ஸ்ரீ ஸித்தேச்வராஷ்டகம் – A new treasure!

periyava-t

Thanks to Sri Suresh a.k.a Saanuputhran for sending this email and history behind this ashtakam. It is absolutely delightful to know that Brahmasri Mullaivasal Krishnamoorthy Ganapadigal has written bashyam for this work. Until now I did not know that he did the scribing when Mahaperiyava compiled Sri Durga Pancharathnam. What a baghyam! If He is not blessed by Lalitha Parameswari, how such great things could happen?? It is also quite delightful to know that Sri Ganesa Sarma, Smt Gita Kalyan and Sri Ambi of Echangudi were also blessed to get involved in this holy project. Only Periyava knows whom to involve to get few projects done. It is very clear that great devotees like Suresh and others are blessed to do this project.

For non-Tamil readers – Sri Mahaperiyava compiled an ashtakam called “Sri Siddheshwarashtakam” during His Kasi Yatra. With the help of Sri Ganesa Sarma and Echangudi Sri Ambi mama, this engravings were found in the Siddheswarar Temple and with the help of one of the greatest authorities of veda today – Brahmasri Mullaivasal Ganapadigal, bashyam was also compiled. On this auspicious Jayanthi day, on behalf of all these greatest devotees like Sri Suresh, I share this treasure with all of you. Include this in your everyday prayer and receive the blessings of Lord Siddheswarar, who is none other than our Mahaperiyava.

Let us wait for some volunteers to translate the slokas and the meaning in English.

Interestingly, I found this article related to the same kshetram Enjoy!

Our namaskaram to jagadguru, to Sri Ganapadigal and others who were involved in this project.

Hara Hara Sankara Jaya Jaya Sankara

பெரியவாசரணம்.

மஹேஷ் அண்ணாவுக்கு நமஸ்காரங்கள்.

இப்பவும்வருகிறமஹாஅனுஷவைபவத்திலே லோகத்திற்கு ஸ்ரீ சரணாளின்அருட்பிரசாதமாக, வரப்ரசாதமாக அவருடைய விரசிதங்களான (அவரால் இயற்றியருளப்பட்ட)  ஸ்ரீ ஸித்தேச்வராஷ்டகம் மற்றும் ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்ன ஸ்லோகங்களை கொண்டு சேர்க்கும் மஹாபாக்கியம் பெற்றமைக்கு ஸ்ரீசரணாளுக்கு ஆத்மார்த்தமாக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றேன்.

இந்தபொக்கிஷம்பற்றி சமீப பொழுதிலே ஸ்ரீசரணாள் அடியேனின் கனவிலே உதிர்த்த வார்த்தைகளும், அதன்படியாக அடியேனுக்கு இந்த பொக்கிஷம் கிடைக்கப் பெற்றநிகழ்வும் தந்த ஆனந்தத்தை விடவும் அதிகமாக இதனை எல்லோருக்குமாககிடைக்கச்செய்வதில் பெறுகின்ற ஆனந்தம் உணர்கின்றேன்.

இந்த அற்புதமான ஸ்லோகத்திற்கு பாஷ்யம் எழுதியருளியது ஸ்ரீமான் முல்லைவாசல் க்ருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.  இந்த மஹோன்னத கார்யத்திலே அடியேனுக்கு பக்கபலமாக இருந்தவர் “ஸ்ரீதேவீநாராயணீயம்”, “ஞானப்பான” போன்ற பற்பல மலையாள பொக்கிஷங்களை தமிழாக்கம் செய்ததோடு, இன்றும்அனைவருக்கும் சொல்லிக் கொடுத்துவரும், சென்னை, ட்ரஸ்டுபுரத்தைச் திருமதி  கீதா கல்யாண் அவர்களுக்கு எந்தன் நன்றிகள். அவர்கள் தாம் ஸ்ரீசாஸ்திரிகளிடம் இருந்து இதற்கு பாஷ்யம் எழுதிப் பெற்றுத் தந்தார்கள்.

இந்த ஸ்ரீஸித்தேஸ்வராஷ்டமானது, நம் மஹாஸ்வாமிகள் கிட்டத்தட்ட 70 ஆண்டுகட்கு முன்பாக காசி யாத்திரை சென்ற போது ஸ்ரீஸித்தேஸ்வரரின் மேல் இயற்றியருளியது.

ஸ்ரீமான்க ணேசசர்மா மாமா மூலமாக இதன் கல்வெட்டு இன்றும் ஸ்ரீஸித்தேஷ்வரர்கோவிலில் இருப்பதனையும் அறிந்தோம்.  சமீபத்திலே ஈச்சங்குடி அம்பி மாமா மூலமாக அறிந்த செய்தி கண்டு வெகுவாக ஆனந்தித்தேன். காரணம், இத்தோடு பகிரும் ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்னத்தினமானது நம் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் சொல்லச் சொல்ல ஸ்ரீசாஸ்திரிகள்தாம் எழுதியதாம். அவராலேயேஇன்று இந்த ஸ்ரீ ஸித்தேஸ்வர அஷ்டகத்திற்கும் பாஷ்யம் கிட்டியிருப்பது சாக்ஷாத் நம் கலியுக தெய்வம்தாம் இதனை இந்த நேரத்திலே லோகத்திற்கு கிடைக்கச் செய்வது புரிகிறது என்றார் அம்பி மாமா.  சென்ற ஞாயிறு அன்று இதன் பிரதிகளை கும்பகோணம் சென்றிருந்தபோது ஸ்ரீமடத்திலே அம்பாள் காமாக்ஷி சன்னிதானத்திலே சமர்ப்பித்து ப்ரார்த்தித்த போது நிகழ்ந்த நிகழ்வுகளை முகனூலில் எனது தலைவாசலிலே பகிர்ந்திருந்தேன். தாங்களும்படித்திருப்பீர்கள்.

மஹா அனுஷம் நடைபெறும் சில பல இடங்களுக்கு சொற்பமாக நூறு காப்பிகள் மூலமாக அனுப்பயத்தணித்துக் கொண்டிருக்கின்றேன்.  அவ்வாறு அனுப்புகையில் அனுஷம் நடத்திடும் அன்பர்களை, அங்கு வரும் பக்தர்களுக்கு இதனைத் தருவதோடு அவர்க்ள் அனைவரையும் அந்த சன்னதியிலே இதனை பாராயணம் செய்யவும் வைத்தருளுமாறும் வேண்டிக்கொண்டு வருகின்றேன். இதனைப் பெறும்பக்தர்கள் அருட்கூர்ந்து இதனை தங்களால் இயன்றளவு காப்பிகள் எடுத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்து அடுத்த சந்ததியினருக்கும் இந்த பொக்கிஷங்கள் கிடைக்க உதவ ஸ்ரீ மஹாஸ்வாமிகள் அனுக்ரஹிக்கனும்னு ப்ரார்த்தித்துக் கொள்கின்றேன்.

அருட்கூர்ந்து இந்த ஸ்ரீ மஹாஸ்வாமி விரசிதங்களை சனிக்கிழமை21.05.2016 அன்று காலை8.30 மணிக்கு மேல் நம் கலியுகவரதனின் கோவிலானSage of Kanchi யில் பகிர்வதோடு தங்களுக்குத் தெரிந்த அனைத்து வலை தளங்களிலும்(websites) பகிர ஏற்பாடுகள் செய்து உதவுமாறு நமஸ்காரம் பண்ணி கேட்டுக் கொள்கிறறேன்.  அவ்வண்ணமே முகனூலிலும் மற்ற வாட்ஸ் அப் குழுவினிலும் இதனை சனிக்கிழமை காலை பகிரவும் செய்வதாக உத்தேசம். ஸ்ரீசரணாள் எல்லோரையும் அனுக்ரஹிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

அடியேனாம் அற்பப் பதரையும் ஒரு சிறு கருவியாக கொண்டு இயக்கும் அவ்யாஜ கருணாமூர்த்தியான ஸ்ரீசரணாளை அடியேன் இப்பிறப்பில் மட்டுமன்றி இனிபிறக்கும் பிறப்புக்களிலெல்லாம் வாழ்நாள் முழுவதும் ஸ்மரணை செய்து வாழும் பாக்கியம் நல்கிட வேண்டிதாங்களும் எல்லா பெரியோர்களும் பிரார்த்தனை செய்து ஆசிவழங்குங்கள்.

குரு கடாக்ஷத்திலே எல்லோருக்கும் ஜெகத்பிதா – ஜெகன்மாதா அருளும் கிட்டி அனைவரும் ஆனந்தமாக வாழ ப்ரார்த்தனை செய்கின்றேன்.

குருவுண்டு – பயமில்லை;  குறையேதும் இனியில்லை!

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்

சாணு புத்திரன்.



Categories: Bookshelf

19 replies

  1. WONDERFUL….HARI OM..!

  2. Namaskaram. Can we have this lyric in Sanskrit please ? Thanks.

  3. சாணுபுத்ரன் பெரியவா கடாக்ஷம் நிறைய உடையவன். அவன் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதுவும் பெரியவா கைங்கர்யமானால் பூர்ண ச்ரத்தை இருக்கும் என்பதில் ஐயமில்லை! கீதா கல்யாண் நல்ல சம்ஸ்க்ருத அறிவு உடையவர். அரும் பல மலயாள நூல்களைத் தமிழாக்கம் செய்தவர். பக்திமான். தகுந்த மனிதர்களால் வெளிக்கொணரப்பட்ட பொக்கிஷம்.!!

  4. Humble pranams to Sri P R Ramachender for the excellent translation.

  5. TThank you so much for sharing this great sloka.
    Jaya Jaya Sankara Hara Hara Sankara.

  6. Really felt blessed to receive this treasure.No words to express our gratitude. Hara Hara sankara.

  7. I have attempted an english translation. You can see it in http://stotrarathna.blogspot.in/2016/05/sidheswarashtakam-by-maha-periyava.html

  8. Can you please provide the samskrt lyrics for this stotram?

    HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA

  9. Sitting at home, what a blessing to receive these treasures! Shri Sannuputhiran and Sage of Kanchi team deserve tons of thanks from people like us.

  10. கீதா அம்மாவின் இனிய குரலில் ஸ்ரீ ஸித்தேஷ்வராஷ்டகமும்

    ஸ்ரீ துர்கா பஞ்சரத்ன ஸ்தோத்ரமும் கேட்க கேடக மிக அருமை

    அண்ணா! ஆஹா! என்னே எம் பாக்கியம்! எம்மாத்து

    பெண்டுகள் கீதா அம்மாவை போல பாட முயற்சி செய்து

    கொண்டு இருக்கிறார்கள்!

  11. எடுத்த எடுப்பிலேயே இந்த சுலோகத்தை ‘புஜங்க மீட்டரில்’ நான் பாட ஆரம்பிக்க அது சுலபமாக அவ்வாறே அமைந்து விட்டது. ஸ்ரீ ஆதி சங்கரர் திருசெந்தூர் முருகப்பெருமானை ஸ்ரீ சுப்ரம்மணிய புஜங்கம் என்ற ஸ்லோகத்தை இந்த நடையில் எழுதிஉள்ளார். ஒரு சர்ப்பமானது ஊர்ந்து செல்லும் நடையில் இயற்றப்பட்டது. அதே போல் சர்பத்தை அணிந்திருக்கும் இந்த ஸ்ரீ சித்தேஸ்வரருக்கும் இவ்வாறு அமைந்திருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது .

    எம் மஸ் அம்மா அவர்கள் பாடிய இந்த ஸ்ரீ துர்கா பஞ்ச ரத்ன ஸ்தோத்திரத்தையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

    மிக்க நன்றி.

  12. Maha Bhagyam to receive this Great slokas. Great service by Sri Saanuputhran and Mahesh in sharing this Treasure among Maha Periyava Bhakthas. Will become Nithya PaaraayaNam. Maha Periyava Blessings be on all of us! Hara Hara shankara, Jaya Jaya Shankara!

    • எல்லோருக்கும் நமஸ்காரம். இயங்குவது நாமென்றாலும் இயக்குவது அவர் தாமே! எல்லாப்புகழும் எம் இறைவனாம் ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சங்கர மஹாப்ரபுவுக்கே! விரைவில் இதன் ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் transliterate செய்து அனைவருக்கும் வழங்கிடும் பாக்கியத்தை ஸ்ரீசரணாள் நல்கிட உங்கள் அனைவருடைய ப்ரார்த்தனை பலம் துணை நிற்கும். பெரியவா கடாக்ஷம்.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading