சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா? ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?

 

Thanks Sri Varagooran mama for these fantastic incidents….
Periyavas_Kamakshi_Poster
சொன்னவர்-D.ஜானகிராமையா.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
 தட்டச்சு-வரகூரான் நாராயணன்
நான் கோவில் பொறுப்பு ஏற்றபோது, (காமாக்ஷி கோவில் ஸ்ரீகார்யம்) வருமானமே இல்லை.உண்டியல்
வைத்தால், ஸ்தானீகர்களுக்குப் பாதித் தொகை போயிடும்.அதனாலே, நித்யபூஜா தர்ம உண்டியல்-என்று வைத்தோம். வருஷத்துக்கு ஒரு தடவை உண்டியலைத் திறப்போம். முப்பதாயிரம், நாப்பதாயிரம் தான்
இருக்கும். மளிகைக்கடை, பூக்கடைக்கு அப்போ தான் பாக்கிப் பணம் பட்டுவாடா செய்வோம்.
அதுவரை அவர்களும் பொறுமையா இருப்பா.
ஒரு சமயம் பெரியவாகிட்ட,  “கோவில் செலவுக்குப் பணம் போறல்லையே? நுழைவுக் கட்டணம் வைக்கட்டுமா?”ன்னு கேட்டேன். பெரியவாளுக்குக் கோபமான கோபம்!
காசு தொடாத சந்யாஸி, அம்பாள் தரிசனத்துக்கு வந்தா, பணத்துக்கு எங்கே போவார்?
“சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா? ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?.. நியாயமேயில்லை. ‘என்ட்ரன்ஸ் கட்டணம் வாங்கக் கூடாது’ என்று கண்டிப்பா சொல்லிட்டா.
காமாக்ஷிக்கு லலிதா ஸஹஸ்ரநாம தங்கக் காசுமாலை இருக்கு. பெரியவா பண்ணிப் போட்டா.
எப்படிப் பண்ணினா, தெரியுமோ? ஒரு விளம்பரம் கிடையாது. வாய் வார்த்தையா ஒவ்வொருத்தரா
கேட்டுக் கேட்டே, பண்ணினா!
“ஜானகிராமா, காசுமாலை ரொம்பக் கனமா இருக்குமே? காமாக்ஷிக்குத் தோளில் போட்டா, வலிக்கும் இல்லையா? அதனாலே, திருவாசியில் கொக்கிபோட்டு மாட்டும்படி ஏற்பாடு செய்..”
சிலா மூர்த்தமாக இருந்து அருள்பாலிக்கும் காமாக்ஷிக்குக் கனக்கும்-என்று, பெரியவாளின் மிருதுவான உள்ளம் கவலைப்பட்டது. சாட்சாத் அம்பாளாகவே, மூர்த்தத்தைத் தரிசித்தவர் தானே, ஸ்ரீசரணர்கள்.
இதைக் கேளுங்கோ.இதே மாதிரி இன்னொரு சம்பவம். சின்னக் காஞ்சிபுரம் ஆனைக்கட்டித் தெரு மடத்தில்
இருந்தபோது, பெரியவாளுக்குக் கனகாபிஷேகம் நடந்தது. அந்தத் தங்கத்தைக் கொண்டு, காமாக்ஷியின்
தாமரைத் திருவடிகளுக்கு ஸ்வர்ண கவசம், மற்றும் ஆதிசங்கரர் மூர்த்தத்துக்குக் கவசம் செய்ய உத்திரவாயிற்று.
பொதுவாக, தங்கக் கவசம் என்றால், செம்பினால் கவசம் அளவாகச் செய்து, அதன்மேல் தங்கரேக்குப் பதிப்பார்கள் – பக்தர்கள் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக. ஆனால்,மகா ஸ்வாமிகள் என்ன செய்தார்?
“ஜானகிராமா,ஆசார்யாள் மேனியிலே ஸ்வர்ணம் படணும். அதனால் செப்புக் கவசத்துக்கு உட்புறத்திலேயும்
தங்கரேக்கு பதிக்கச் சொல்லு.
“ஆம் அத்தனை குருபக்தி!
காமாக்ஷி கோவில் ஆதிசங்கரர் சிலாமூர்த்த  ஸவர்ண கவசம்,பெரியவா உத்திரவுப்படியே தான் செய்யப்பட்டது.உள்ளும் புறமும் ஸ்வர்ணம்!


Categories: Devotee Experiences

Tags:

5 replies

  1. Today, except in Kerala, Dharisanam in big and famous temples is impossible WITHOUT MONEY.என்ன ஒரு அவலமான நிலை? இதுதான் பெரியவாளுக்கு செய்யும் கைங்கர்யம் ! மனுஷ ஜன்மனம் எப்படி உருப்படும்?

  2. swarna kamakshi swarna bhagawath pathal swarna periyava , en manathai swarnam akki tharuvai em periyava anuthinamum nan vummai smarithida en manathinai swarnamayamai akkividappa,

  3. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  4. Namaste, can someone please translate this? Many thanks

  5. “ஜானகிராமா, காசுமாலை ரொம்பக் கனமா இருக்குமே? காமாக்ஷிக்குத் தோளில் போட்டா, வலிக்கும் இல்லையா? அதனாலே, திருவாசியில் கொக்கிபோட்டு மாட்டும்படி ஏற்பாடு செய்..” – நாம்ப இப்படி நினைப்போமா? பெரிவாக்கு மட்டுமே இப்படி நினைக்க தோனும், ஏன்னா, அவர் ஸ்வயம் தெய்வமாச்சே!

Leave a Reply

%d bloggers like this: