4. Gems from Deivathin Kural-Bhakthi-Karma and Bhakthi

20110924-094753.jpg

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Is Karma alone enough or does one need Bhakthi too? Can we forego Karma and do Bhakthi alone? Sri Periyava gives us an definitive answer. Thanks to Smt. Prabha Viswanathan, our sathsang seva member for the translation. Ram Ram

ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் விதேக முக்தி அடையப் போகிறார் என்று தெரிந்தபோது சாமானிய சிஷ்யர்களெல்லாம் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ‘வேதாந்த பரமான உபதேசங்கள் அளித்தீர்கள். அதில் பல விஷயங்கள் எங்களுக்குப் புரியவே இல்லை. கடைத்தேறுவதற்கு “சுலபமான வழி ஒன்று சொல்ல வேண்டும்” என்று ஆசாரியாளிடம் பிரார்த்தித்துகொண்டார்கள். ஆசாரியாள் ‘ஸோபான பஞ்சகம்’ என்று ஐந்து சுலோகங்களை உபதேசித்தார்கள்.

“வேதம் வகுத்த வழியைத் தினந்தோறும் பின்பற்ற வேண்டும். வேதம் கூறுகிறபடி கர்மங்களைத் தவறாமல் அநுஷ்டானம் பண்ணுங்கள். இதையே ஈசுவர பூஜையாக நினைத்து பண்ணுங்கள். ஆசை வாய்ப்பட்டு நம் மனசுக்குப் பிடிக்கிற காரியங்களைச் செய்வது என்பதில்லாமல், லோக உபகாரமாக அவரவர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கர்மாவைச் செய்யுங்கள்” என்ற கருத்துடன் தொடங்குகிறது ‘ஸோபான பஞ்சகம்’.

வேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக ‘அநுஷ்டிப்பவர்கள்’ சிலர் இன்னமும் இருக்கிறார்கள். பூஜை, உத்ஸவம், பஜனை இவற்றை நன்றாகச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கர்ம அநுஷ்டானம் செய்வோரைப் பார்த்து, “இத்தனை கர்மா செய்தும் என்ன பிரயோஜனம்? கொஞ்சமாவது மனசு உருகி பக்தி செய்யாவிட்டால் என்ன பயன்? என்று தாழ்வாக எண்ணுகிறார்கள். கர்ம மார்க்கக்காரர்களோ இவர்களைப் பார்த்து, “செய்ய வேண்டிய கர்மத்தில் சிரத்தையில்லை; ஆடம்பரமாக மணி அடித்துக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தால் போதுமா?” என்று நினைக்கிறார்கள்.

ஆசாரியாள் ஸோபான பஞ்சகத்தில் சொல்லியிருப்பதைப் பார்த்தால் கர்மத்தையே ஈஸ்வர பூஜையாக செய்ய வேண்டும் என்று தெரிகிறது. கர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈஸ்வரனையும் மறக்காமலிருக்க வேண்டும். கர்மங்களை ஈஸ்வரார்ப்பணமாக செய்ய வேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே, அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈஸ்வரனிடம் வைத்து அவனுக்குக் கர்ம பலனை அர்ப்பணம் செய்வது சாதாரண ஜனங்களால் லேசில் முடிகிற காரியமில்லை. சாமானிய ஜீவர்கள் ஒரு கர்மம் என்று இறங்கி விட்டால், அப்போது பகவத் ஸ்மரணம் குறைந்துதான் போகும். ஆகவே தனித்தனியாகக் கர்மாவும் வேண்டும். பக்தியும் வேண்டும். நாளடைவில் கர்மத்தையே பூஜையாகச் செய்கிற உத்தம நிலை சித்திக்கும்; அல்லது பூஜையே ஒருத்தனுடைய கர்மம் முழுவதுமாக ஆனாலும் ஆகலாம்; அல்லது பூஜை, கர்மம் எல்லாம் நின்றுபோய் பிரம்மானந்தம் என்கிற சமாதி நிலை ஏற்படலாம்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆரம்ப நிலையைப் பார்த்தால், கர்மம் செய்கிறவனிடம் பகவான் பிரீதி அடைவானா? பூஜை செய்கிறவனிடம் பிரீதி அடைவானா? ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வேலை எதுவும் செய்யாமல் அந்தப் பிரபுவை ஸ்தோத்திரம் செய்துகொண்டே இருக்கிறான். இன்னொருவன் வெகு நேர்த்தியாக வேலை செய்கிறான். என்றாலும் அந்தப் பிரபுவிடம் துளிக்கூட அன்போ பாசமோ காட்டாமல் வேலையை மட்டும் கவனிக்கிறான். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று ஸ்தோத்திரம் பண்ணுகிறவன்தான் பிரபுவின் பிரீதிக்குப் பாத்திரமாக முடியும் என்று தோன்றும். பிரபு அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால் அவன் புத்திசாலியாக இருந்தால் கண்ணில் படாமல் வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான். ஈஸ்வரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிடமாட்டான். தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். ஆனாலும் அந்தக் கர்ம மார்க்கக்காரன் மனஸில் அன்பே இல்லாமல், ‘வெட்டு வெட்டு’ என்று வேலை மட்டும் செய்தால் அவன் பகவத் பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது. ‘இது பகவான் செய்த லோகம். சர்வ லோக ராஜாவான பகவானின் குடிமக்களே ஜனங்கள் அத்தனை பேரும். நாமும் அவனுடைய பிரஜை. எனவே இவர்களெல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள். நம் சகோதரர்கள். ராஜாவாக இருக்கிறதோடு அவனே நம் அம்மையும் அப்பனும். நாம் அத்தனை பேரும் அவனுடைய குழந்தைகள். ஆதலினால் ஒருத்தருக்கொருத்தர் சகோதரர்கள். இத்தனை குழந்தைகளும் இருக்கிற ஜனசமூகக் குடும்பம் ஒற்றுமையாக, சௌஜன்யமாக வாழவேண்டுமென்றே நமக்கு வேததர்மம் வெவ்வேறு காரியங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றை நம்முடைய சொந்த ஆசைகள், லாபங்களை நினைக்காமல் செய்து ‘பகவானின் குடும்பம் ஒழுங்காக நடக்கச் செய்வதே நம் கடமை’ என்ற உணர்ச்சி உண்டானால்தான் நாம் செய்கிற கர்மம் துளிக்கூடக் குறைவு, ஒழுங்கீனம் இல்லாமல் சரியாக இருக்கும். இந்த உணர்ச்சி வருகிறபோது அதிலேயே ஈஸ்வர பக்தியும் உட்புகுந்து நிற்கும். இப்படி பக்தி உணர்வோடு கர்மம் செய்தாலே பகவத் கிருபையைப் பூரணமாகக் கிரகிக்க முடியும். கர்மத்தையே பகவானின் பூஜையாகச் செய்கிற நிலை வருவதற்கு ஆரம்பமாகத் தனியாகப் பூஜை, பஜனை எல்லாம் செய்து பகவானை ஸ்மரிக்க வேண்டியதும் அவசியம்.

Karma and Bhakthi

When the Shishyas came to know that Sri Adi Sankara Bhagavadhpadha is going to attain Vidheka mukthi, they surrounded him and prayed to the Aachaarya as follows ‘Aachaarya – You have given us various teachings on the Vedanthas – But we couldn’t understand many of the nuances of the teachings. Please advise us an easy way to attain salvation”. Aachaarya preached them 5 slokas collectively called as “Sopana Panchakam”. Sopana Panchakam starts with the following instructions – “Follow the Vedic way daily; Perform your Karmic activities as given in Veda, without fail; Think of it as the Lord’s worship; Rather than doing an act out of desire of heart, perform your Karma of helping others”.

There are still some people who follow the Vedic way of performing their daily karmas. There are also people who perform Poojas, Festivals, and Bhajans with utmost sincerity. Such people who are in Bhakthi Marga, consider those who are in their Karma Marga, inferior to them, by thinking that ‘What is the use of performing all this Karma when there you can’t even do some heartfelt sincere Bhakthi?” People who are in Karma Marga think as “What is the use of ringing all those Holy Bells and doing Bhajans when you don’t have any sincerity in your own Karmic activity?”

But if you read Achaarya’s Sopana Panchakam, it is mentioned that you should consider performing Karmic activities equivalent to Lord’s worship. You should do your Karma. But at the same time you should also remember the Lord. You should perform your Karma as a dedication to the Lord. This is the highest level of Bhakthi. Being detached while performing the Karma and thinking of the Lord and dedicating the fruits of the activities to Him is something which not everyone is capable of. When ordinary people get into their day to day activities, they forget to remember/chant the Lord’s name. So it is important in the initial stages to ensure that both Karma and Bhakthi are done separately without fail. As time progresses both Karma and Bhakthi will merge and a high state of doing Karmic Bhakthi can be attained. Or doing daily worship of the Lord can become one’s Karma. Or everything can stop and one can attain the samadhi state of “Bhramanandam”.

Let’s keep this state aside. When we look at the Initial stage, a question arises as ‘Will the Lord be happy with the one who does his Karma? Or with the one who does Bhakthi? Let’s take a simile to analyze this. A Master has two servants. One servant doesn’t do any work other than praising his Master whereas the other one is an efficient worker and does his work elegantly. But he doesn’t show any love or affection towards his Master and has eyes only for his own work. For a third person who observes these three people, it is quite common to come to a conclusion that the Master will like only the servant who praises him always. If the Master is a fool he will also do the same. But if he is intelligent enough, he will like the servant who concentrates only on his work. The Great Lord who is the most intelligent of all won’t just bless a person only because the person is worshiping him and praising him. The Lord will show his affection only on those who do the Karma assigned to them. But if the person is totally concentrated only on his job without any love and affection in his mind, then such a person cannot enjoy the Lord’s love and affection completely. This big world was created by the Lord himself. We all are normal citizens under the Lord who is the King of this Universe. We are all connected as one under him. Along with being the King, the Lord is also our father and mother. We all are his Children. So we are all brothers and sisters. We all have been assigned our Karma by the Veda Dharma to enable us to live in unity and peace. We should not allow our personal aspirations and desires to intervene in our Karmic activities. Rather we should consider that ‘Our duty is to ensure the smooth functioning of the Lord’s family’. This will help us in executing our Karma efficiently and effectively. When this feeling comes in us, it will also bring in Bhakthi towards the Lord. When we mix both Bhakthi and Karma we can experience the complete blessings of Lord. To attain this level, we should ensure that during the initial stages we remember Lord by consciously performing Lord’s worship and Bhajans.



Categories: Deivathin Kural

Tags: ,

4 replies

  1. இதைவிட எளிமையாக கர்மயோகத்தை விவரிக்க முடியாது. ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர.

  2. கேட்க்கும் பொது இனிமையாகவும் அப்படியே பின்பற்றவேண்டும் போலவும் இருக்கு.. ஒரு சின்ன சபலம் துளிர்த்தவுடன் இது எங்கே போகிறதோ தெரியவில்லை..அப்படியே ஒளிஞ்சிண்டுட்றது.. அந்த சபலத்துக்கு அடமையாகி அதுல விழுந்து அனுபவிச்சி அசிங்கப்பட்டு வெளிய வந்தவுடன் திரும்பவும் இது வெளிய வந்து ஜம்னு சிரிக்கிறது.. ஐயா மாட்டிகிட்ட பதியா நு.. இது தொடர்கதியகத்தான் இருக்கிறது.. மகாதேவா

  3. yes. I pray god that this Nail should go deep into my head.

  4. கரமானுஷ்டானம் தான் முக்கியம் என்பதை மற்றொரு முறை ஆணித்தரமாக கூறிவிட்டார் மஹா பெரிவா. பாஹிமாம் பாஹிமாம்.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading