பெரியவாளே சுவாஸினி பூஜை செய்தார்!

Article authored by Smt Saraswathi Thyagarajan mami. The last two paras are just outstanding in terms of how one should face our difficulties.

Saraswathi_Paati

சிறிய வயது முதல் எங்களை வளர்த்து ஆளாக்கிய தெய்வீகத்தில் ஈடுபடுத்திய என் தாய் வழிப் பாட்டிக்கு
சமர்ப்பணம்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்க்கையே வாழ்ந்து பிறருக்கு உதவி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு தெய்வத்திடம் அதீதமான ஈடுபாடு கொண்ட பாட்டி ! சதா அம்பாளையே மனதில் த்யானித்து, பல பாக்களைப் பண்ணுடன் இசைத்த உத்தமி! ஆரம்ப கால கட்டத்தில் வினாயகர், முருகர், க்ருஷ்ணர், ராமர் என பல தெய்வங்களின் பாக்கள் தன்னறியாமல் நாவில் வந்தாலும், நாளடைவில் அம்பாளையே நினைந்து உருகிப் பாடிய பாடல்கள் ஆயிர்க் கணக்கானவை!

அம்பாளே நேரில் வாரஹி ரூபமாக வந்து ஷோடச மந்த்ரம் உபதேசிக்கும் பாக்யம் பெற்றவள். பின் பூஜ்யஸ்ரீ சந்தானந்த ஸ்வாமிகளிடம் ப்ரத்யேகமாக உபதேசம் பெற்றாள்.

வாழ்க்கை எளிய முறையாக இருப்பினும், பூஜைக்கு எந்த குந்தகமும் வராமல் அம்பாளே பல விதத்தில்
உதவி செய்தாள் பல மனிதர்கள் ரூபமாக! வெள்ளியன்று வீட்டில் பூஜா த்ரவ்யங்கள் அக்கம்பக்கத்து மனிதர்களிடம் இருந்து குவியும்! இதனை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்.

ஆனால் அப்போதெல்லாம் எனக்கு அதன் அருமை பெருமை புரியாத இளம் வயது.

இந்த அகத்தில் வைத்துத்தான் முதல் முறையாக என்னை தேவி ஆட்கொண்டாள்! அதன் அருமையும் எனக்கு அப்போது தெரியவில்லை!

பாட்டியுடன் தேவி நின்று பேசுவதாக அப்போதெல்லாம் சொல்வார்கள். அதைப்பற்றியும் முக்கியத்துவம்
கொடுத்ததில்லை.

யார் வீட்டிலாவது கஷ்டம் என்றால் பாட்டியிடம்டந்தான் வந்து சொல்வார்கள். அவர்களுக்கு ஷோடசி மந்த்ரம் ஜபித்து ஒரு டப்பாவில் அதன் சக்தியை அடைத்துக் கொடுப்பார்கள் அருமைப் பாட்டி.
அவர்கள் கஷ்டமெல்லாம் விலகிவிடுவதாகச் சொல்வார்கள்.

ப்ரபல இன்றைய வாய்ப் பாட்டு வித்வான் ஒருவரின் பாட்டி (பெயர் வெளியிட விரும்பவில்லை) வீட்டில் எனது பாட்டி அளித்த அந்த டப்பா இன்றளவும் இருக்கிறது. அவர்கள் கஷ்டமெல்லாம் விலகி நல்ல ஸ்திதியில் இருப்பதாக அவர்கள் வாய்மூலமாகக் கேட்டபோது சந்தோஷமாக இருந்தது.

ஆனால் தன் வாழ்வில் எந்த சுகமும் அடையவில்லை அவர்கள். கைவல்ய பதமெனும் முக்தி அடைய ஜீவனை தங்கத்தை ஸ்புடம் போடுவது போல் புரட்டி எடுத்தது வாழ்க்கைச் சக்கரம். ஏன்? நம் கர்ம வினைகளி அனுபவித்து இங்கேயே முடித்தால்தான் நமக்கு முக்தி நிலை வாய்க்கும்!

பெரியவாளிடம் பரம பக்தி பூண்டவர். பெரியவா அவருக்கு சுவாஸினி பூஜா செய்திருக்கிறார். அப்படிப்பட்ட பாக்யசாலி! அவருக்கு வாழ்வில் ஓர் துக்கம் ஏற்பட்டு அதற்குண்டான கர்மாக்களை செய்தபின், திடீரென தான் செய்தது சரிதானா என பெரியவாளிடம் போய் சந்தேகம் கேட்டார்.

அதற்கு பெரியவா ”ஏன் உனக்குத் தெரியாதா ஜகதம்..ஏன் என்னிடம் கேட்கிறாய்” என்று பதில் சொன்னார்.

”என் சந்தேகம் சரிதான என உறுதிப் படுத்திக் கொள்ளவே கேட்டேன் பெரியவா” என பதில் சொன்னார்.

”நீ நினைத்ததுதான் சரி..மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார் ”என பதில் சொல்லி அனுப்பினார் . அத்தகைய ஞானம் உடையவள்.

கடைசி காலத்தில் தான் முக்தி அடைவதைச் சொல்லியே மறைந்தாள்! தைப் பூசம்..கண்ணை மூடிப் படுத்திருந்தவள், திடீரென என் மாமாவிடம்”சுப்ரமண்யஸ்வாமி வந்துட்டார்..நகர்ந்து வழி விடு.. என சொல்லிப் பின் ஸ்வாமியிடம் நேராகப் பேச ஆரம்பித்த அதிசயத்தை என்னவென்று சொல்வது?

”முருகா..இந்த மாதிரி வேகமாக கைப் பிடித்து அழைத்தால் நான் வயதானவள்..எப்படி உன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியும்..மலை ஏற முடியும்..மெதுவாகக் கூட்டிச் செல்” என்று கூறியபடி
கைவல்ய பதம் அடைந்தாள்!

இன்று நம்மில் பலர் நமக்குக் கஷ்டம் வந்து விட்டது உலகில் யாருக்கும் இல்லாத அளவுக்கு என்று புலம்புகிறோம். ஆனால் ஞானிகள் பலர் கஷ்டங்களையும் துக்கங்களையும் அனுபவித்தே வாழ்ந்திருக்கிறார்கள்.

நம்மை விட கஷ்டப்படுகிறவர்களைப் பார்த்து நம் கஷ்டம் பூஜ்யம் என நினைத்து வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். கஷ்டத்தைக் கொடுப்பதே நம்மை ஸ்புடம் போட்டு 24 காரட்
தங்கமாக மாற்றவே!

ஜய ஜய சங்கரா….Categories: Devotee Experiences

17 replies

 1. it would be good if somebody could translate articles into English. Everybody cannot read Tamil.

 2. Can someone please translate, it would be great.

 3. என் மாமாவும் தன் வாழ் நாட்களில் சதா அம்பாள் நாமாவையே சொல்லி ஜபித்து வந்தார். பலவித இன்னல்களை அனுபவித்தாலும், படுத்த படுக்கையில் வீழ்ந்தாலும், அவர் நாம ஜபத்தை விட்டதில்லை. கடைசி நாட்களில் தன் அந்திம காலம் நெருங்குவதை உணர்ந்து அருகில் இருந்த என் அக்கா மகனை அழைத்து தேவி வந்துவிட்டாள்! என்னை அழைத்துச் செல்ல எனக்கு வாயில் துளஸி தீர்த்தம் கொடு என்று கேட்டு, அதை அருந்தியவுடன் தலை மேல் கை கூப்பி ‘ஷோடசாக்ஷரி நான் வந்துட்டேன் ‘ என்று கூறியவாறே உயிர் நீத்தார்! மேலே சொன்ன பாட்டியின் மகன் தான் அவர்! எங்களுக்கு அம்பாள்தான் சகலமும்!

  • Namaskarangal to you for sharing the deeds and life of such an exalted soul. Their life is like a light house to people like me suffering in the samsara sagaram!

 4. டெல்லியிலிருந்து நிறைய வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீ துரைசுவாமி ஐயர் என்ற பெரியவருடன் எனக்கு குவாஹாட்டியில் பழக்கம் ஏற்ப்பட்டது. பெட்டி நிறைய ஆன்மீக புத்தகங்கள், பஞ்சாயதன பூஜை என்று பக்தி மார்கத்தில் இருந்தார். குடும்பத்தில் நிறைய ப்ராப்ளம். அதற்காக ஒருபொழுதும் அழுததில்லை. எனக்கு நிறைய புத்தகங்கள் கொடுத்துள்ளார். தேதிஊர் சுப்பிரமணிய ஐயாவாள் என்பவர் பெரிய அம்பாள் உபாசகர். ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சதசி ஸ்லோகம் இயற்றி உள்ளார் தன் கண் நோய் நீங்க பெற்றார். அவரை பற்றி துரைசுவாமி மாமா கூறும்போது அவரது கடைசி காலத்தில் “அம்பாள் வந்திருக்கிறாள். பாத்யம் கொடுப்பதற்கு சீக்கிரம் தீர்த்த பாத்திரம் கொண்டு வாடி” என்று மனைவியிடம் சொல்லி அம்பாள் அடி சேர்ந்தாராம்.

 5. Mahesh, a heartfelt thanks and also to Ramesh for quoting from Deivathin Kural.

  Regards

 6. Very beautifully written.Namaskarams to Mami.
  Periyava Sharanam

  Chithra.R

 7. ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

  The last 4 paragraphs

  ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

 8. ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam
  
  தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

  துக்க பரிகாரம்

  ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். தாது வித்தியாசத்தால் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வார். இதற்கும் மாறாக இன்னொறு ‘ஸைகலாஜிகல்’ காரணத்தை இந்நாட்களில் பிரபலமாக்கி வரும் மனோதத்வ நிபுணர் கூறுவார். மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றால் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பர். தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ பூர்வ கராம பலனாகத்தான் வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.

  வியாதிக்கு மட்டுமின்றி நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவிதக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒரே விஷயத்துக்கு இப்படிப் பல காரணங்கள் சொன்னால் நமக்குக் குழப்பமாயிருக்கிறது. நம் சுக துக்கங்களுக்கு கிரகங்களின் போக்குத்தான் காரணமா? ஜோதிஷர் சொல்கிறபடி கிரகப் பிரீதி செய்வதா? அல்லது மாந்திரீகர் சொல்கிறபடி குலதெய்வத்துக்கோ அல்லது வேறு தெய்வத்துக்கோ கிராம தேவதைக்கோ செய்த அபச்சாரம் காரணமா? அந்தத் தெய்வத்துக்கு சாந்தி பரிகாரம் செய்வதா? நோய்நொடி என்றால் வைத்தியமும் செய்யத்தானே வேண்டும்? கடைசியில் எல்லாம் கர்ம பலன் என்றால், அது தீருகிறபோதுதான் தீரும் என்று வெறுமே, இருந்துவிட வேண்டியதுதானா? இப்படியாகக் குழப்பம் ஏற்படுகிறது.

  பல காரணங்களில் எது சத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மம்தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது; மழை ஒன்றுதான் – ஆனால் அதிலிருந்தே எத்தனை விளைவுகள் உண்டாகின்றன? பூமி முழுவதும் ஈரம் உண்டாகிறது; ஈசல் உண்டாகிறது; தவளை கத்துகிறது; சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன; வேறு சில அழுகுகின்றன. இத்தனையும் ஒரே மழைக்கு அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதியிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம். இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பலவிதமான பிரச்சனைகள்! பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவுசக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள், கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ்படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause) இருந்தேயாக வேண்டும்.

  ஜகத் முழுதும் காரணம்—விளைவு, செயல்—பிரதிச் செயல் (Action and Reaction) என்ற துவந்தத்துக்குள்தான் காட்டுண்டியிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் (Physics) முழுதும் இந்த உண்மைதான் விளங்குகுகிறது. ஜடப் பிரபஞ்சம் ஜீவப் பிரபஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித வாழ்விலும் உண்டு. நம் செயலுக்கெல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அநுபவிக்கின்ற சுகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் காரணம் நாம் முன்னமே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள்தான். சில சமயங்களில் நம் சொந்த பாப புண்ணிய விளைவோடு, குறிப்பிட்ட வேறு சிலரது பாப புண்ணிய பலனும் நம்மைச் சேருவதற்கச் சொல்வதுண்டு. உதாரணமாக, குழந்தைக்கு வியாதி வந்தால், மாதா பிதாவின் பாப பலன் என்பார்கள். அவர்கள் குழந்தைக்கு ஸதா சிசுருஷை செய்வதையும், மனத்தால் அந்தக் குழந்தைக்காக அவர்கள் வேதனைப்படுவதையும் பார்க்கும்போது இதுவும் நியாயம் என்றே தெரியும். எனக்கு இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. அதாவது, நமக்கு ஒரு கெடுதல் வந்தால் அது நம் சத்துருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம்.

  பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்திதான். அந்த ஒரே ஈசுவரனுடைய ஆக்ஞைப்படிதான் உலக இயக்கம் முழுதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்மந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்மந்தமில்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான் ஸர்வேஷ்வரன்.

  ஒருவர் செய்கிற கர்மம், அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுக துக்கங்களுக்கு முதற் காரணம். இதற்கே துணைக்காரணமாக—அல்லது அடையாளமாக—கிரகசாரம், தெய்வ குற்றம், ஆரோக்கியக்குறைவு முதலியன அமைகின்றன.

  ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடைக்கிற பக்குவம் இருந்தால், எல்லாவற்றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிகாரம்; உண்மையான பரிகாரம்.

  பூர்வ கர்ம சமாச்சாரம் எப்படிப் போனாலும் இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதைவிட, புதிய சுமை சேராமல், பாபம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈசுவரனைத் துணைகொள்வதே முக்கியம்.

  பூர்வ கர்மத்தால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத்துக்கும் உண்மைப் பரிகாரம் ஈசுவர தியானம்தான். இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம்தான்; இனிமேல் துக்கத்துக்கு இடை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம் தான். துக்கம் தருவதாக இன்னொரு வஸ்துவே இல்லை என்ற அத்வைத அநுபவம் சித்திப்பதே இதன் முடிந்த முடிவான துக்க பரிகார நிலை. அங்கே துக்கமும் இல்லை; சுகமும் இல்லை; இரண்டுக்கும் ஆதாரமான சத்தியம் மட்டும் ஸ்வயம் பிரகாசமாக இருக்கும்.

  ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

  • Thanks for this; though i possess and have read all volumes of DK, reading it here, selectively, has a hard hitting impact.
   interestingly, where periyava states “அங்கே துக்கமும் இல்லை; சுகமும் இல்லை” is the definition of nirvana by budhha. unfortunately for buddha, he had no exposure to vedic texts, as he was prevented by his father against any religious exposure, or exposure to even the realities of life.
   again, thanks
   narasimhan

 9. very nice article. Just now heard Saraswathi Mami experience in you tube. So So blessed.

 10. Very elevating. Great to have Dharshan of a Great Soul and Her Divine Experiences with Maha Periyava and Lord Subramanya Swami prior to Her Moksha on auspicious Sukhra Vaaram Day! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 11. As Mahesh garu says, last two paras are really highlight of entire experience sharing.

 12. God tests and ensure that you finish your karmaphala here itself to go to the next stage.. Let us remember that this is what all religions tell. My grandson who has the bagyam of being with mettur hh for long and at the last stage was suffering very badly coughing whole night and with tears I used to watch him and even the doctors were worried (famous in U.S.!) and his consolation to us (poor child ) ” karma vai Anubavichuthan theerkanum. Nee worry panninal athu un karma. Po periava paathuppa”. And yes periava only treated him cured him. Periava only performed my daughter granddaughter marriage etc. The whole madras know that floods before floods after but high sun shine only those three days of marriage. Who manages. You think you. Neither there is you or I it’s only HE !!!!!!!!!!

  • Golden words Maama! Maha Periyava ThiruvadigaL Charanam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  • Sir your words are very true. My father used to say till his last day ” Avanavan Thooka Vendiyathai ( Karma Vinayaai) Avanavan than Thookanam. There is no short cut. My father was an Ardent Devotee of Our Paeriyavaal,Ramana Maharshikal and Bhagavaan Baba. His last words ” PARVATHI PARAMESWARAAL VANDHU VETTARKAL ” SAI RAM.

 13. JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA…TEARS IN EYES WHEN READING THIS GREAT NARRATION…MAHA BHAGYAM TO LEARN ABOUT YOUR GREAT GRANDMOTHER..I AM SURE, PAATTI WILL BLESS ALL OF US…MAHA PERIYAVA THIRUVADI POTRI…

Leave a Reply

%d