ஸ்ரீகண்டன் இருக்கும் இடத்தில் நீலகண்டம் வரப்போகிறது!

Thank you Saraswathi mami for the share…

Periyava_Mettur_Swamigal_Rare

பெரியவா உதிர்த்த முத்துக்கள் இவை!

சதா தன் நினைவாகவே வாழ்ந்து தனக்கென்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல், பெரியவா நினைவிலேயே வாழ்ந்த ப்ரதோஷம் மாமா’ ‘நீலகண்டா ,சஷாசிவா, கைலாஸபதே, பசுபதே என கூவி அழைத்து, தன்னைப் ப்ரார்த்திப்பதை செவி மடுத்த பெரியவா
நீலகண்டமான தான்,ஸ்ரீகண்டனான தான் இருக்கும் இடத்திற்கு ப்ரதோஷம் மாமா வரப் போவதைத்தான் இப்படி குறிப்பிட்டாரோ? இதைச் சொன்ன அடுத்த நிமிஷம் யாரோ ஓர் அன்பர் ஸ்ரீபெரியவாளுக்குக் கத்தையாக ரூ75000 கொண்டு வந்து சமர்ப்பிதார்.

இத்தனை பக்தர்கள் இருக்கையில் இவருக்கென்ன தனிச் சலுகை?

இருக்கிறது.

தன் சம்பாத்யத்தில் ஓரணா கூட சேர்த்து வைத்துக் கொள்ளாமல், ‘நீயே கதி’என ஸர்வச்வரனிடம்தாள் பணிந்து அவர் ஜயந்தி, மாச அனுஷம் எல்லாவற்றிற்கும் செலவு செய்து, தன் குடும்ப நலனில்
கொஞ்சமும் அக்கறையில்லாமல் சதா பெரியவா ஸ்மரணையிலும் தரிசனத்திலும் வாழ்ந்த உத்தமர் அவர்!
ஸர்வேச்வரனுக்குத் தெரியாதா அவருக்குத் தங்க இடமில்லை என்பது?

ஸ்ரீகண்டன் என்ற தொண்டரிடம், ‘அந்த வீட்டை (பங்காரு காமாக்ஷி தோட்டத்தில் இருக்கும்
தற்போதைய வீடு) அவருக்கே எழுதி வெச்சுடு’என்றார் பரந்தாமன்!

அது மட்டுமல்லாமல் ‘அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் என்ன இருக்கிறது’என்று ஒன்றும் தெரியாத
குழந்தைபோல் கேள்வி வேறு!

ஸ்ரீகண்டன்’அங்கேதான்’ பெரியவா படம் வெச்சு பூஜை நடக்கிறது’என்று சொல்ல,உடன் ஒரு
அருள் கட்டளை!

அந்த வீட்டை என்பேரில் எழுதி வெச்சுடு’!

இது எதைக்காட்டுகிறது?

பக்தர்களுக்காக பரந்தாமன் அவர்கள் இருக்கும் இடத்திலேயே நிரந்தர வாசம் புரிய விருப்பம்
கொண்டதை அல்லவா? நான் பாத்துக்கிறேன் என்று அபயம் காட்டுகிறவர் அல்லவா ப்ரபு! பரமேச்வரன்!

ஜய ஜய சங்கரா…..Categories: Devotee Experiences

Tags:

5 replies

  1. English translation please

  2. Pradosham mama is as famous as periyava themselves. Hara Hara Sankara Jaya Jaya Sankara

  3. Landmark for Prathosham mama house?

  4. Thanks for the share. On the way to Kalavai Periyava’s adhisthanam, we happened to go to sri Pradosham Mama house ( after coming to know from this website ) once with my family. We were asked to leave only after taking palaharam . That much of service minded they were. We were extremely very happy to take the prasadam and then only we left for Kalavai.

  5. Blessed Pradosham mama. Hara Hara Shankara

Leave a Reply

%d bloggers like this: