற சசிகலா தலை தரையில் படும்படி வணங்கினார். அப்போது “பெரியவாளே உன் தரிசனத்திற்காக 18 வருஷம் கழித்து ஆவலாய் வந்திருக்கிறேனே உன் பாதார விந்தங்களை தரிசிக்க இயலவில்லையே” என மனதில் நினைக்க, உடனே அருளும் விந்தையாக ஸ்ரீ பெரியவா எழுந்து நின்று திருபாத தரிசனம் நல்கினார்.

சசிகலாவிற்கு இன்னொரு விருப்பமும் எழுந்தது. இத்தனை வருடங்களாக ஏங்கிய பின் வந்திருக்கிறோமே ஸ்ரீ பெரியவா திருவாக்கு எழுவதை கேட்க இயலாமல் மௌனம் கடைபிடிப்பதாக இந்த நாள் அமைந்துவிட்டதே என்று ஏக்கம் எழுந்தது. ஸ்ரீ பெரியவா பேசுவதை கேட்க அருளவேண்டுமென்று மனதிற்குள் வேண்டினார்.

உடனே ஸ்ரீ பெரியவா அருள இசைந்ததுபோல அருகே ஸ்ரீநாராயண நந்தா என்ற சுவாமிகள் இருந்த குடிலுக்கு சென்றார்.

ஸ்ரீ பெரியவா சைகை மூலமாக நாராயணா நந்தாவிற்கு ஏதோ தெரிவிக்க அவர் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தார். அவர் இப்படி படிக்க, படிக்க ஸ்ரீ பெரியவா அதை விளக்குவதுபோல நீளமாக சமஸ்கிருதத்தில் பேசி அருளினார். மகானின் பேரருள் இத்தனை உயர்ந்ததா! பக்தையின் ஆவலையும், மனதில் பிரார்த்தித்ததையும் தன் விரதத்தையும் மீறி மாபெரும் கருணையால் நிறைவேற்றி அருளும் தெய்வத்தை மனம் உருக தரிசித்து நின்றார் சசிகலா.

“ஸ்ரீ பெரியவா இன்னிக்கு மௌனவிரதம்தான்! லௌகீகமாக பேசவில்லை. தெய்வ மொழியான சமஸ்கிருதத்தில் உபநிஷத்திற்கான விளக்கத்தை சொல்கிறார். ஆகவே மௌன விரதம் மீறப்படவில்லை” என்று அருகில் யாரோ சொல்வதை கேட்டதும் சசிகலாவிற்கு ஒரு உண்மை புலப்பட்டது.

ஒரே ஒரு பக்தையின் அடிமனதில் ஏற்பட்ட ஏக்கத்திற்காக, இந்த மாபெரும் தெய்வம் இத்தனை எளிதில் விரதத்தையும் மீறாமல் எப்படி அருள முடியுமோ அப்படி யாருக்கும் தெரியாதவகையில் அந்த பக்தைக்கு மட்டுமே புலப்படும்படி அருளும் அபார மகிமையை எண்ணி சசிகலாவிற்கு ஆனந்த பெருக்கு ஏற்படலாயிற்று.

பக்தையின் மனதில் மகான் நீங்காத இடம் பிடித்தருளினார்.

குழந்தை சுவாமிநாத் !

ஒருமுறை ஸ்ரீ பெரியவா சதாராவில் குடி கொண்டிருந்த போது சசிகலாவிற்கு ஒரு அதிசய உணர்வு ஏற்பட்டது. சசிகலாவின் மனதில் ஒரு மந்திரஜபம் தோன்றியது. தன்னையறியாமல் அந்த மந்திரத்தை அவர் மனம் திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தது. காரணமே இல்லாமல் “சுவாமிநாத்….சுவாமிநாத்” என்ற மந்திரம் எப்படி தன்னுள் எழுந்தது என பெரியாதபோது ஸ்ரீ பெரியவாளின் அன்னையான மாதுஸ்ரீ மகாலட்சுமி தாயாரைப் பற்றியும் மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.

அந்த அன்னைக்கு தன் 13 வயது பாலகன் பிரிந்து சென்றபோது எப்படி இருந்திருக்கும்? எப்படி தான் சமைத்து உண்ணும்போது குழந்தை எப்படி சாப்பிடுகிறாரோ என்று ஏக்கம் வாட்டியிருக்கும்? கடுங்குளிரில் காவியோடு செல்லும் தன் குழந்தை எப்படி அதை தாங்கிக் கொள்ள இயலுமோ என்ற வேதனை மனதை அரித்திருக்கும்.

இப்படி ஸ்ரீ பெரியவாளை ஈன்றெடுத்த அன்னைக்கு ஏற்பட்டிருக்கும் எண்ணங்கள் திரும்ப திரும்ப மனதில் எழுந்து மகாலட்சுமி தாயாருக்கு ஏற்பட்ட அதே வேதனையை சசிகலாவிற்கும் ஏற்படுத்திய விந்தை நிகழ்ந்தது.

ஒரு வேளை தாங்க முடியாத குளிரால் தன் உடல் வாடுவதால் அதே எண்ணங்கள் ஏற்படுகின்றதோ என எண்ணிய சசிகலா உடனே சென்று கம்பளி நூலை வாங்கிவந்தார். அதை ஒரு அன்னையை போல் ஸ்ரீ பெரியவாளுக்கு சமர்ப்பிக்க நினைத்தார். ஸ்ரீ பெரியவா யாரிடமும் எதையும் வாங்குவதில்லை என அறிந்தும், சிவநாமாவை சொல்லியபடியே கம்பளி நூலில் ஸ்வெட்டர் பின்ன தொடங்கினார். ஒரு லட்ச சிவநாம ஜபத்தோடு பின்னிய ஸ்வெட்டரை   தயாரித்தபோது பெரியவா சதாராவிற்கு வந்திருந்தார்.

ஒரு சின்ன குன்றில் பாழடைந்த மடத்தில் ஸ்ரீ பெரியவா அருள 25 படிகளை சசிகலா ஏற ஆரம்பித்தபோது “நீங்கள்தான் பூனாவிலிருந்து வருகிறீர்களா? பெரியவா காத்துண்டிருக்கா சீக்கிரம்” என்று ஒருவர் அதிசயமாக சசிகலாவை அழைத்துச் சென்றார்.

ஒரு இருட்டான அறையில் யாருக்கோ காத்திருப்பது போன்ற தோற்றத்துடன் காட்சியருளிய மகான், ஸ்வெட்டரை ஜன்னல் கம்பி இடுக்கில் பக்தை வைத்தவுடன் ஒரு குழந்தையைப்போல் ஓடி வந்து தன் திருக்கரத்தில் எடுத்து லேசான புன்னகையோடு தன் மார்பில் வைத்து பின் திருநாசியில் முகர்வதுபோல் கொண்டு சென்று, திருமுகத்தில் தேய்த்து பின் மெதுவாக உள்ளே சென்றுவிட்டார். பேரருளால் பக்தை திக்குமுக்காடினார்.

மிக ஆச்சரியமாக அதுவரை சசிகலாவின் மனதில் ஒலித்துக் கொண்டிருந்த சுவாமிநாத் என்ற மந்திரம் சட்டென்று நின்றதுபோல பக்தை உணர்ந்தார். அப்போது புரியாத ஒரு அதிசயம் பக்தைக்கு பின்னர் ஒரு புத்தகத்தை படித்தபோது புரிந்தது. மகா தெய்வமான ஸ்ரீ பெரியவாளின் பூர்வாஸ்ரம மகாலட்சுமி தாயாரின் புதல்வராய் ஸ்ரீ பெரியவாளின் திருநாமம் சுவாமிநாதன் என்பதே!

இப்படி சசிகலாவிற்கு குழந்தையாக அருளிய உலகினை ஈன்ற தயாபரமூர்த்தி, பக்தி செயும் அனைவருக்கும் தாயினும் மேன்மையான அருள்பொழிந்து சர்வ மங்களங்களையும், சகல ஐஸ்வர்யங்களையும் அருள காத்து நிற்பது சத்தியமே!

– கருணை தொடர்ந்து பெருகும் (பாடுவர் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் – சுந்தரமூர்த்தி சுவாமி தேவாரம்)

                             Vaayinaal unnai paravidum adiyen Paduthuyar kalaivaai paashupathaa paranchudare!

                                                   Sri Sri Sri Maha Periyava Mahimai!  11-3-2007


“Unparalleled Greatness”

It is indeed our fortune that Sri Sri Sri Maha Periyava, who is the manifestation of Sarveshwara and who has the greatness of Sukha Brahmarishi, is walking amongst us with so much compassion!

Sasikala, a Periyava devotee, had written her experiences in Marathi language and those experiences are unique in a way.

When Sasikala, a Pune resident, was a little girl, her grandfather’s friend wrote a letter. Along with the letter, he had sent a picture of Dakshinamoorthy and Sri Periyava and requested Sasikala to draw a picture exactly like that and send to him.

In 1961, when the young girl Sasikala had darshan of Sri Sri Sri Periyava, she became very happy when Sri Periyava appreciated her painting of Dakshinamurthy, and told that she had drawn His eyes very well, which is usually tough to draw.

Did this incident happen to make the young girl realize that He Himself was none other than Sri Dakshinamurthy? From then on, Sasikala started having a desire to have darshan of Sri Periyava. But, after her grandfather’s demise, there was never an opportunity for her to have darshan.

After around 18 years, when there was a situation for Sasikala to travel to South India, she rushed to Kanchipuram with a wish to have Periyava’s darshan. But, Sri Periyava was not there. She was disappointed when she heard the news that Sri Periyava had travelled to North India. Even though she came to know that Sri Periyava was in Belgaum, she did not get a chance to have darshan. This happened in May 1978.
In November 1979, when she heard that Sri Periyava was in Maharashtra, she enquired a lot to know the exact place where Mahan had camped. But, she did not get any response.

Sasikala started longing for Periyava’s darshan. It had become a practice to her that whenever she sees any Guru or priests pass by, she would stop them and ask if they knew where Periyava was camping. Nobody answered her. Instead, they asked, “Where is Kanchi Mutt?”

Even then, Sasikala’s search did not stop. Finally, similar to leaves springing in a tree after fall season, hope started springing in her thoughts.

She remembered how Paul Brunton had explained the greatness of Sri Periyava when he had darshan. In that, when she read that Sri Periyava asked him to have darshan of Sri Ramana Maharshi, she thought of praying to Sri Ramana Bhagavan. Immediately, she stood in front of Sri Ramana Bhagavan’s picture and prayed that He grant her Sri Periyava’s darshan. As if Ramana Maharshi listened to His devotee’s prayers, the following incident happened.

Sasikala went to meet Professor Gokhale for clarifying some of her philosophical doubts, one of Gokhale’s relatives also came to meet him. Since he was a Sastrigal, Sasikala asked him if he knew where Sage of Kanchi was camping.

When Sastrigal told, “I heard that Sri Periyava was coming to Ugar. But, do not know the exact address”, Sasikala’s joy knew no bounds.

When Sasikala started asking questions like, “Where is Ugar? Who would know where is Sri Periyava camping?” Sastrigal responded, “Ugar is a small place near Sangli in Maharashtra. There is a Mahadev temple. You might get a response if you write a letter to Sri Divakar. I do not know anything more than this”.

Soon, Sasikala rushed to her house. “Parameshwara! I cannot tolerate this hide and seek game”. By praying Sri Periyava to grant His darshan, she sent a reply card to Sri Divakar with a vague address, requesting him to let her know Sri Periyava’s camp location. Somehow, the postman gave it to Sri Divakar and Sasikala got a response too.

Even though Sasikala was ready to start immediately, she got multiple troubles. There was only one bus from Pune at 4.30 in the morning. Sasikala’s relatives were afraid of her traveling alone in that bus. When she went to buy tickets that evening (for next day morning), by Periyava’s grace, she met a friend and they told that they will give her company and there were only two tickets just for both of them.
Within the eight days of praying to Sri Ramana Bhagavan, she got an opportunity to have Sri Periyava’s darshan on Jan 1, 1980.

After 18 years, when she had darshan of Sri Periyava, she was unable to bear the power from Sri Periyava’s eyes and she started crying out of joy.

Then, someone came and told her to sit in the adjacent room. After Sasikala went and sat there, another person came and asked, “What is your name?” When she responded “Sasikala”, he told, “Oh! That is why Sri Periyava used sign language to show a moon in his forehead” and took her near Sri Periyava. When she went inside, she prostrated. Then as she thought, “Sri Periyava! I have come to have your darshan after 18 years. But, I am unable to have darshan of your holy feet”. Immediately, as if her prayers are answered, to her astonishment, Sri Periyava stood up and made her have a darshan of His feet.

Sasikala had another desire. Even though she is having darshan of Sri Periyava after so many years, she languished that she was unable to hear Sri Periyava’s words as He is observing mouna on that day. She had a desire that she wanted to hear Sri Periyava’s words.

Instantly, as though Sri Periyava heard her prayers, He walked towards a hut where Sri Narayananandha was staying.

When Sri Periyava, in sign language, showed something to Sri Narayananandha, he opened a book and started reading. While he was reading, as if to explain him, Sri Periyava started conversing in length with him, in Sanskrit. Sasikala just stood there by having darshan of Sri Periyava who fulfilled His devotee’s desires and prayers, even though He had to break his vows.

Sasikala understood one truth and she became happy when heard a person standing next to her told, “Sri Periyava is observing mounam today! He did not talk anything about worldly affairs. He just explained Upanishads in God’s language Sanskrit. So, he did not break his vows!”

She became very happy by thinking the unparalleled greatness of Sri Periyava, who recognized the longing spurted in His devotee’s bottom of her heart and without breaking the vows, blessed her without anyone noticing it.

Sri Periyava gained an unalterable place in devotee’s heart.

Child Swaminath!

Once while Sri Periyava was camping in Satara, Sasikala had a wonderful feeling. A Mantra Japam came in her thoughts all of a sudden. Without her realization, her mind kept repeating that mantra again and again. She did not understand the reason for her mind repeating the mantra “Swaminath…Swaminath”. But, she started thinking about Sri Periyava’s mother, Srimathi Mahalakshmi.

How would have that mother felt when her 13 year old was separated from her? How would have she felt when she thought how her kid would be suffering during winter season with just a saffron robe.

She kept thinking again and again about how Sri Periyava’s mother, Srimathi Mahalakshmi would have felt that pain in her heart. She started thinking that she is getting these thoughts because she is also suffering from unbearable cold. So, she went and bought woolen thread. She decided to present that to Sri Periyava, like a lovable mother. Even though she knew that Sri Periyava would not accept anything from others, she prepared a sweater using that wool thread by chanting Siva Nama. When she completed knitting the sweater by chanting one lakh Siva Nama, Sri Periyava had come to Satara.

When Sasikala started climbing 25 steps of a small mountain, where Sri Periyava was camping in dilapidated mutt, someone came and told, “Are you the one coming from Pune? Periyava is waiting for you. Please come!”

Sri Periyava was staying in a dark room and looked like He was expecting someone. When Sasikala kept the sweater in between the window rods, Sri Periyava took that like a kid. After He took, he kept in his chest and took it near his nose as if he is smelling it and after rubbing it in his face, Sri Periyava went inside. Sasikala stood speechless because of Sri Periyava’s grace.

At that moment, Sasikala felt that the mantra “Swaminath” stopped in her heart suddenly. She realized the wonder later when she read a book. Sri Periyava’s poorvashrama name, when He was Srimathi Mahalakshmi’s son was “Swaminathan”.

It is very true that the compassionate Sri Periyava, who showered His blessings to Sasikala, is awaiting to bless all His devotees with all happiness and prosperity.

Grace will continue to flow. (paaduvar pasi theerppai paravuvaar pinikalaivaai)

  • Sundaramoorthy Swami Thevaram


Categories: Devotee Experiences

Tags:

4 replies

  1. Sri Ramana Maharshi’s birth centenary was on 01 January, 1980!

  2. Please see the posting in this website on 7.3.2013, regarding the same incident titled “Be quick… be quick… Swami is looking at you”

    ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

  3. Hara Hara Shankara ! Jaya Jaya Shakara

  4. Scintillating Experiences! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Reply to kahanamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading