த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்


Maha Periyaava

Chennai: 14/05/2011: The Hindu: Friday Page: Eyes that reflects Compassion of the Heart – Sri Mahaswami During the Vijaya Yatra – 1983.

 

கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

உரிய காலம் வந்தபோதிலும் ஸ்ரீசரணர் அன்று ஸ்நானம் – பூஜைகளுக்குச் செல்லாமல் சிந்தனை
வசப்பட்டிருக்கிறார். சிந்தனை கலைந்ததும் ஸ்ரீமடத்து மானேஜரை அழைத்து எங்கோ ஆயிரம் மைல் கடந்து
உள்ள ஒரு சாமானிய பக்தருடைய முகவரியைத் தேடிப் பிடித்து எடுத்து வரச் செய்கிறார்.

ஒரு குறிப்பிட்ட தொகை சொல்லி அதை உடனே அந்த பக்தருக்குத் தந்தி மணி ஆர்டர் செய்யச்
சொல்கிறார். அதற்கதிகமாக எந்த விவரமும் தரவில்லை.

ஒன்றும் புரியாமலே அவரது உத்தரவை மடத்து மேலாளர் நிறைவேற்றுகிறார்.

நாலைந்து நாளுக்குப் பின் அந்த பக்தரிடமிருந்து நன்றிக் கண்ணீராலேயே எழுதிய மடல் வருகிறது.

அன்று அவர் தமது தந்தையின் சடலத்தைப் போட்டுக் கொண்டு உத்தரகிரியைக்குப் பொருள்
இல்லாமல் தவித்து உட்கார்ந்திருந்தாராம்.

ஸ்ரீசரணரின் சந்திரமௌளீச்வர பூஜைக்கு நீண்ட காலம் நிதமும் குடலை குடலையாக வில்வம்
கொண்டு வந்து கொடுத்து, ‘பில்வம் வைத்தா’ என்றே அவரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அந்தத் தந்தை.

அப்பாவிடம் அன்பு சொரிந்த அப்பெரியவாளே கதி என்று த்ரௌபதி த்வாரகாவாஸனிடம் சரணாகதி
செய்தது போல் அன்று அவரது புத்திரர் செய்தாராம்!

நம்பவொண்ணாத அநுக்ரஹமாகத் தந்தி மணியார்டரும் வந்து குதித்ததாம். இவர் தந்தியில்லா
மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு விடையாக!Categories: Devotee Experiences

6 replies

  1. JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA…KARUNA MOORTHI…NIN THIRUVADIGAL POTRI..

  2. Periyava saranam

  3. Karunasagaran Mahaperiyava
    Gayathri Rajagopal

  4. Karunamurthy our Periyava. Help on time due to total surrender of that devote.

  5. En chinthaiyil vaazhum Chithar!

  6. KaruNamurthy Maha Periyava never has let down His Devotee! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: