விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே – Seattle Anusham Group

I must give a context for this incident. I was contacted by Smt Saraswathi Thiagarajan mami to find out if there is any ongoing anusham group in Seattle. I asked few of my contacts but nothing could be found out….After a long gap, I was called by mami few days back how nicely this boy was blessed by Periyava that a full-blown anusham group has been formed in Seattle within months and on top of that HH Balaperiyava had blessed him with holy padhukas.

Started off with a passion in the heart to do anusha puja and a chanting of thotakashtakam resulted successfully celebrating anusham with 100+ devotees within months! Solid proof for Periyava bakthi! Solid proof for power of Thotakashtakam!!!

Way to go Dilip!!! Congratulations on your wedding and wish you all the bests for all upcoming anushams!

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

Dakshinamurthy_Adisankara_Periyava

சியாட்டிலில் ஆரம்பமான மஹாபெரியவா அனுஷ பூஜை!

சியாட்டிலில் நான் இரண்டு வருஷங்களாக வேலை பார்க்கிறேன். நான் இங்கு என் அபாட்மெண்டில் நான்கு பையன்களோடு வசித்து வருவதால் என் நித்ய கர்மானுஷ்டானங்களை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. எனக்குத் தெரிந்த ஒரு மாமியின் அறிவுரையின்படி விடியற்காலை எழுந்து சந்த்யாவந்தனம் செய்ய ஆரம்பித்தேன். எங்கள் குடும்பமே பெரியவா பக்தி பூண்ட குடும்பம். என் அப்பாவழிப் பாட்டிக்கு கல்யாணம் ஆனதே பெரியவா பவானி படம் கொடுத்து ஆசி கூறிய பிறகே! அடுத்த மாசம் கல்யாணம் ஆகிவிடும் என்று ஆசியளித்தாராம் பெரியவா .அதன்படி மறு மாசமே கல்யாணம் ஆனதாகக் கூறுவார் பாட்டி.

பாட்டி தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பெண்ணானால் பவானி என்றும் ஆணானால் சங்கர என்றும் பெயர் சூட்டுவதாய் நிச்சயம் செய்திருந்தாராம். முதலில் என் அப்பா பிறந்தபோது ‘இவனுக்கு பவானி சங்கர் என்ற பெயரே வைத்துவிடலாம் என நினைத்து அவ்வாறே செயல்படுத்தினாராம்.

என் அம்மா கல்யாணத்துக்கு முன் தன் அப்பாவுடன் பெரியவா தரிசனம் செய்யச் சென்றாராம். பெரியவாளிடம் என் தாத்தா தன் பெண்ணுக்கு (என் அம்மா) கல்யாணம் நிச்சயம் ஆகியிருப்பதைச் சொல்ல பெரியவா உடனே ஸ்ரீமடத்தில் சொல்லி திருமாங்கல்யம் கொண்டு வரச் சொல்லி  ‘இந்தத் திருமாங்கல்யத்தையே பெண் கல்யாணத்துக்கு உபயோகிச்சுக்கோ’ என ஆசி கூறி அளித்தாராம்.

எனக்கும் இது போன்ற இரண்டு வழியிலும் பக்திபூண்ட குடும்பத்தில் பிறந்தமையால் பெரியவாளிடம் அத்யந்த பக்தி. ஆனால் என்ன வழியில் இங்கு அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு தனி ஆளாக பூஜை செய்யமுடியும் என்று கருதி என் தெரிந்த மாமியிடம் கேட்டதில் அவர்களும் எனக்கு சில எளிய முறையில் பெரியவா பூஜை செய்யும் விதத்தைக் கூறினார்கள். அதன்படி பூஜை செய்து வந்தேன். திடீரென ஒரு நாள் இங்கே நாம் இருக்கும் இடத்தில் யாராவது கோவிலில் பூஜை செய்கிறார்களா என பலரிடம் கேட்டும் சரியான தகவல் இல்லை. இது பெரியவா ஆராதனை நடக்கும் மார்கழி மாசம்.

ஆராதனை அன்று என் எளிய பூஜையை வீட்டில் முடித்துக் கொண்டு எதாவது கோவிலில் நடந்தால் கலந்து கொள்ளலாம் என காரை எடுத்துக் கொண்டு சுற்றினேன். அப்பாடா ஒரு கோவிலில் பெரியவா படம் ஒந்று சிறியதாக வைக்கப்பட்டிருந்தது. அங்கே சென்று தோடகாஷ்டகத்தை நான் தொடங்க மற்ற சிலரும் சேர்ந்து கொண்டார்கள். அங்குள்ள அர்ச்சகரிடம் பெரியவா பூஜை இங்கு ஆரம்பிக்கலாமா எனக் கேட்டதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததல்லாமல் பெரியவா படம் அளவில் தயார் (High resolution picture) செய்து கொண்டு வருமாறு பணித்தார்.

நான் கம்புயுடரில் தேடி அந்த வேலையில் மும்முரமாகச் செயல்பட்டபோது என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்மணி ‘எதற்காக இந்தப் படம்..யார் இவர்’ என்றெல்லாம் கேட்க நானும் பெரியவா பற்றி நான் அறிந்த எல்லாம் அவளிடம் சொன்னேன். அவள் பெரியவா பற்றி யு-ட்யூபில் பார்த்து, கேட்டு அவருடைய தீவிர பக்தையானாள். அத்துடன் ‘இந்தப்படம் செய்ததற்கான செலவை நானும் ஏற்றுக் கொள்கிறேன் ‘ என்று சொல்லிப் பாதிப் பணத்தையும் கொடுத்து விட்டாள். அந்த மாசம் பூஜைக்கு நேவேத்யமும் தன் அகத்திலிருந்து செய்து வந்தாள். முதல் நாள் பூஜைக்கே 20 நபர்கள் வந்திருந்தார்கள்.! இது போல் மூன்று மாசமானபின் அங்கு வந்திருந்த ஸ்ரீமடத்துக்கு வேண்டிய ஒருவர் மடத்துக்கு இது பற்றித் தெரிவித்திருக்கிறார்கள். அங்கிருந்து என்னைக் காஞ்சிக்கு வந்து ஸ்ரீபாதுகா அனுக்ரஹம் ஆகியிருப்பதாகவும், வந்து பெற்றுக் கொள்ளும்படியும் தகவல் வந்தது.

இதற்கு நடுவில் என் கல்யாணம் நிச்சயாமாகி, சென்னையில் ஏப்ரல் 11ஆம்தேதி கல்யாணம். கல்யாணம் முடிந்து தம்பதி சமேதராக பாதுகையை பெற்று, கும்பகோணத்தில், வெள்ளிக் கவசம் ஏற்பாடு செய்து இங்கு எடுத்து வந்துவிட்டேன்.

மஹானுஷத்துக்கு இங்குள்ள கோவிலில் ஆவஹந்தி ஹோமம்,ருத்ர சமக பாராயணத்துடன் வெகு விமரிசையாக ஒரு வாத்யார் வந்து பாதுகா பூஜை செய்து வைத்தார். மனசுக்கு மிக இதமாகவும் சந்தோஷ்மாகவும் இருந்தது.

நாம் அவரைத் தீவிரமாக நினைத்தால் அவர் ஓடோடி வருவார் என்பதில் ஐயம் ஏதும் உண்டோ? கூவி அழைத்தால் அவர் குரல் கொடுப்பவராச்சே!!

இந்த தெய்வீக அனுபவம் உடையவர் திலீப் பி சங்கர். சியாட்டில். மிக உன்னதமான அனுபவம்.!!

ஜய ஜய சங்கரா…..



Categories: Devotee Experiences

16 replies

  1. Its all Periyava anugraham. I thank saraswathi mami and shri Mahesh for writing a post about the anusham event in Seattle area. By knowing this many bhaktas will join the anusham event and gain Peeiyava’s blessings.

    Periyava charanam

    • Dilip, my son is living in seattle now and we would like to know more about the anusham and other activities.Can you please reach out to me ? Since there is a lot of spam with yahoo, can you please give me your contact via this email id – bhunat2014@gmail.com.

      Thank you
      Bhuvana

  2. Dilip, What is your phone number / email? I lived in Seattle for 10 years, and unable to gather 3-4 families for all Jayanthi celebrations and HH Mahaperivaa Aradhana. I moved to Dallas last month where we have huge SatSang..

    you have THEIR HH blessings – otherwise, you would not have achieved this success. You are the blessed.

    I can connect you with few devotees I know in Seattle (Issaquah, Redmond) area. My phone number is 425 677 4578.

    Namaskarams. Jaya Jaya Sankara! Hara Hara Sankara!

  3. Very nice

  4. சென்ற பெரியவா ஆராதனையின் போது திலீப் என்னை கூப்பிட்டு ஆராதனை சியாட்டிலில் எங்கு நடக்கிறது என்று விஜாரித்துச் சொல்ல முடியுமா என்ரு கேட்டான். நான் அப்போது இந்தியாவில் இருந்தேன். மகேஷ் க்ருஷ்ணமூர்த்தி,பஞ்சனாதன் சுரேஷ், ஹரி ராமசுப்பு போன்ற என் நண்பர்களிடம் விஜாரித்ததில் சரியான விவரம் ஒன்றும் அறியமுடியவில்லை. ‘நீ வீட்டிலேயே ஏலக்காய் மாலை, பெரியவா சரணம் மாலை போட்டு, கிடைக்கும் புஷ்பங்களோடு முடிந்த நெய்வேத்யம் செய்து ஆரம்பம் செய்’ என்று சொல்ல, அப்படியே செய்து எனக்கு படமும் அனுப்பியிருந்தான். அன்றே கோவில் கோவிலாக அலைந்து மேற் சொன்னவாறு அனுக்ரஹம் அடைந்தான். ஐயனைத் தொழுவார்களுக்கு ஓர் குறையும் வராது என்பதுடன் வீடு தேடி அருள்மழை போழிவான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.! ச்ரத்தைதான் முக்கியம். இதனைப்பார்த்து மற்ற நண்பர்கள் எல்லா இடத்திலும் ஆரம்பிக்க வேண்டுமெங்கிற ஆவலில்தான் மகேஷிடம் சொல்லி இதைப் போஸ்ட் செய்யச் சொன்னேன் அல்லாது எந்த விளம்பரமும் உள் நோக்கம் இல்லை. நாம் சொன்னாலும் கேட்கக் கூடிய இளைஞர்கள் இப்போதும் இருப்பதைப் பார்த்து பெருமிதம் அடைகிறேன். பெரியவா..சரணம்.

  5. So much blessed.

  6. 206. கூவி அழைக்காத போதும் குறை தீர்ப்பான்;
    மெட்டு: கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
    கூவி அழைக்காத போதும் குறை தீர்ப்பான்; எங்கள்
    குருவே சரணமென்று (கை) கும்பிட்டால் அது போதும்
    கூவி அழைக்காத போதும்
    ஆவியோடைம்புலனும் அடங்கும் அவ்வேளைதன்னில் (3)
    அரைக்கணமெனும் (அவர்) நாமம் உருக்கமாய்ச் சொன்னால் போதும் (2)
    கூவி அழைக்காத போதும்
    மேவும் சிறப்புத் தரும் மெய்ஞான வேதியனே எனத்
    தேமதுரத் தமிழினிலே தினம் சொல மனம் விழைந்தால்
    பூமகளும் விழைந்தருள்வாள் புண்ணியங்கள் தானே சேரும்
    நாவினிக்க, மனமினிக்க நாதனவன் நாமம் சொல்லிக்

    கூவி அழைக்காத போதும்
    கூவி அழைத்தால் முருகன் குரல் கொடுப்பான் (சுவாமிநாதன் என்ற)அவன் பெயரைக் கொண்ட எங்கள் குருவோ கூவி அழைக்காத போதும் ” குறை தீர்ப்பான்
    “ஆவியோடைம்புலனும் அடங்கும் அவ்வேளைதன்னில் அரைக்கணமெனும் (அவர்) நாமம் உருக்கமாய்ச் சொன்னால் போதும் –
    அன்புள்ள செபரா

  7. Dilip u are being blessed by Maha Periyava. Hara Hara Shankara

  8. இதுபோன்று அஸ்ஸாம் குவாஹாட்டி நகரில் நாங்கள் பிரம்மச்சாரி வாசம் செய்து கொண்டிருந்த சமயம் ஸ்ரீ சர்குணராமன் என்பவர் ஸ்ரீ மகாபெரியவா கையில் ஒரு மரசொம்பு வைத்துக்கொண்டு சிரித்தபடி இருக்கும் ஒரு போட்டோவை கொடுத்தார் அதை நான் பிரேம் பண்ணி இங்கு கட்டப்பட்ட ஒரு சிறிய பிள்ளையார் கோவிலில் மாட்டி மகிழ்ந்தோம். 30 வருடங்கள் முன்னால். காலப்போக்கில் அந்த கோவில் ஆலவ்ருக்ஷமாக வளர்ந்து விட்டது 7 சன்னதிகளுடன் . அவரும் சென்னை மாற்றல் ஆகிச்சென்று ரிடைர் ஆகி இப்போது ஒரு வேத பாடசாலையுடன் இணைந்துள்ளார். அந்த ஸ்ரீ மகா பெரியவா படம் மற்ற படங்களுடன் கழற்றி ஸ்டோர் ரூமில் வைத்து விட்டார்கள்.

    அவரை பார்த்திராத ஒரு அந்தணர் இல்லாத பக்தர் மிகவும் பக்தி கொண்டு வைதீக தர்மத்திற்கு தன்னால் ஆன நிறைய தொண்டுகள் கோயம்பதூரிலிருந்துசெய்து வருகிறார். சமீபத்தில் இங்கு வந்த சமயம் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் ஸ்ரீ மகா பெரியவா படத்திற்கு நமஸ்காரம் செய்துவிட்டு தான் ஆரம்பிப்பேன் என்று இந்த கோவிலுக்கு வந்ததும் ஸ்டோர் ரூமில் தேடிக்கண்டு பிடித்து பழயபடி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் சந்நிதியில் இந்த படத்தை மாட்டினோம். என்னே அவர் அருள் !!!

  9. Dilip, so blessed you are. keep on following periyava. best wishes.

  10. ஜய ஜய சங்கரா

  11. So graceful and blessed you are Sri Dilip Garu. HE is our destination and HE will show the way to reach, only the inclination is needed. BE BLESSED! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  12. This has been my long time dream as well. I have been requesting Periyavaa to make Seattle as one of his homes. I was asking the temple folks about MahaAnusham and this young man showed up saying that he has Paadhukaas and there will be pooja! I couldn’t believe my ears because that had been a long time desire of mine as well, to just see his Paadhukaa. Many thanks to Dilip.

  13. The w orld would be different if all others in India and abroad
    emulatethis Noble Lady to spread about Adi Sankara and Maha Periyava
    (asmat acharya paryantaam) and start sarvajanik pooja on occasions.
    Avan AruLaale avan thaaL vaNangi…Kamala & Vedanarayanan. Pune.

  14. Mahaperiavaa charanam charanam ! Avarudaya Arulkadakshathhukku Ellayai ( No limits) kidayadhu.

    Mahaperivaa thiruvadigaluku namaskaram.

    Best wishes Sri Dilip, Keep up the good work, Mahaperiavaaa will always be with you.

Leave a Reply to Saraswathi ThyagarajanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading