என் தகப்பனார் சிவ சுப்ரமண்ய சாஸ்த்ரிகள் காஞ்சி பச்சையப்பன் கல்லூரியில் ஹிந்தி விரிவுரையாளராகப் பணி செய்து வந்தார். ஹிந்தி அவர் வயிற்றுப்பாட்டுக்கு உதவிற்று. ஆனால் சிறு வயதில் அவர் சம்ஸ்க்ருதம் பயின்று வேத அத்யயனமும் செய்திருந்தார். நல்ல தேர்ச்சி பெற்று தங்க மெடலும் பெற்றிருந்தார்.
சம்ஸ்க்ருதம் படித்தவர்களுக்குப் பெரியவாளிடம் சலுகைகள் உண்டு.
1956ல் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஸ்ரீ மடம் சென்று கூட்டமில்லாத ஓர் நாளில் தன் வேதப் புலமையைக் காட்ட எண்ணி பெரியவா அங்கீகாரம் பெற நினைத்தார். கூட்டமும் இல்லை அருமையான தருணம்!
”அஹம் சுப்ரமண்ய சாஸ்த்ரி” எனத் தொடங்கி சம்ஸ்க்ருதத்தில் உரையாற்றத் தொடங்கினார்.
பெரியவாளின் கூர்மையான பார்வை அவரைத் தடை செய்வதாயிருந்தது. ஆம்..தடைதான்..’சிகை இல்லாமல் சம்ஸ்க்ருதத்தில் பேச வேண்டாம் ‘என கடுமையான உத்தரவு!
‘க்ராப்புத் தலைக்குள் சம்ஸ்க்ருதம் வாடிப்போகுமா?’ இந்த எண்ணத்திலும் இளவயது வீம்பிலும் கோபம்!
‘பெரியவாளுக்கு இவ்வளவு கோபமாகப் பேசத் தெரியுமா?”
இனி இங்கு வரவே வேண்டாம்…வந்தால்தானே வம்பு….மடத்துக்குத் தான் போகணுமா? கோவிலுக்குப் போனால் போறது… இப்படி சில சிந்தனைகள். அதுக்கப்பறம் மடத்துப் பக்கம் தலை வைத்துப்
படுப்பதில்லை!
அம்மாவால் வைராக்யமாக இருக்க முடியவில்லை..அவ்வப்போது பெரியவா தரிசனத்துக்குப் போய்
விடுவாள்.’காஞ்சியில் இருப்பதே பெரியவா தரிசனத்துத்தானே ‘என்பாள். ஒருதடவை அம்மாவுக்குப் ப்ரசாதம்
கொடுக்கும்போது’ அவனுக்கு என்மேல் கோபம் நான் அவனை சிகை வெச்சுக்கச் சொன்னது..அவனுக்குப் பிடிக்கல்லை..வீம்பு வேண்டாம் தரிசனத்துக்கு வரச் சொல்’என்றார்.
அப்புறம் அப்பாவும் மடத்துக்குப் போகத் தொடங்கினார். ஆனால் ஒவ்வௌ முறையும் சிகை விஷயம் நினைவுக்கு வராமல் இருந்ததில்லை. ஒரு நாள் பெரியவாளே சொல்லிட்டார்..
‘உனக்கு எப்போ சௌகர்யமோ வெச்சுக்கோ சங்கடப்பட்டுண்டே இருக்காதே’ ந்னு.
அப்பாவும் சமாதனமடைந்தார்.
பெரியவாளுக்கு ட்ரிக்கெல்லாம் நன்னா தெரியும்!
வேற விதமா மடக்கிப் போட்டார்! நேர கேட்டால்தானே கோவம்..சொப்பனத்தில் வந்தால்!
கனவில் வந்து பேச ஆரம்பித்தா பெரியவா! அப்பா என்ன செய்வார் பாவம்? வர வர கனவில் மிரட்டல் வேறு அதிகமானது.
‘நான் உயிரோடு இருக்கும்போது சிகை வெச்சுக்க மாட்டதானே? உன்னை சிகையோடு பார்க்கக்
கூடாதுன்னு பிடிவாதம் ..அப்படித்தானே…’
அப்பா பயந்து வெல வெலத்துவிட்டார்.
கனவு தோன்ரிய மறு நாள் க்ஷவரம் செய்து கொள்ள வேண்டிய நாள். அப்போவெல்லாம் நாள் பார்த்து,பித்ரு தினம் இல்லாத நாட்கள், விரதமில்லாத நாட்களில்தான் க்ஷவரம்!
இப்போ மாதிரி கண்ட நாட்களில் கிடையாது சிகை வைத்துக் கொண்டாகி விட்டது! கல்லூரி
போகவேண்டும்..வெட்கம் எப்படி எல்லாரையும் எதிர்கொள்வது?
குனிந்த தலை நிமிராமல் கல்லூரி பயணம்!
‘என்னையா ..என்ன ..ஆச்சு..?
‘பெரியவா ஆஜ்ஞை’
கையெடுத்துக் கும்பிடு! கேலிக்கூத்தை எதிர்பார்த்தவருக்கு ஏக மரியாதை!
‘சிகை வெச்சுண்டால் இவ்வளவு மரியாதை கிடைக்குமானால்..எப்போவே வெச்சுண்டு
இருப்பேனே’ அப்பாவின் கூற்று இது!
இது எப்படி இருக்கு?
ஜய ஜய சங்கரா…..
சொல்பவர் ஸ்ரீமதி மைதிலி,காஞ்சி.
Categories: Devotee Experiences
உனக்கு எப்போ சௌகர்யமோ வெச்சுக்கோ சங்கடப்பட்டுண்டே இருக்காதே’ ந்னு.
Our Periyava is that much Down to earth, So compromising towards Shri Sastrigal in order to make HIS wish to happen. That is why we all fall towards Periyava.
பெரிவா புல்லரிக்க வெச்சிட்டா……..யாருக்கு எந்த பாஷை புரியுமோ, அந்த பாஷையில் பேசறதுதான் அவருடைய டெக்னிக்!