Periyava Golden Quotes-211

album2_85

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்தையும் உரைத்து உரைத்து அலசிப் பார்க்க வேண்டும். “இந்தக் காரியத்தில் சொந்த லாபம், பேர், புகழ் இருக்கிறதா? ஆசையிருக்கிறதா? துவேஷம் இருக்கிறதா? பட்ச பாதம் இருக்கிறதா? இவை இருந்தால் வெளிப்பார்வைக்கு நாம் செய்வது எத்தனை உயர்வாக இருந்தாலும் அது பாபம்தான்” என்று நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் அலசி அலசிப் பார்க்க வேண்டும். நமக்கு என்று நாமாக ஆசைப்பட்டு ஒரு காரியத்தை உண்டாக்கிக் கொண்டால் அதைச் சாதித்துக் கொள்வதில் அநேக தப்பிதங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதனால் அவரவருக்கும் சாஸ்திரம் வைத்திருப்பதே காரியம் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொன்னாற்போல் அதையே பிரமாணமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமமான அன்புடன் இருந்து கொண்டு, சுத்தமான எண்ணத்தோடு அவரவரும் அப்படித் தன் கர்மத்தைச் செய்தால், சமூகத்தில் போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு எதுவுமே இருக்காது. லோகமே இன்பமயமாக இருக்கும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

We must keep applying the teachings of Bhagawad Gita with ardor in every work and action of our life. Every time we do a work we must ask ourselves: “How do we benefit from this work? Will it bring us fame? Are we motivated by desire or hatred? Are we being partial to somebody in carrying it out?” If there are any of these elements associated with our action it must be considered sinful even if it seems exalted to the outside world. If we do something on our own, dictated by our own desire, there will be much wrong-doing in accomplishing it. So, as Lord Krishna says, all our karmas (actions) must be completely based on the sastras. If everybody acts with equal love for all, with a pure heart, and clean mind there will be neither any rivalry nor any quarrel in society. The world then will be filled with joy. – Pujya Sri Kanchi Maha Periyava.

 



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading