என்ன காப்பி சாப்பிட்டாச்சா?

Thanks to Sri Varagooran mama for the share…Periyava_sitting_vilvam_on_head
காஞ்சி மாமுனிவர் கேரளா மாநிலம் கொல்லங்கோடு என்ற ஊரில் முகாமிட்டிருந்த சமயம் அப்போது அங்கே வேதத்திற்கான ஆய்வு சபையை அவர் கூட்டி இருந்தார் விஷ்ணுபுரம் வேதபண்டிதர் ஒருவரும் அந்த சபைக்காக அங்கே அழைக்கப்பட்டு இருந்தார்.
மடத்தில் அன்புக் கட்டளையின்படி, காப்பி என்பது தவிர்க்கப்பட்ட பானமாக இருந்தது உடலின் நன்மைக்காகவும் மற்றும் எதோ ஒரு தெய்வ சூட்சமத்தை அறிந்ததாலோ என்னவோ மடத்து சிப்பந்திகளும் காப்பி தயரிப்பதையோ அருந்துவதயோ தடை செய்து மிகவும் கடுமையான நியமமாக மகான் ஸ்ரீமடத்தில் கடைபிடிக்கச் செய்து இருக்கிறார்.
இருந்தாலும் காப்பி பழக்கம் தவிர்க்க முடியாத ஒன்றல்லவா? தொடர்ந்து பல வருடங்களாக அந்த பானத்தை அருந்துபவர்களுக்கு குறித்த நேரத்தில் அது கிடைக்காமல் போனால் தாங்க முடியாத தாபம் ஏற்படுவதுண்டு.
இதே நிலையில் தான் விஷ்ணுபுரம் பண்டிதரும் அந்த அதிகாலையில் காப்பிக்காக ஸ்ரீமடத்தில் தவித்துக் கொண்டு இருந்தார். அப்போது யாரோ ஒரு அன்பர் அவரை மட்டும் தனியாக வெளியே அழைத்துச் சென்று இவர் கேட்காமலேயே சூடாக காப்பியைக் கொண்டு வந்து கொடுத்தார் பண்டிதருக்கு ஒரே ஆனந்தம். போனா உயிர் வந்தது போல் மகிழ்ச்சி சிறிது நேரத்தில் வேத சபை கூடியது. மகான் சபைக்கு வந்ததும் அவரை நமஸ்கரித்துவிட்டு இந்தப் பண்டிதர் அவர் அருகில் சென்றார்.
“என்ன காப்பி சாப்பிட்டாச்சா?” பெரியவா தனக்கே உரிய தெய்வீகப் புன்சிரிப்போடு கேட்டதும், ஆடிப்போய்விட்டார் பண்டிதர். யாருக்கும் தெரியாதென்று தான் செய்த காரியத்தை, மகான் தன் தவறை சுட்டிக்காட்டுவது போல் கேட்டதும் அவருக்கு மனதில் பயம் தோன்றிவிட்டது.
“வந்து வந்து எதோ கொடுத்தான்” என்று பட்டும்படாமலும் பளிச்சென்று சொல்லாமலும் குத்தற உணர்வோடு இருந்தார்
“நான் தான் உங்களுக்குச் கொடுக்கச் சொன்னேன்” என்று சித்துகொண்டே மகான் சொன்னபோது, தன் மீதுள்ள கரிசனத்தை அறிந்த அந்த முதிய பண்டிதர் ஆடித்தான் போய்விட்டார்.
மடத்தில் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. வெளியே இருந்து இங்கே வருபவர்கள் ஏன் தங்களின் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்? இதை நன்றாக அறிந்த மகான் தான் விஷ்ணுபுரம் வேதபண்டிதருக்கு, விதிவிலக்கு அளித்து இருந்தார்.
இப்படி வேண்டியதை வேண்டியவாறு எல்லோருக்கும் அருளும் மாபெரும் தெய்வமான் காஞ்சி மகானை நாம் சரணடய வேண்டாமா?


Categories: Devotee Experiences

8 replies

  1. I used to have twice or trice in a day . That too in morning only. Started to control by having only once in the morning. Will try to stop completely .

  2. Never seen this picture of Sri Periyava before.

    ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

  3. Maha Periyava KaruNaikku aLavee Kidaiyaathu! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  4. நம்ம நல்லது கெட்டது பார்த்து பார்த்து கவனிக்கிறதுல அவர் சில ஸமயத்தில பெற்ற தாயை கூடு விஞ்சிவிடுவார், என்பது அனுபவத்தவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு ரஹஸ்யம். பாஹிமாம்! பாஹிமாம்!

  5. Very great Mahan

  6. Saranagathi… He takes care of rest, however hard and tough are habits and ‘Vasana’ are…

Leave a Reply

%d