Nothing Equal to Sri Sankara Jayanthi Maha Punniya Kalam-Why?

adi-shankara-4

 

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Over the past couple of weeks we have been seeing about the greatness of our Adi Aacharyal and  why Sri Sankara Jayanthi is much more significant than other auspicious times and Jayanthi’s. Is it because we are followers of Sri Sankara that makes us say this or is it because of the occasion that makes us sing its praise? Or is it because Sri Periyava comes in the lineage of Sri Shankara or has a special liking for him? It’s neither of them which Sri Periyava explains in his own emphatically pellucid style. Happy Sri Sankara Jayanthi!!

Thanks to our sathsang seva member Shri ST Ravikumar for the translation. Ram Ram

பரம புண்யமான ஸ்ரீ சங்கர அவதார காலம்
ஒரு நந்தன வருஷத்தில் வைசாக சுத்த பஞ்சமியில் அபிஜித் முஹூர்த்தத்தில் ஏற்பட்டது. வைசாக சுத்த பஞ்சமி என்றால் வைகாசி மாஸத்து வளர்பிறைப் பஞ்சமி. அதாவது சித்திரை மாஸ அமாவாஸ்யை ஆனவுடன் வரும் பஞ்சமி. அபிஜித் முஹூர்த்தம் என்பது ஸூர்யன் நடு உச்சியிலிருக்கும் மத்யான வேளை. ஜயப்ரதமான (வெற்றி வழங்கவல்ல) முஹூர்த்தம். அன்றைக்குத் திருவாதிரை நக்ஷத்ரம் — பரம சிவனை அதி தேவதையாகக் கொண்ட நக்ஷத்ரம். ராமசந்த்ர மூர்த்தியைப்போலவே ஐந்து க்ரஹங்கள் உச்சமாக இருக்கும் அபூர்வமான காலத்தில் ஆசார்யாள் அவதாரம் பண்ணினார். (ராமர் மாதிரியே ஆசார்யாளும் புனர்வஸு நக்ஷத்ரம் என்றும் அபிப்ராயமிருக்கிறது. வைசாக சுத்த பஞ்சமி திருவாதிரை அல்லது புனர்வஸு என்ற இரண்டிலொரு நக்ஷத்திரத்தில்தான் வருவதைப் பார்க்கிறோம்.)

ஸ்ரீ சங்கர ஜயந்திப் புண்ய காலத்துக்கு ஸமமாக எதுவுமில்லை.  இப்படி நான் சொன்னால், “ப்ரக்ருத விஷயம் (தற்போது எடுத்துக்கொண்டுள்ள விஷயம்) ஆசார்ய சரித்ரமானதால் அதை விசேஷமாக ஸ்தோத்ரிக்கத்தான் வேண்டும் என்பதற்காக ஒரேயடியாய் உசத்தி வைத்துச் சொல்கிறாரா? இல்லாவிட்டால் நாமெல்லாம் ஆசார்யாளின் ஸம்ப்ரதாயத்தில் தானே வந்தவர்கள் என்பதால் சொல்கிறாரா? அல்லது அவருடைய மடத்தில் அவருடைய பெயரை வைத்துக்கொண்டுதானே இவர் ஸ்வாமிகளாக ஊர் கூட்டிக் கொண்டிருக்கிறார் என்பதனால் சொல்கிறாரா?” என்று தோன்றலாம். அதாவது (ஸ்வய) அபிமானத்தால் தூக்கி வைக்கிறேனோவென்று தோன்றலாம்.

இப்படிப்பட்ட காரணங்களுக்காக அந்த ஜயந்திக்கு நான் உயர்வு கல்பித்துச் சொல்லவில்லை. கல்பனையே இல்லை! மிகையோ, ஸ்தோத்ரமோ இல்லை! வாஸ்தவத்திலேயே அதற்கென்று இருக்கும் உயர்வினால்தான், ‘எல்லாப் புண்ய காலங்களிலும் நம்முடயை ஆசார்யாளின் ஜயந்திதான் பரம புண்ய காலம்’ என்று சொல்கிறேன். புண்ய காலங்கள் எவ்வளவோ இருக்கின்றன. சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ஸ்ரீராம நவமி, நரஸிம்ஹ ஜயந்தி, ஸரஸ்வதி பூஜை, விஜய தசமி, விநாயக சதுர்த்தி, ஸ்கந்த ஷஷ்டி, இன்னம் உத்தராயண புண்ய காலம், தக்ஷிணாயன புண்யகாலம் என்றெல்லாம் எத்தனையோ இருக்கின்றன. எல்லாமே உத்க்ருஷ்டமானவை (உயர்வு பொருந்தியவை) தான். என்றாலும் ஸ்ரீசங்கர ஜயந்திதான் ஸர்வோத்க்ருஷ்டமானது (எல்லாவற்றையும்விட உயர்வுபொருந்தியது) என்பது வாஸ்தவம்.எப்படி?

மற்ற புண்ய காலங்கள் சொன்னேனே, வேதங்களாலேயும் புராணங்களாலேயும் அநேக சாஸ்த்ரங்களாலேயும் ஸித்தமான அந்தப் புண்ய காலங்களெல்லாம் தொன்று தொட்டு யுகங்களாக அநுஷ்டிக்கப்பட்டு வந்திருப்பவை. இந்தப் புண்ய காலம் (ஸ்ரீ சங்கர ஜயந்தி) அவற்றுக்கெல்லாம் ரொம்பவும் பிற்பாடுதான் உண்டானது. ஆனாலும் இதுவே ஸர்வோத்க்ருஷ்டமானது என்றால் எப்படி?

ஸரி, இந்தப் புண்ய காலம் எதற்காக உண்டாயிற்று?

வேதங்களையும் புராணங்களையும் சாஸ்த்ரங்களையும் புனருத்தாரணம் பண்ணுவதற்காகத்தான்.

இந்தப் புண்யகாலம் (ஸ்ரீ சங்கராவதாரம்) ஏற்படாமலிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

பௌத்தம் முதலான மதங்களும், ஈச்வர பக்தியைச் சொல்லாத ஸாங்க்யம், மீமாம்ஸை போன்ற மதங்களும் தான் ஒரேயடியாகப் பரவியிருக்கும். அப்படிப் பரவியிருந்தால் அப்புறம் சிவராத்ரியும், ஸ்ரீராம நவமியும், மற்ற புண்ய காலங்களும் யார் கொண்டாடியிருப்பார்கள்? அத்தனை புண்ய காலங்களையும் அவைதிகம் அடித்துக் கொண்டு போயிருக்கும். ஏறக்குறைய அப்படிப்பட்ட கட்டத்தில் மற்ற எல்லாப் புண்ய காலங்களும் தத்தளித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஒரு புண்ய காலம் ஏற்பட்டது! ஏற்பட்டு வேத வழியை மறுபடி நன்றாக நிலைநாட்டி அந்தப் புண்ய காலங்கள் அத்தனைக்கும் புத்துயிர் கொடுத்து அவற்றை நிலை நிறுத்திற்று! இன்றைக்கும் சிவராத்ரி, ஸ்ரீராம நவமி, கோகுலாஷ்டமி இத்யாதியை நாம் புண்ய காலங்களாகக் கொண்டாடுகிறோமென்றால் அதற்கு ஆசார்ய ஜயந்தி என்ற புண்ய காலம் ஏற்பட்டதுதான் காரணம். இந்த ஒரு ஜயந்தி இல்லையென்றால் எந்த ஜயந்தியுமே இல்லாமல் போயிருந்திருக்கும்! ஜயந்திகளையெல்லாம் ரக்ஷித்துக் கொடுத்த ஜயந்தியாக இருப்பது ஸ்ரீ சங்கர ஜயந்தியே என்பதால்தான் அதைப் புண்ய காலங்கள் அத்தனையிலும் விசேஷமானது என்றது!

ஜய சப்தம் ஆசார்யாளோடு விசேஷமாகச் சேர்ந்து “ஜய ஜய சங்கர” என்று உலகமெல்லாம் முழங்குகிறதென்று சொன்னேன். அதில் இந்த ஜயந்தி விசேஷத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*******************************************************************************************************
This most holy and auspicious birth (Sri Sankara’s birth event) took place during the year, Nandana, Vishaka month, Pure Panchami thithi and in Abhijeet muhurth.  Visaka, pure Panchami means the Panchami occurring during valarpirai (the waxing moon period), that is, the Panchami occurring subsequent to the Amavasya of Chitra month.
Abhijeet muhurth means the time when Sun is directly above us in the afternoon and which is capable of bestowing great success.  The star of the day was Thiruvadirai (Arudhra), the star which has Lord Shiva as its deity.  Similar to Shri Ram, Acharya’s birth took place at a rare moment when 5 planets were at their peak.  (There is also a belief that Acharya’s star is also Punarvasu, just like that of Shri Ram.  We also observe that Visagha Panchami always occurs on a day
having either Arudhra or Punarvasu star).

If I say that nothing can compare to the most auspicious event of the birth of Sri Sankara, you may wonder whether I am praising it so highly, because it is prakruth vishayam (we are presently discussing the topic of his birth).  Or because we are descendants, following the path prescribed by Him or because that I belong to His Sri Matam and able to gather audiences by virtue of being a Swami (saint) having the same name.  In other words, you may think that I am highlighting that way out of pride or vanity. These are not the reasons which I have attributed to its greatness.

This is not any imagination or exaggeration or eulogy, but due to its very inherent greatness.  I say that the time of the birth of our Acharya is the holiest.  There are so many holy events, like Shivarathri, Gokulashtami, Sri Rama Navami, Narsimha Jayanthi, Saraswathi Pooja, Vijaya dhasami, Vinayaka Chathurthi, Skanda Sashti etc.  And also the holy period of Utharayana, Dhakshinayan etc.  All these certainly are very auspicious.  However, still, Adi Sankara’s birth event is the most auspicious.

How?

The holy events I just said and which find mention in the Vedas or Holy scriptures, are all being observed since time immemorial or eons.

This auspicious occasion (the birth anniversary of Shri Adi Sankara) has happened much later. Still how do I say that it is the holiest or most auspicious.

Ok, Why did this auspicious event occur?

Only for re-establishing the vedas, holy scriptures and doctrines.

What would have happened if this holy event had not taken place?

Religions like Budhism or religions like Sankhyam, Meemamsai etc., which do not promote devotion to God, would have spread far and wide. If they had spread like that, who would have celebrated Sivarathri, Sri Ram Navami etc?  All such holy events would have been razed by the non-religious beliefs.  More or less, only in such circumstances when
observing the other holy events was a big struggle, this holy event of Acharya’s birth had taken place.  And helped in re-establishing the vedic path and resurrected and re-established the other holy events.

If today, we are celebrating the auspicious occasions of Sivarathri, Sri Rama Navami, Gokulashtami etc., it is because of the occurrence of the holy event of the birth of our Acharya.  If this one birth had not been there, there would not have been any other.  Because this birth event helped in protecting the other holy events, Sri Sankara’s birth is considered the most holy or auspicious event among all holy events.

I mentioned that the word “Jaya” is aptly associated with Acharya and chanted all over the world, as Jaya Jaya Sankara.  The specialty of this Jayanthi (Adi Sankara’s birth event) should also be included in that.



Categories: Deivathin Kural

Tags: ,

5 replies

  1. Om Nama Shivaaya! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam!

  2. Timely post Sai!!! Thanks

  3. भव ! शंकर देसिक ! में शरणम !!! (பவ ! சங்கர தேசிக !! மே சரணம் !!!) Bhava ! Sankara desika ! Me saranam !!!

  4. இந்த ஒரு ஜயந்தி இல்லையென்றால் எந்த ஜயந்தியுமே இல்லாமல் போயிருந்திருக்கும்! ஜயந்திகளையெல்லாம் ரக்ஷித்துக் கொடுத்த ஜயந்தியாக இருப்பது ஸ்ரீ சங்கர ஜயந்தியே என்பதால்தான் அதைப் புண்ய காலங்கள் அத்தனையிலும் விசேஷமானது என்றது!

    Really very much true.

Leave a Reply to Mahesh GCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading