It was in 1981, when Periyava’s Jayanthi celebration events are being planned out. A team of Tamil scholors decided to organize a kavi arangam in Mylapore Sankara Matam under the blessings of HH Pudhu Periyava.
Mummanikovai is not easy to write. It needs to be written in three styles –
- 1st poem using Vembavai,
- 2nd using “Kattalai Kalithurai”
- 3rd using a “Vritham”
Three poets are identified for this. Sri Ayyarappan was chosen to write on Adi Acharya, Sri Ilanthai Ramaswamy for Mahaperiyava and Sri Mathivannan for Sri Pudhu Periyava. While they an be independent poems, the start of the poem has to be using the last word of the other poem – kind of “anthakshari”. Words are chosen, each went in different direction to write the poems. In Kattalai Kalithurai format, each sentence is very tightly measured on how many vowels etc!! Writing such poem is difficult. To give a comparison, Abirami Andhathi is written using this format, as I was told!
Sri Ramaswamy mama started writing the poem on Mahaperiyava – he finished it. After finishing the poem, he had a dream where Mahaperiyava reviews the whole poem and points out the uniqueness of the poem and appreciates the poem in general. What a great blessing!! Later mama presented this in the kaviarangam headed by Yogi Siddhanandha Bharathi. This was published as a book too and offered the book to Periyava. Later on, when his children go for Periyava darshan, they chant this poem and received blessings from Periyava!
This entire incident reminds me of Sri Kachiayappa Sivacharyar, who wrote Kandapuranam in Tamil. Every night He places the script He wrote at the holy feet of Lord Muruga in the Kumarakottam temple, Kanchipuram. When He opens the door, He found where Lord Muruga Himself proof-read the entire work. This went on every night. That is how the Kandapuranam in Tamil was written! Although Mahaperiyava did not proof-read, He still reviewed the whole work!!
I requested mama to share the other two poems too – on Sri Adi Acharya and Sri Pudhu Periyava. Once I have them, I will share them too….
It was amazing to note that mama remembered every word of the poem even today! He has quite some experience with Periyava and I requested an interview and he has kindly agreed for the same. Soon, I will post his interview as well.
Here is the poem! Enjoy!!
பெரியவாள் பதிகம்
புகழ்கின்ற சொல்லில் பொருளாக நிற்கும் புனித மறை
அகழ்கின்ற நெஞ்சில் அருளாக மாறி அழகுதரும்
நிகழ்கின்ற கால நெளிவிலே பற்றிடும் நிம்மதியாய்த்
திகழ்கின்ற காஞ்சித் திருமகன் தெய்வத் திருவடியே!
நேர்நின்ற பேச்சும் , நிறைநின்ற காப்பும், நினைவுகளின்
பேர்நின்ற வெற்றிப் பெருமிதம் பேசும் பெருமைகளும்
கூர்நின்ற பார்வை குளிர்கின்ற அன்புக் குளிர்நிலவும்
கார்நின்ற காஞ்சிப் பெரியவர் தம்முள் கனிந்திடுமே!
பொன்னை உருக்கிப் புடம்போ’ட்டு வார்த்தநற் புண்ணியமே,
தன்னைக் கரைத்துத் தனதுளம் தன்னையே தாங்கிவர
மின்னைக் கரைத்து விழியமு தாக நீ வீசுகிறாய்
என்னே அழகிதை எப்படி நானும் இசைப்பதுவே!
வந்தர சாளருள் மாமணியே, மறை வாரிதியே,
தந்திர மந்திர சாகச மில்லாத் தவமணியே,
எந்திர வாழ்வில் எமக்கருள் செய்ய எழுநிதியே,
சந்திர சேகர சங்கராச் சார்ய சரஸ்வதியே!
சிரிப்புக் கிடமா’ய்த் திரிந்து தினம்தினம் தின்னுபசி
அரிப்புக் கிடமா’ய் அலமரும் ஏழை அடுதுயரைப்
பிரிப்புக் கிடமாய்ப் பிணித்தவர் வாழப் பிடியரிசி
விரிப்பைத் திறந்து விடியல் அளித்தனை வித்தகனே!
விதவித மாக விரிந்திடும் பாதை விரிவுகளில்
மதமத பேத மரபுகளுக்குள் மலர் நகையாய்ப்
பதம்பத மாகப் பரிவுடன் நீயொரு பாலமிட்டாய்
நிதநிதம் நின்னடி போற்றுவோம் நெஞ்ச நிறைமலரே!
காவி உடையும், கரத்தில்செங் கோலும், கமண்டலமும்,
மேவிச் சிரசில் விரிமலர் மாலை விழுதுகளும்,
தாவில் தவமும், தவக்கனல் தந்த தரிசனமும்
ஆவி எடுத்த பயன்தர வாய்த்தநல் ஆலயமே!
பேசாத பேச்செழு பேரின்ப வெள்ளப் பெருக்கினில
மாசாக வந்து மனந்தின்ற யாவும் மயங்கிவிழும்
தாசாதி தாசராய்ச் சங்கரன் பாதங்கள் சாரவிழி
வீசா’த வீச்சில் விரிந்திடும் வேத வியப்புகளே!
நினைவே தவமாய் நினதடி சார்ந்து நெருங்கிவரக்
கனவாய்க் கதையாய்க் கரந்த பலப்பல காட்சியெலாம்
நனவாய் விழிகளில் நாடக மாக்கிடும் நாயகமே,
தனியே இலாத தனியே, தவமேநற் தண்ணருளே!
முதற்பொரு ளாகிடும் மொய்ம்பினை , வேத முழுப்பொருளை,
கதிப்பொரு ளாகிடும் காஞ்சி காம’ட்சியாம் கற்பகத்தை,
துதிப்பொரு ளாகத் தொழுதிடும் ஞானச் சுடர்மதியை
நிதிப்பொரு ளாகப் பிடித்திட நெஞ்செழும் நிம்மதியே!
Categories: Bookshelf
மஹா புண்ணியம் செய்ய வேண்டும் மஹா பெரியவாளை
தரிசிக்க, மஹாமஹ குளம் முழுகி பாக்கியம் பெறாத
குறைகளையும் தீர்த்திடுமே அவரது தரிசனமே!
அன்னதான சிவன் என்ற முதியவர் புகழ் பெற்றார் அவர்செய்த தொண்டினாலே. சிவன் சார் தொண்டுக்கிழவனார் சோதரர் தான் இவரே , இருவருமே அம்மைக்கு தொண்டு செய்த துறவிகளே !
இரத்தின களஞ்சியமே தெய்வத்தின் குரல்தானே , குரல்
வளையை பிடிக்கும் இந்த சம்சார சாகரத்தை கடத்துவிக்கும்
துடுப்புகளே, படகோட்டியும் இவர்தானே !
சொல்லும் பொருளும் விளையாடும் திரு அழகுடைய பாக்கள்! நமக்குப் புகழக் கூடத் தகுதியில்லை. பெரியவாளே அங்கீகரித்தபின் நமக்கு அனுபவிக்க மட்டுந்தான் உரிமை..கடமை அல்லவா?சங்கரா நின் தாள் போற்றி போற்றி
Thanks for this writeup