பால பெரியவா இருக்கா…பேசிண்டிருங்கோ!

Thanks Hari for the share…

 

HH_Mahaperiyava_bala_shatakapuram

ஶ்ரீ ஷகடபுரம் ஆச்சார்ய ஸ்வாமிகள் ஏறக்குறைய நம் பால பெரியவா ஸ்ரீ ஷங்கர விஜயேந்தர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் வயஸை ஒத்தவர்.

அவருடைய பால்யத்தில் அதாவது… பால பெரியவா பட்டத்துக்கு வந்த புதுஸில் ஒருநாள் காலையில் பெரியவாளை தர்ஷனம் பண்ண ஶ்ரீமடத்துக்கு சென்றிருந்தார்.
பெரியவா…அவருக்கான பூஜா மூர்த்திகளை அனுக்ரஹம் பண்ணினார். அதோடு குழந்தையாக இருந்த ஷகடபுரம் ஸ்வாமிகளுக்கு மற்றொரு குழந்தை ஸ்வாமியை அறிமுகப்படுத்த எண்ணினார்…

“நா…அனுஷ்டானம் பண்ணிட்டு வரவரைக்கும் அந்தப் பக்கம்… பால பெரியவா இருக்கா..ரெண்டு பேரும் பேசிண்டு இருங்கோ”

ஷகடபுரம் ஸ்வாமிகள் பால பெரியவா… இருவருக்குமே இது முதல் ஸந்திப்பு. அவரோ கன்னடம். தமிழ் தெரியாது! பால பெரியவாளுக்கோ அப்போது கன்னடம் தெரியாது! என்ன பேசுவது?

இருவரும் ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்து விட்டு ஆளுக்கு ஒரு பக்கம் போய் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

கொஞ்ச நேரம் கழித்து அனுஷ்டானம் முடிந்து பெரியவா உள்ளே வந்தார்.

“ரெண்டு பேரும்…என்ன பேசிண்டிருந்தேள்?”

என்ன பதில் சொல்வது?

பால பெரியவா சமத்து குழந்தையாக…மெதுவாக சொன்னார்…

“ஒண்ணும் பேசல…அவருக்கு தமிழ் தெரியாது…எனக்கு கன்னடம் தெரியாது.பெரியவா…”அழகாக சிரித்துக் கொண்டே

“ஏன் ஸம்ஸ்க்ருதம் இருக்கே! ரெண்டு பேருக்குமே தெரிஞ்சதுதான?”

ஆஹா! இது தோணாம போய்டுத்தே

இருவருமே நினைத்து வியந்தார்கள்.Categories: Devotee Experiences

7 replies

  1. Very blessed to see kanchi Acharyas and shakatapuram acharya together

  2. hara hara sankara jaya jaya sankara.

  3. Amazing. Child like innicence! Profound but Simple Wisdom! Hara Hara Shanakara, Jaya Jaya Shankara!

  4. Really a nice Post on Periyava’s amazing reply.

Leave a Reply

%d bloggers like this: