நீ என்னைக் கிளப்பி விட்டு நீ மாத்திரம் இருக்கப்போகிறாயா

Recent incident from Sri Ganesa Sarma’s life – shared by Smt Saraswathi Thiyagarajan…I shared Mylai Anusham’s jayanthi invitation this morning. Please attend and be part of this blessed team…

Ganesha Sharma

 

பெரியவாள் ஏகாந்தத்தில் இருக்கும் ஓர் சமயம் அவரிடமிருந்து ருத்ராக்ஷம்பெறும் ஆவலுடன் அவரை நெருங்கி என் விஜ்ஞாபனத்தை முன் வைத்தேன்.

பெரியவா சற்று என்னை உற்று நோக்கினார்.பின் வேதபுரி மாமாவிடம் சொல்லி ஒரு ருத்ராக்ஷ மாலையைக் கொண்டு வருமாறு பணித்தார். அவரும் பணிவுடன் அவர் முன் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.

என்னிடம் பெரியவா ஆசிகள் கூறி ப்ரசாதமாகக் கொடுக்க முன்வந்தபோது, நான் ”பெரியவா
அணிந்த ப்ரசாதமாக இருந்தால் என் பாக்யம்” என்று சொல்ல அவர் தம் கழுத்தில் அணிந்தார்.

சற்று நேரத்துக்குப் பின் ப்ரசாதத்தைப் பெற கைகளை நீட்டியபோது இல்லை என்ற பாவனையில் தர மறுத்தபோது எனக்கு மனதில் க்லேசம்’என்ன ஆயிற்று, ஏன் கொடுக்க மறுக்கிறார்கள்’ என்பதாக!

பக்கத்தில் இருந்த யதி(சன்யாசி) ஒருவரிடம் ஸ்ரீலலித சஹஸ்ர நாம புஸ்தகத்தைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவாயிற்று. அதை அவர் எடுத்து வர பெரியவாளும் அந்த யதியுமாக சேர்ந்து சஹஸ்ரனாம பாராயணம்!

இதைக் கவனித்துக் கொண்டிருந்த என்னை அருகில் அழைத்து, ‘இப்போ வா வந்து வாங்கிக்கோ’
என ப்ரசாதம் அளித்தார் கருணை வள்ளல்!

இன்றும் நான் ஒரு நாள் தவறாது ஸஹஸ்ர நாம பாராயணத்துடன் தான் பாதுகா பூஜை செய்கிறேன்.
ஏனென்றால் எனக்கு ருத்ராக்ஷத்தை கழுத்தில் அணிந்து உபதேசம் செய்ததாகவே அதைக் கருதுகிறேன்.

மயிலையில் நான் இருந்த வீட்டு சொந்தக்காரர், என்னை திடீரெனக் காலி செய்யுமாறு சொன்ன
போது திகைத்துத்தான் போனேன். ஆனால் அனுஷ பூஜை அங்கு நடக்க ஏற்பாடு செய்து இரண்டு வருஷங்களுக்கும் மேலாக கற்பகாம்பாள் சன்னிதியை வலம் வந்த பெரியவா உத்ஸவம் எக்காரணம் கொண்டும் தடைப்படாது என்ற நம்பிக்கையும் என் உள் மனதில் இருந்தது.

‘நான் உனக்காக இங்கு வந்து அனுஷ பூஜை நடத்தி வருகிறேன்..நீ என்னைக் கிளப்பி விட்டு
நீ மாத்திரம் இருக்கப்போகிறாயா’ என வாய் விட்டுப் புலம்பினேன்

தயாளு அல்லவா அவர்? எண்ணி 28 நாட்களில் எனக்கு சொந்த வீடும் மயிலையில் அமைந்ததும்
அல்லாமல், க்ரஹப்ரவேசமும் நடந்து மயிலையில் பழையபடி உத்ஸவம் தொடர்கிறது.

அந்தக் கருணா மூர்த்திக்கு கபாலி, கற்பகாம்பா சன்னிதியில் ஓர் இடம் வாங்கி கோவில் அமைக்க
பேராவல் எனக்கு. மஹா அனுஷம் நடத்த ஹால் பிடித்து, வாடகை செலுத்தி, மற்ற செலவெல்லாம்
செய்வதற்கு பதில் அவர் இடத்திலேயே (கோவிலிலேயே) நடஹ்த உத்தேசம். ஊர் சேர்ந்து வடம் பிடித்தால்தான் எந்தத் தேரும் நகரும்!

நாம் யாவரும் ஒருங்கிணைந்து இந்த மாபெரும் கைனகர்யத்தில் ஈடுபட வேண்டும். அதற்கு அவர்
அனுக்ரஹமும் வேண்டும். ப்ரார்த்திப்போமாக!

இதை என்னிடம் பகர்ந்தவர் திரு கணேச சர்மா அவர்கள். பெரியவாளிடமும் , ப்ரதோஷம்
மாமாவிடமும் நெருங்கிப் பழகி அனுக்ரஹம் அடைந்த பாக்கியசாலி!

சென்ற சனிக்கிழமை எனக்கு ஒரு சுதினம்! அவர் வாயால் என்னிடம் மொழிந்ததைக் கேட்கும் பாக்கியம்!

நாம் யாவரும் சேர்ந்து ப்ரார்த்தித்து இந்தக் காரியம் செவ்வனே நடக்க ப்ரார்த்திப்போமாக!

மே மாதம் நடக்கும் பெரியவா மஹா ஜயந்தியும் பெரிய அளவில் நடத்த உத்தேசம்.எல்லாம் அவர் அருளால் நடக்கும்!

ஜய ஜய சங்கரா…..Categories: Devotee Experiences

2 replies

  1. Hara Hara Shankara, Jaya Jaya shankara!

  2. jaya jaya sankara, hara hara sankara…maha swamigal will certainly bless for this good initiative.

Leave a Reply

%d bloggers like this: